உலகின் முன்னணி முதலீட்டு வங்கி நிறுவனங்களில் ஒன்றான கோல்ட்மேன் சாக்ஸ் தங்க விலை மீதான தனது கணிப்பைக் குறைத்துள்ளது. இந்நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 3000 டாலரை எட்டும் என இலக்கை நிர்ணயம் செய்து கணித்திருந்த நிலையில், தற்போது 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தான் தங்கம் அவுன்ஸ்-க்கு 3,000 டாலர்களை எட்டும் என எதிர்பார்ப்பதாகக் கணித்துள்ளது.
இதற்கு முக்கியமான காரணமாக அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி அந்நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வட்டி விகிதத்தை மெதுவாகக் குறைக்கும் என்ற எதிர்பார்க்கும் காரணத்தால் முதலீட்டுச் சந்தையில் அதிகப்படியான பணப்புழக்கம் ஏற்படுவதைக் குறைத்து தங்கம் விலை பெரிய அளவில் உயராது என்பதைக் கணித்துள்ளது.

இதனாலேயே தற்போது சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் 2650 டாலரில் வர்த்தகம் செய்யப்படும் போதும் 3000 டாலர் அடைய 1.5 வருடம் ஆகும் என கணித்துள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு தற்போதைய வர்த்தக சூழல் தொடர்ந்தால் மந்தமான லாபம் மட்டுமே கிடைக்கும் என மறைமுகமாகக் கூறியுள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸ்-ன் சமீபத்திய ஆய்வறிக்கையில் லினா தாமஸ் மற்றும் டான் ஸ்ட்ரூவென் ஆகியோர் தங்கம் ETF-களில் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் காரணமாகத் தங்கம் விலை உயர்வு கணிப்பை திருத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து அமெரிக்க டாலரில் ஏற்பட்ட மாற்றம் தங்கம் விலையின் போக்கு மொத்தமாக மாறியுள்ளது. இந்த வருடத்தின் இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2910 டாலர் வரையில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
தங்கம் விலை 2024 ஆம் ஆண்டில் 27 சதவீதம் வரையில் உயர்ந்து அதன் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தைக் கொடுத்தது. ஆனால் இதேபோன்ற லாபத்தை 2025 ஆம் ஆண்டில் பெற முடியாது என்பதையே கோல்ட்மேன் சாக்ஸ் இந்த ஆய்வறிக்கையில் தற்போது பொருளாதார சூழ்நிலையை அடிப்படையாக வைத்துக் கணித்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப தங்கம் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது சந்தை நிபுணர்களின் கருத்தாக இருந்தாலும், இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதே நிதர்சனமான உண்மை எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications