சென்னை: இந்தியாவில் பாரம்பரிய முதலீடாகத் தங்கம் பார்க்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், தங்கத்தின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 20 ஆண்டுகளில், தங்கம் விலை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த அட்சய திருதியை வருவதற்குள் தங்கத்தில் விலை ரூ. 1 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அட்சய திருதியை பொதுவாக நகை வாங்குவதற்கு, சிறந்த நாளாகப் பார்க்கப்படுகிறது. அதிலும், குறிப்பாக பெண்கள் அட்சய திருதியை அன்று 1 கிராம் நகையாவது வாங்கிவிடுவார்கள். இதனால் இதுபோன்ற நாட்களில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கிறது. ஏற்கனவே தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அடுத்த அட்சய திருதியைக்குள் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அட்சய திருதியை 2024: பொருளாதார நிச்சயமற்ற தன்மை, புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்ற பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை, எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்தியாவில், திருவிழாக்கள், திருமணங்கள் அல்லது அட்சய திருதியை போன்ற சிறப்பு நாட்களில், அதிகமான மக்கள் தங்கத்தை வாங்க விரும்புவதால், தங்கத்தின் விலை உயருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், அட்சய திருதியை தங்க நகைகளை வாங்குவதற்கு ஏற்ற நாளாகக் கருதப்படுவதால், அன்றைய நாளில் இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கிறது. அட்சய திருதியை அன்று நகை வணங்குவது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில், தங்க நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை வாங்கும் போது மக்கள் பாரம்பரியங்களை அதிகம் கடைபிடிக்கின்றனர். எனவே, கார், நிலம் அல்லது தங்கம் போன்ற சொத்துக்களை வாங்க முடிவு செய்யும் போது, நல்ல நேரம் மற்றும் நாளுக்காக பலரும் காத்திருக்கின்றனர்.
இந்த ஆண்டு மே 10ம் தேதி வரும் அட்சய திருதியை அன்று தங்கத்தின் விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் தங்க நகைகளை வாங்குவார்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அதுமட்டுமின்றி அட்சய திரிதியை அன்று தற்காலிகமான தேவை காரணமாக தங்கத்தின் விலை உயரலாம் என்றும் கருதுகின்றனர். மேலும் பல காரணங்களால் வரும் மாதங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என்றும் கணித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி, அதாவது அட்சய திருதியை அன்று, டெல்லியில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,300 ஆக இருந்தது. இப்போது, 2024 ஆம் ஆண்டு அட்சய திருதியைக்கு சில நாட்களுக்கு முன்பு, தங்கத்தின் விலை 10 கிராம், 24 கேரட் தங்கத்தின் விலை, ரூ.71,700 ஆக உள்ளது.
போன ஆண்டில், தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 17 சதவீத லாபம் கிடைத்திருக்கும். கடந்த 6 மாதங்களில் தங்கத்தின் விலை 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
அடுத்த அட்சய திருதியைக்குள் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை தாண்டுமா?: தங்கத்தின் இதுவரையிலான விலை உயர்வு மற்றும் பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் மாதங்களில் இன்னும் உயர்ந்து அடுத்த அட்சய திருதியை வருவதற்குள் ரூ. 1 லட்சத்தை தாண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் மாதங்களில் சுமார் 40 சதவீத விலை உயர்வு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications