ஆகஸ்ட் மாதத்தின் கடைசி தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை 20 ரூபாய் அதிகரிப்பதும், 20 ரூபாய் குறைவதும் என சிறு சிறு வித்தியாசத்திலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து 4 நாட்கள் எந்தவித மாற்றமும் இல்லாமலே விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை தங்கம் விலை சீராக இருந்தது. அதன் பிறகு 21 ரூபாய் ஏறிய தங்கம் விலை மறுநாளும் மாறாமல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த விலையில் 10 ரூபாய் குறைந்துள்ளது. இந்த பதிவில் கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை: இன்று கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து 6,695-க்கும் ஒரு சவரன் 22 கேரட் தங்கம் விலை 80 ரூபாய் குறைந்து 53,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11 ரூபாய் குறைந்து கிராமுக்கு 7,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 88 ரூபாய் குறைந்து 58,432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கத்தை வாங்குபவர்களாக இருந்தால் இன்றைய நிலவரப்படி 1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 2 ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது. 1 கிராம் 5,484 ரூபாய்க்கும், 1 சவரன் 16 ரூபாய் குறைந்து 43,872 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.92 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 92,000 ஆகவும் உள்ளது. சர்வதேச வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தே.. இந்தியாவில் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இதை பொறுத்து வெள்ளியின் விலை உயரலாம் அல்லது குறையலாம்.
பலருக்கும் தங்கம் விலை ஒரு நாளைக்கு எத்தனை முறை மாறும் என்ற பொதுவான கேள்வி இருக்கும். இது பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். முற்பகல் 11 மணி அளவில் அதன் பிறகு 3 மணிக்கு மேல் ஒரு முறையும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும். அதே நேரத்தில் வெவ்வேறு நகரங்களில் இந்த நேரமும் மாற்றமடையும். சில இடங்களில் 12 மணிக்கு மேல்.. தங்கம் விலையில் மாற்றம் ஏற்படலாம். எனவே தங்கம் விலை வெவ்வேறு நகரங்களிலும் வெவ்வேறு மாதிரியாக இருக்கலாம். இதை சரியாக தெரிந்து கொள்ள அருகில் உள்ள கடைகளுக்கு கால் செய்து கேட்டுக் கொள்ளலாம்.
தங்கம் விலை புவிசார் அரசியல் பதட்டங்கள், மத்திய மாநில அரசு வரி, தங்க நகைகளுக்கான டிமாண்ட் போன்ற பல்வேறு விஷயங்களால் மாற்றம் அடையக்கூடும். இது மட்டுமின்றி அமெரிக்கா பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களும் தங்க விலையை கணிசமாக பாதிக்கும். இதனால் தங்கம் விலை எப்போது ஏறும் எப்போது இறங்கும் என்று கூறி விட முடியாது. முன்பே சொன்னது போல் ஒரு நாளைக்கு 2 முறை தங்கம் விலை மாற்றம் அடையும் பட்சத்தில் உங்கள் ஊரில் விற்பனை செய்யப்படும் விலையினை நீங்கள் இணையதளங்களை பார்த்து தெரிந்து கொண்டு நகை வாங்குவது குறித்த முடிவு எடுக்கலாம்.
சில காரணிகளை மட்டும் வைத்து தங்கம் விலை ஏற்றத்தை கூற முடியாது என்றாலும் சில காரணிகள் நம் அனைவருக்கும் தெரிந்த பொதுவானவையே. அவை திருமண சீசன் மற்றும் பண்டிகை காலங்கள். இந்த 2 நேரங்களிலுமே தங்கம் அதிகம் தேவைப்படும். இதனால் விலையிலும் ஏற்றம் இருக்கலாம். இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாங்க திட்டமிடுபவர்கள் இந்த நாளை பயன்படுத்திக் கொள்வது லாபகரமானதாக இருக்கும்.
More From GoodReturns

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications