தங்கம் விலை இன்றும் சரிவு.. மீண்டும் மீண்டுமா..!! சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?!

தங்கம் விலை தினமும் உயர்வதைக் கண்டு புலம்பித் தள்ளிய மக்கள் தற்போது பட்டாசு வெடித்துக் கொண்டாடாத குறையாகத் தினமும் தங்கம் விலை குறைவதைப் பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். தங்கத்தை வாங்கினாலும் சரி, வாங்காவிட்டாலும் சரி தங்கம் விலை குறையும் போது எல்லோரும் குஷியாகிறோம்.

இந்திய மக்கள், குறிப்பாகத் தென்னிந்திய மக்கள் தங்கத்தை முக்கிய சொத்தாகப் பார்த்துப் பழகிவிட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயரும் போதும் அதிர்ச்சி அடைவது வழக்கம் தான். இதேபோல் தங்கம் விலை 10 கிராம் 1 லட்சம் எட்டும் எனப் பேசியவர்கள் பலரும் தற்போது வாயடைத்து உள்ளனர்.

தங்கம் விலை இன்றும் சரிவு.. மீண்டும் மீண்டுமா..!! சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?!

தங்கம் விலையை பொருத்த வரையில் இந்தியச் சந்தையால் இதன் விலையை நிர்ணயம் செய்ய முடியாது, வெளிநாட்டுச் சந்தையில் நிலவும் டிமாண்ட் மற்றும் வர்த்தகத்தைப் பொருத்துத் தங்கம் விலை உயரவும், குறையவும் செய்யும். அந்த வகையில் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பு தள்ளிப்போன காரணத்தால் தற்போது தங்கம் விலை குறைந்து வருகிறது.

அமெரிக்காவின் வர்த்தகம், உற்பத்தி, சேவை துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருக்கும் காரணத்தால் வட்டி விகித குறைப்பு தற்போது அவசியமற்றதாக உள்ளது. இதேபோல் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகளும் சாதகமாக இருக்கும் காரணத்தால் இந்த வருடம் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதம் குறைவது என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இதனால் தங்கம் மீதான முதலீடுகள் பெரிய அளவில் வெளியேறி பங்குச்சந்தை மீது திரும்பியுள்ளது, இதன் எதிரொலிகளை இந்திய பங்குச்சந்தையில் தினமும் வரலாற்று உச்சத்துடன் கொண்டாடி வருகிறோம்.

புதன்கிழமை ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2316 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இன்று 2297 டாலருக்குக் குறைந்துள்ளது. கிட்டதட்ட 2 வாரத்திற்கு பின்பு தங்கம் விலை 2300 டாலர் அளவுக்கு கீழ் சரிந்துள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு உலோகத்தின் பியூச்சர் ஆர்டர்களின் மதிப்பும் பெரிய அளவில் குறைந்துள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 350 ரூபாய் குறைந்து 66,250 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 380 ரூபாய் குறைந்து 72,280 ரூபாயாக குறைந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 280 ரூபாய் குறைந்து 53,000 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான 94500 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. பிளாட்டினம் விலை 10 கிராம் 500 ரூபாய் உயர்ந்து 27030 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,625 ரூபாய், மும்பை - 6,575 ரூபாய், டெல்லி - 6,590 ரூபாய், கொல்கத்தா - 6,575 ரூபாய், பெங்களூர் - 6,575 ரூபாய், ஹைதராபாத் - 6,575 ரூபாய், கேரளா - 6,575 ரூபாய், புனே - 6,575 ரூபாய், பரோடா - 6,580 ரூபாய், அகமதாபாத் - 6,580 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,590 ரூபாய், லக்னோ - 6,590 ரூபாய், கோயம்புத்தூர் - 6,625 ரூபாய், மதுரை - 6,625 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,228 ரூபாய், மும்பை - 7,173 ரூபாய், டெல்லி - 7,188 ரூபாய், கொல்கத்தா - 7,173 ரூபாய், பெங்களூர் - 7,173 ரூபாய், ஹைதராபாத் - 7,173 ரூபாய், கேரளா - 7,173 ரூபாய், புனே - 7,173 ரூபாய், பரோடா - 7,178 ரூபாய், அகமதாபாத் - 7,178 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,188 ரூபாய், லக்னோ - 7,188 ரூபாய், கோயம்புத்தூர் - 7,228 ரூபாய், மதுரை - 7,228 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53000 ரூபாய், மும்பை - 52600 ரூபாய், டெல்லி - 52720 ரூபாய், கொல்கத்தா - 52600 ரூபாய், பெங்களூர் - 52600 ரூபாய், ஹைதராபாத் - 52600 ரூபாய், கேரளா - 52600 ரூபாய், புனே - 52600 ரூபாய், பரோடா - 52640 ரூபாய், அகமதாபாத் - 52640 ரூபாய், ஜெய்ப்பூர் - 52720 ரூபாய், லக்னோ - 52720 ரூபாய், கோயம்புத்தூர் - 53000 ரூபாய், மதுரை - 53000 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,030 ரூபாய், மும்பை - 27,030 ரூபாய், டெல்லி - 27,030 ரூபாய், கொல்கத்தா - 27,030 ரூபாய், பெங்களூர் - 27,030 ரூபாய், ஹைதராபாத் - 27,030 ரூபாய், கேரளா - 27,030 ரூபாய், அகமதாபாத் - 27,030 ரூபாய், ஜெய்ப்பூர் - 27,030 ரூபாய், லக்னோ - 27,030 ரூபாய், கோயம்புத்தூர் - 27,030 ரூபாய், மதுரை - 27,030 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 94500 ரூபாய், மும்பை - 90000 ரூபாய், டெல்லி - 90000 ரூபாய், கொல்கத்தா - 90000 ரூபாய், பெங்களூர் - 89500 ரூபாய், ஹைதராபாத் - 94500 ரூபாய், கேரளா - 94500 ரூபாய், புனே - 90000 ரூபாய், பரோடா - 90000 ரூபாய், அகமதாபாத் - 90000 ரூபாய், ஜெய்ப்பூர் - 90000 ரூபாய், லக்னோ - 90000 ரூபாய், கோயம்புத்தூர் - 94500 ரூபாய், மதுரை - 94500 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 26.80 - 5,933 ரூபாய்,
குவைத் - KWD 21.85 - 5,945 ரூபாய்,
மலேசியா - MYR 343 - 6,066 ரூபாய்,
ஓமன் - OMR 27.50 - 5,961 ரூபாய்,
கத்தார் - QAR 263 - 6,020 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 266 - 5,917 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 97.80 - 6,015 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 258 - 5,862 ரூபாய்,
அமெரிக்கா - USD 70.50 - 5,884 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 258 - 5,862 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 258 - 5,862 ரூபாய்,
துபாய் (UAE) - AED 258 - 5,862 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 258 - 5,862 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 258 - 5,862 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 258 - 5,862 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 263 - 6,020 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 27.50 - 5,961 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 266 - 5,917 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.50 - 6,309 ரூபாய்,
குவைத் - KWD 23.15 - 6,299 ரூபாய்,
மலேசியா - MYR 359 - 6,349 ரூபாய்,
ஓமன் - OMR 29.30 - 6,351 ரூபாய்,
கத்தார் - QAR 280 - 6,409 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 286 - 6,362 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,679 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 278.75 - 6,334 ரூபாய்,
அமெரிக்கா - USD 74.50 - 6,218 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 278.75 - 6,334 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 278.75 - 6,334 ரூபாய்,
துபாய் (UAE) - AED 278.75 - 6,334 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 278.75 - 6,334 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 278.75 - 6,334 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 278.75 - 6,334 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 280 - 6,409 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.30 - 6,351 ரூபாய்,

தம்மம் (Saudi Arabia) - SAR 286 - 6,362 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+