தங்கம் விலை ரூ.66,000, வெள்ளி விலை ரூ.10,000 சரிவு.. அடேங்கப்பா..!!

உலகளாவிய சந்தையில் தங்கத்தின் விலை இன்று கடந்த ஒரு வாரத்தில் இல்லாத குறைவான அளவை எட்டியது. இந்த சரிவுக்கு, அமெரிக்க டாலரின் பலமும், அமெரிக்க கருவூல பத்திரங்களின் லாபமும் முக்கிய காரணங்களாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்கம் விலை இனி தொடர்ந்து குறையுமா..? அல்லது சரிவில் இருந்து மீண்டும் உயருமா..? என்ற பல கோடி மக்களின் கேள்விக்கு முதலீட்டு சந்தை நிபுணர் பதில் அளித்துள்ளார்.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 600 ரூபாய் குறைந்து 90000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 660 ரூபாய் குறைந்து 98,180 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோவுக்கு கணக்கிட்டால் 66,000 ரூபாய் குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 528 ரூபாய் குறைந்து 78,544 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை ரூ.66,000, வெள்ளி விலை ரூ.10,000 சரிவு.. அடேங்கப்பா..!!

மே மாதத்தில் தங்கம் விலை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்ட வேளையிலும், 0.45 சதவீதம் வரையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது கவனிக்கவேண்டிய ஒன்றாக உள்ளது. இதேபோல் சர்வதேச ஸ்பாட் சந்தையில் பார்த்தால் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்றைய 3330 டாலர் அளவீட்டை ஒப்பிடுகையில் இன்று 3285 டாலர் வரையில் சரிந்துள்ளது.

மேலும் எம்சிஎக்ஸ் சந்தையை பார்க்கும் போது மாலை 5 மணியளவில் ஆகஸ்ட் மாதம் முடிய உள்ள 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் பியூச்சர்ஸ் விலை 0.40 சதவீதம் சரிந்து 96,090.00 ரூபாயாக உள்ளது. இதுவே வெள்ளி விலை பார்த்தால் 0.09 சதவீதம் குறைந்து 1 கிலோ வெள்ளி விலை 1,07,883 ரூபாயாக உள்ளது.

ரீடைல் சந்தையில் வெள்ளி விலை கிலோவுக்கு 10000 ரூபாய் குறைந்து 1,10,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 400 ரூபாய் குறைந்து 37,290 ரூபாயாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தங்கம் விலை அடுத்து எப்போது குறையும் என்ற கேள்வி தான் மக்கள் மத்தியில் முக்கியமானதாக உள்ளது.

டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள்:
டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் காப்பர் உலோகத்திற்கு 50% வரி விதிக்கப்படும் என்று அறிவித்ததோடு, மருந்து மற்றும் செமிகண்டக்டர் துறைகளுக்கு முன்பு பேசப்பட்ட வரிகளை மீண்டும் அமல்படுத்துவதாக எச்சரித்தார்.

மேலும், பிரிக்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரியை ஏற்கனவே விதிக்கப்பட்ட ரெசிப்ரோக்கல் வரிக்கு கூடுதலாக விதிக்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதோடு நிற்காத டிரம்ப் ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு ஆகஸ்ட் 1, 2025 முதல் புதிய ரெசிப்ரோக்கல் வரி உயர்வு அமலுக்கு வரும் என்று அவர் எச்சரித்தார்.

இத்தகைய வர்த்தக பதற்றங்களின் போது முதலீட்டாளர்கள் பொதுவாக தங்கத்தில் தான் முதலீடு செய்வார்கள். இதனால் தங்கம் விலை உயரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, ஆனால் தற்போதைய சூழலில் முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலர் மீதும், கருவூல பத்திரங்கள் மீதும் முதலீடு செய்தால், தங்கம் விலை தற்காலிகமாக குறையும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் தங்க விலை சரிவு:
இந்திய சந்தையில், தங்க விலை சரிவுக்கு ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது. எல்கேபி செக்யூரிட்டீஸின் துணைத் தலைவர் மற்றும் காமடிட்டி மற்றும் நாணய ஆய்வாளர் ஜதீன் திரிவேதி கூறுகையில், "ரூபாயின் மதிப்பு 0.23% உயர்ந்தது மூலம் உள்நாட்டு தங்க விலைகளை குறைத்தது" என்று தெரிவித்தார்.

இந்தியாவில் தங்கம் உற்பத்தி செய்யபடாத காரணத்தால் சர்வதேச தங்கம் விலைகளுடன் உள்ளூர் நாணய மதிப்பு இணைந்து நிர்ணயம் செய்யப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் இவ்விரண்டில் எது பாதிக்கப்பட்டாலும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும். இந்திய ரூபாய் மதிப்பு வலுபெற்றால், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலையைக் குறையும். இத்தகைய சூழ்நிலையில் ரூபாய் மதிப்பு 0.23 சதவீதம் உயர்ந்தது மூலம் தங்கம் விலை சரிந்துள்ளது.

தங்க விலையின் எதிர்காலம்:
ஜதீன் திரிவேதி தங்க விலை எப்படியிருக்கும் என்பது குறித்து பேசுகையில், உலகளாவிய சந்தையில் தங்க விலைகள் ஒரு அவுன்ஸ்-க்கு 3,330-3,350 டாலர் அளவில் இருக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் சர்வதேச சந்தையில் தங்கம் விலைக்கு 3,290 டாலர் என்பது ஒரு முக்கிய ஆதரவு நிலையாக உள்ளது. இதுவே இந்திய ரூபாய் அடிப்படையில் பார்த்தால், தங்கத்தின் எதிர்ப்பு நிலை 97,500 ரூபாயாகவும், ஆதரவு நிலை 95,500 ரூபாயாகவும் உள்ளது.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் டிரம்பின் வரி அறிவிப்புகள், தங்கத்தின் பாதுகாப்பு சொத்து அந்தஸ்தை மீண்டும் உயர்த்தலாம் என்றாலும், தற்போதைய சந்தையின் போக்கு, அமெரிக்க டாலர் மற்றும் அமெரிக்க கருவூல பத்திரங்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்திய முதலீட்டாளர்கள், இந்த விலை மாற்றங்களை உன்னிப்பாக கவனித்தால் கட்டாயம் தங்கத்தில் முதலீடு செய்து பெரும் லாபத்தை அடையலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+