தங்கம் விலை 3வது நாளாக சரிவு.. டிரம்ப் நினைத்து நடக்குது..!! அப்போ 100000 தொட வாய்ப்பில்லையா..?

தங்கம் விலை வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் எம்சிஎக்ஸ் சந்தையில் முதலீட்டாளர்கள் லாபம் பார்க்கும் நோக்கத்தில் அதிகப்படியான முதலீட்டை விற்பனை செய்தனர் இதனால் 3வது நாளாக தங்கம் விலை குறைந்தது. கடந்த வார கணிப்புகளின் படி தங்கம் 1 லட்சத்தை எட்டும் என கூறப்பட்டது, ஆனால் டிரம்ப்-ன் வரி விதிப்பு அமெரிக்கப் பத்திர சந்தையில் முதலீட்டை அதிகரித்து டாலர் மதிப்பை உயர்த்தியுள்ளது.

பொதுவாகச் சர்வதேசச் சந்தையில் டாலர் மற்றும் இதர முக்கிய நாணயங்களின் மதிப்பு உயரும்போது தங்கம் விலை குறையும். ஆனால் இந்தியாவில் டாலர் மதிப்பு உயரும் போது நுகர்வு அதிகரித்தால் மட்டுமே விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது, நுகர்வு அளவு குறைவாக இருந்தால் இறக்குமதி நிறுத்தப்பட்டு தங்கம் விலை குறையும். இதுதான் தற்போது நடந்து வருகிறது.

தங்கம் விலை 3வது நாளாக சரிவு.. டிரம்ப் நினைத்து நடக்குது..!! அப்போ 100000 தொட வாய்ப்பில்லையா..?

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, ஸ்பாட் சந்தையில் தேவை குறைவு ஆகிய காரணிகள் மூலம் இந்தியாவில் தங்கம் விலை குறைந்துள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 4 ஆம் தேதி முடியும் MCX தங்க ஒப்பந்தங்கள் 0.08 சதவீதம் குறைந்து, இன்று காலை 9:10 மணியளவில் 10 கிராம் ரூ.87,705 ஆக இருந்தது. மார்ச் 20 ஆம் தேதி 10 கிராம் ரூ.89,796 அளவீட்டைத் தொட்டு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு தற்போது 2,000 ரூபாய்க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

இதேவேளையில் டிரம்ப் அரசு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தனது ரெசிப்ரோக்கல் வரி விதிப்பதில் இருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை, எனவே டாலர் மதிப்பு தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையில் அடுத்த ஒரு வாரத்திற்குப் பெரிய அளவிலான ஏற்ற இறக்கம் இருக்கும்.

மறுமுனையில் மும்பை பங்குச்சந்தையில் இன்று முதலீடுகள் அதிகரித்துக் காணப்படுகிறது, இதன் வாயிலாக சென்செக்ஸ் குறியீடு 860 புள்ளிகள் அதிகரித்து 777,66 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய முதலீட்டில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் முதலீட்டு அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. டாலர் மதிப்பின் உயர்வைப் பயன்படுத்தி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

உலகின் முன்னணி நாணயங்களுக்கு எதிராக டாலர் மதிப்பைக் கணக்கிடும் DXY குறியீடு தற்போது 104.11 ஆக உள்ளது, இதுவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 86 ரூபாய் அளவில் உள்ளது.

இதேவேளையில் டாலர் குறியீடு சரிந்து, உலகளாவிய மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்குவது, சீனா மற்றும் இந்தியா போன்ற முக்கிய நாடுகள் தங்கம் வாங்குவதை அதிகரித்தால் தேவை அதிகரித்து விலையும் அதிகரிக்கும்.

இந்த நிலையில் இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை 3 நாள் தொடர்ந்து குறைந்த பின்பு அதன் நிலவரம் என்ன..? தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்கள், உலகளவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இன்று ரீடைல் மார்கெட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 65720 ரூபாய், மும்பை - 65720 ரூபாய், டெல்லி - 65840 ரூபாய், கொல்கத்தா - 65720 ரூபாய், பெங்களூர் - 65720 ரூபாய், ஹைதராபாத் - 65720 ரூபாய், கேரளா - 65720 ரூபாய், புனே - 65720 ரூபாய், பரோடா - 65760 ரூபாய், அகமதாபாத் - 65760 ரூபாய், ஜெய்ப்பூர் - 65840 ரூபாய், லக்னோ - 65840 ரூபாய், கோயம்புத்தூர் - 65720 ரூபாய், மதுரை - 65720 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,215 ரூபாய், மும்பை - 8,215 ரூபாய், டெல்லி - 8,230 ரூபாய், கொல்கத்தா - 8,215 ரூபாய், பெங்களூர் - 8,215 ரூபாய், ஹைதராபாத் - 8,215 ரூபாய், கேரளா - 8,215 ரூபாய், புனே - 8,215 ரூபாய், பரோடா - 8,220 ரூபாய், அகமதாபாத் - 8,220 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,230 ரூபாய், லக்னோ - 8,230 ரூபாய், கோயம்புத்தூர் - 8,215 ரூபாய், மதுரை - 8,215 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,962 ரூபாய், மும்பை - 8,962 ரூபாய், டெல்லி - 8,977 ரூபாய், கொல்கத்தா - 8,962 ரூபாய், பெங்களூர் - 8,962 ரூபாய், ஹைதராபாத் - 8,962 ரூபாய், கேரளா - 8,962 ரூபாய், புனே - 8,962 ரூபாய், பரோடா - 8,967 ரூபாய், அகமதாபாத் - 8,967 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,977 ரூபாய், லக்னோ - 8,977 ரூபாய், கோயம்புத்தூர் - 8,962 ரூபாய், மதுரை - 8,962 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,785 ரூபாய், மும்பை - 6,722 ரூபாய், டெல்லி - 6,734 ரூபாய், கொல்கத்தா - 6,722 ரூபாய், பெங்களூர் - 6,722 ரூபாய், ஹைதராபாத் - 6,722 ரூபாய், கேரளா - 6,722 ரூபாய், புனே - 6,722 ரூபாய், பரோடா - 6,726 ரூபாய், அகமதாபாத் - 6,726 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,734 ரூபாய், லக்னோ - 6,734 ரூபாய், கோயம்புத்தூர் - 6,785 ரூபாய், மதுரை - 6,785 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,040 ரூபாய், மும்பை - 27,040 ரூபாய், டெல்லி - 27,040 ரூபாய், கொல்கத்தா - 27,040 ரூபாய், பெங்களூர் - 27,040 ரூபாய், ஹைதராபாத் - 27,040 ரூபாய், கேரளா - 27,040 ரூபாய், புனே - 27,040 ரூபாய், வதோதரா - 27,040 ரூபாய், அகமதாபாத் - 27,040 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,10,000 ரூபாய், மும்பை - 1,01,000 ரூபாய், டெல்லி - 1,01,000 ரூபாய், கொல்கத்தா - 1,01,000 ரூபாய், பெங்களூர் - 1,01,000 ரூபாய், ஹைதராபாத் - 1,10,000 ரூபாய், கேரளா - 1,10,000 ரூபாய், புனே - 1,01,000 ரூபாய், பரோடா - 1,01,000 ரூபாய், அகமதாபாத் - 1,01,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 1,01,000 ரூபாய், லக்னோ - 1,01,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,10,000 ரூபாய், மதுரை - 1,10,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 34.90 - 7,959 ரூபாய்
குவைத் - KWD 27.72 - 7,735 ரூபாய்
மலேசியா - MYR 423 - 8,195 ரூபாய்
ஓமன் - OMR 35.85 - 8,007 ரூபாய்
கத்தார் - QAR 341 - 8,041 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 345 - 7,906 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 125.80 - 8,078 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 337.50 - 7,899 ரூபாய்
அமெரிக்கா - USD 91.50 - 7,865 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 337.50 - 7,899 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 337.50 - 7,899 ரூபாய்
துபாய் (UAE) - AED 337.50 - 7,899 ரூபாய்
புஜைரா (UAE) - AED 337.50 - 7,899 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 337.50 - 7,899 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 337.50 - 7,899 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 341 - 8,041 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 35.85 - 8,007 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 345 - 7,906 ரூபாய்
இங்கிலாந்து - GBP 69.03 - 7,662 ரூபாய்
கனடா - CAD 135.75 - 8,131 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 149.60 - 8,070 ரூபாய்
நேபாளம் - NPR 13,732.40 - 8,589 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 37.20 - 8,484 ரூபாய்
குவைத் - KWD 30.23 - 8,436 ரூபாய்
மலேசியா - MYR 440 - 8,524 ரூபாய்
ஓமன் - OMR 38.25 - 8,543 ரூபாய்
கத்தார் - QAR 365.50 - 8,618 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 373 - 8,547 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 138.50 - 8,894 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 364.50 - 8,531 ரூபாய்
அமெரிக்கா - USD 97.25 - 8,360 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 364.50 - 8,531 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 364.50 - 8,531 ரூபாய்
துபாய் (UAE) - AED 364.50 - 8,531 ரூபாய்
புஜைரா (UAE) - AED 364.50 - 8,531 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 364.50 - 8,531 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 364.50 - 8,531 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 365.50 - 8,618 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 38.25 - 8,543 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 373 - 8,547 ரூபாய்
இங்கிலாந்து - GBP 75.31 - 8,359 ரூபாய்
கனடா - CAD 143.25 - 8,581 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 163.20 - 8,804 ரூபாய்
நேபாளம் - NPR 14,926.52 - 9,336 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+