இந்தியாவில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து அதிகளவிலான மாற்றங்களை சந்தித்து உயர்ந்து வருவது தங்க நகை வாங்கத் திட்டமிடும் சாமானிய மக்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இனி வரும் நாட்களுக்குத் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்பதற்குப் பல முக்கியக் காரணங்கள் உள்ளது. இதேபோல் தங்க நகைகளை இப்போது வாங்கலாமா..? வேண்டாமா..? என்ற முக்கியமான கேள்விக்குப் பதிலையும் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
முக்கியக் காரணிகள்
பொதுவாகத் தங்கம் விலையைத் தீர்மானிக்கும் இரு முக்கியக் காரணிகள் சர்வதேசச் சந்தை விலை மற்றும் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு. தற்போது இவ்விரண்டும் இந்தியச் சந்தைக்கு எதிராக உள்ளது. இதனால் அடுத்த சில நாட்களுக்குத் தங்கம் விலை தொடர்ந்து உயரும் எனக் கணிக்கப்படுகிறது.
ஒரு அவுன்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 20 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1785 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இதன் விலை 1808 டாலருக்கு உயர்ந்துள்ளது.
அமெரிக்க முதலீட்டுச் சந்தை
நீண்ட காலத்திற்குப் பின்பு தங்கம் விலை 1700 டாலர் அளவீட்டில் இருந்து 1800 டாலருக்கு உயர்ந்துள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் அமெரிக்க முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் என்றால் மிகையில்லை.
பத்திர முதலீடு
அமெரிக்க முதலீட்டுச் சந்தையில் சமீப காலமாகப் பத்திர முதலீடு மிக முக்கிய முதலீடாக மாறியது. ஆனால் தற்போது கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட பாதிப்பு, வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் பத்திர முதலீடு மீதான லாப அளவீட்டைப் பெரிய அளவில் குறைத்துள்ளது.
அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகள்
இதோடு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாமல் அரசின் நிதியுதவியைப் பெறுவோரின் எண்ணிக்கை கடந்த வாரம் 3,50,000ஆக இருக்கும் கணிக்கப்பட்ட நிலையில், இது 3,73,000 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையைச் சமாளிக்க அமெரிக்கப் பெடரல் வங்கி கட்டாயம் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தங்கம் மீது முதலீடு
இவை இரண்டும் தேர்த்துப் பத்திரம் மற்றும் பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் கணிசமாக வெளியேறி பாதுகாப்பு வேண்டி தங்கம் மீது முதலீடு செய்ய முதலீட்டாளர்களைத் தூண்டியுள்ளது. இதன் வாயிலாகவே தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் 20 டாலருக்கு அதிகமாக உயர்த்தியுள்ளது.
அமெரிக்க டாலர்
மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ள காரணத்தால் தங்கம் விலை இந்தியாவில் அதிகமாக வளர்ச்சி அடைந்து சாமானியர்களைப் பாதித்துள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டு உள்ள நிலையில் விரைவில் நிலைபெற வாய்ப்புக் குறைவு.
அமெரிக்கப் பெடரல் வங்கி
ஏற்கனவே அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் எனத் திட்டமிட்டு இருந்த நிலையில் வேலைவாய்ப்புப் பிரச்சனை முன்கூட்டியே வட்டி விகிதத்தை உயர்த்த தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் வாங்கலாமா..?
இதனால் சாமானிய மக்கள் திருமணம், சுப நிகழ்ச்சி போன்றவற்றுக்கு அவசரமாக வாங்க வேண்டும் எனில் வாங்கலாம். இல்லையெனில் அடுத்த சில வாரத்திற்குத் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொருத்து வாங்குவது குறித்து முடிவு செய்யலாம். அல்லது நீங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்பினால் தாராளமாகச் செய்யலாம்.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!



Click it and Unblock the Notifications