தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், எப்போது தங்கத்தை வாங்க வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதுக்குறித்து சந்தை நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா..?
இன்று ரீடைல் வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 93,050 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் குறைந்து 1,01,510 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 88 ரூபாய் குறைந்கு 81,208 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 1000 ரூபாய் உயர்ந்து 1,31,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 130 ரூபாய் குறைந்து 38,110 ரூபாயாக உள்ளது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்களுக்கு ஏற்ற இறக்கமாக இருக்கலாம் என்றாலும், ஒட்டுமொத்த உயர்வான நிலையிலேயே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் செப்டம்பர் மாத நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகித குறைப்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பே தங்கம் விலை உயரும் என்ற நம்பிக்கைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்த மாற்றங்கள், உலக அளவில் தங்கத்தின் விலையை பாதிக்கும் முக்கிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிகழ்வுகளுடன் இணைந்து, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
அமெரிக்க பொருளாதார தாக்கம்:
தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமெரிக்க பொருளாதார தரவுகள் உள்ளன. அடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் இரண்டாம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), தனிநபர் நுகர்வு செலவு (PCE) பணவீக்கம் மற்றும் பெடரல் ரிசர்வ் தலைவர்களின் பேச்சுக்கள் நாணய கொள்கையைப் பற்றிய முக்கிய தகவல்களை வழங்கும். இவை தங்கத்தின் விலையை பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஜேஎம் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரணவ் மேர் கூறுகையில், "தங்க விலைகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கலாம், ஆனால் செப்டம்பர் கூட்டத்தில் வட்டி விகித குறைப்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு தங்கம் விலை உயரும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது," என்றார்.

மத்திய வங்கியின் கொள்கை மாற்றங்கள்:
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், ஜாக்சன் ஹோல் மாநாட்டில் பேசியபோது, விரைவில் பென்ச்மார்க் வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்று குறிப்பிட்டார். இது கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக வட்டி விகித குறைப்பு நடைபெறலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. செப்டம்பர் 16-17 தேதிகளில் நடைபெறவுள்ள பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது.
அடுத்த முக்கிய விஷயம்
தங்கத்தின் விலையை பாதிக்கும் மற்றொரு முக்கிய விஷயம், ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்படும் முன்னேற்றம். இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி தங்கத்தின் விலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர் தெரிவித்தார்.
இப்படி தங்கம் விலை நிர்ணயம் செய்யும் காரணி அதிகமாக இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் சந்தையின் நிலைமையை உணர்ந்து தங்கத்தை வாங்க வேண்டியது முக்கியம்.


Click it and Unblock the Notifications