தங்கம் விலையில் டிசம்பர் 31க்குள் டிவிஸ்ட்.. மக்களே உஷாரா இருங்க.. ஆனா ஒரு டிவிஸ்ட்..!

தங்கம் விலை கடந்த 2 நாட்களாக கிராமுக்கு 200 ரூபாய்க்கும் அதிகமாகச் சரிந்து வருவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஈரான் போர் அமைதி நிலைக்குத் திரும்பியதும் கச்சா எண்ணெய் விலை குறையத் துவங்கியுள்ளது.

அப்படியானால் தங்கம் விலை உயர வேண்டுமே தவிரக் குறையக் கூடாது, ஆனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கையை மீண்டும் hawkish நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.

தங்கம் விலையில் டிசம்பர் 31க்குள் டிவிஸ்ட்.. மக்களே உஷாரா இருங்க.. ஆனா ஒரு டிவிஸ்ட்..!

இதன் மூலம், மீண்டும் வட்டி விகிதம் உயரவும், டாலர் மதிப்பு உயரவும், பத்திர முதலீட்டின் மீதான லாப அளவு உயரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் தங்கம் மீண்டும் முதலீட்டாளர்கள் மத்தியில் பொழிவை இழந்து வருகிறது.

இந்த நிலையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை மீண்டும் 1.50 லட்சம் ரூபாய் அளவீட்டை டிசம்பர் 31க்குள் எட்டுமா என்பது முதலீட்டாளர்களின் முக்கியமான கேள்வியாக உள்ளது. குறிப்பாகத் தங்கம் விலை குறையும் போது வாங்கத் திட்டமிடும் மக்களுக்கு மத்தியில் இது முக்கிய கேள்வியாக உள்ளது.

இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1.51 சதவீதம் குறைந்து 1,37,609 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதேபோல் சர்வேதச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1.92 சதவீதம் வரையில் சரிந்து 3,906.51 டாலராக உள்ளது.

Also Read

தற்போது தங்கம் விலை சரிவதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் அமெரிக்க நாணய கொள்கை முடிவுகள் தான். அமெரிக்காவில் பணவீக்கம் கட்டுக்குள் வராத காரணத்தால் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் வரையில் உயர்த்தலாம் என செபி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டு சந்தை ஆய்வாளரான அனுஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பணவீக்கம் செப்டம்பர் மாதம் 0.6 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில் அக்டோபர் மாதம் 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் இக்காலகட்டத்தில் 0.3 சதவீதம் மட்டுமே உயரும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், கணிப்பையும் தாண்டி உயர்ந்துள்ளது. இதன் மூலம் செப்டம்பர் மாதம் 3.7 சதவீதமாக இருந்த பணவீக்கம், தற்போது 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் பெடரல் ரிசரவ் வட்டியை உயர்த்தும் பட்சத்தில் வட்டி வருமானம் அளிக்காத தங்கம், வெள்ளி, பிளாட்டினம், காப்பர் போன்ற உலோகங்கள் வேகமாகச் சரியும். பெடரல் ரிசரவ்-ன் அடுத்த கூட்டம் டிசம்பர் 8 - 9 ஆம் தேதிகளில் நடக்கிறது.

வட்டி உயரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் போது டாலர் மதிப்பும் உயரும் என்பதால் தங்கம் விலைக்கு அனைத்தும் நெருக்கடியாகவே அமைந்துள்ளது.

இந்த நிலையில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தங்கம் விலை 1,50,000 ரூபாய் தொட வேண்டுமாயின் அமெரிக்காவில் பணவீக்கம் வேகமாகக் குறைய வேண்டும், குறிப்பாகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள 118 டாலர் டூ 92 டாலர் வரையிலான சரிவு அடைந்துள்ளது போல் அமெரிக்க எரிபொருள் விலையிலும் எதிரொலிக்க வேண்டும்.

இப்படி உலகளாவிய மேக்ரோ எக்னாமிக் நிலை மாறினால் மட்டுமே, இப்படியொரு டிவிஸ்ட் நடந்தால் மட்டுமே வட்டி உயர்வுக்கான வாய்ப்பு குறைந்து தங்கம் விலை மீண்டும் உயர்வும். டிசம்பர் 31ஆம் தேதிக்குக் கிட்டத்தட்ட 50 நாள் இருக்கும் வேளையில் தற்போதைய விலையில் இருந்து 8-9 சதவீதம் வரையில் விலை உயர்ந்தால் போதுமானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+