ஆகஸ்ட் 20-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் சற்று மாற்றம் உள்ளது. அதன்படி இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.6,660 ஆகவும், அதேபோல் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.7,265 ஆகவும் உள்ளது. இன்றைய நிலவரப்படி கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கோவை மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை: கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து 6,660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 80 ரூபாய் குறைந்து 53,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12 ரூபாய் குறைந்து 7,265 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 96 ரூபாய் குறைந்து 58,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்றைய நிலவரப்படி 1 கிராம் வெள்ளி ஒரு ரூபாய் அதிகரித்து 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 92,000 ரூபாயாக உள்ளது.
கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சீராக இருந்தது. அதாவது எந்த வித மாற்றமும் இல்லாமல் ஏற்ற இறக்கங்களுக்கு உட்படாமல் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்துள்ளது.
கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் பரபரப்பான நகரங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் பல ஊர்களில் தங்கத்திற்கு கலாச்சார முக்கியத்துவம் அதிகளவில் காணப்படுகிறது. கோயம்புத்தூர் மற்றும் மதுரை மட்டுமின்றி பிற நகரங்களிலும் தங்கம் தனித்து நிற்கும் முதலீடாகத்தான் உள்ளது.
கோயம்புத்தூர் ஒரு முக்கிய தொழில்துறை மையமாக இருப்பதால் அதிக வருமானம் ஈட்டும் மக்கள் தொகை இங்கு அதிகம். தங்கம் தமிழ் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு பொருள். திருமணங்கள், பண்டிகைகள் சடங்குகள் என அனைத்திற்கும் தங்க நகைகளின் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கின்றன.
இன்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. எனவே தங்கம் வாங்க திட்டமிடுபவர்கள் இது போன்ற விலை குறைவான நாட்களை பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.


Click it and Unblock the Notifications