தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களில் மிக வேகமாக உயர்ந்து வருவதால், இந்திய நுகர்வோர்களின் தங்கம் வாங்குவோரின் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலக தங்க கவுன்சிலின் (WGC) சமீபத்திய அறிக்கையின் படி, தற்போது நடைபெறும் தங்க விற்பனைகளில் 40% முதல் 45% வரையிலான பரிவர்த்தனைகள் பழைய நகைகளை புதிய நகைகளாக மாற்றும் வகையிலானவை. தங்கத்தின் விலையில் ஏற்படும் கடுமையான உயர்வு மற்றும் அதிகப்படியான ஏற்ற இறக்கங்கள் பலர் புதிதாக தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது.
தற்போது நகைகள் வாங்கப்படும் போது, அவை பெரும்பாலும் திருமண தேவைகள் அல்லது அவசர தேவைகளுக்காக மட்டுமே வாங்கப்படுகின்றன. அதிக விலை இருப்பதால், மக்கள் தங்களிடம் உள்ள பழைய நகைகளை மாற்றி புது நகைகளை வாங்குவதையே அதிகமாக விரும்புகிறார்கள். பழைய நகைகளை மாற்றி வாங்குவதன் மூலம் அவர்கள் செலவுகளை தவிர்க்க முடிகிறது. பழைய தங்கத்தை மாற்றி மக்கள் புது நகைகளையும், லேட்டஸ்ட் டிசைன்களாகவும் நகைகளை வாங்குகின்றனர்.

பண்டிகைக் காலங்களில் தங்கம் வாங்குவது இந்தியர்களிடையே பொதுவான நடைமுறையாக இருந்தாலும், தற்போது விலை அதிகரித்துள்ள காரணத்தால் தங்கம் வாங்குவது குறைந்து வருகிறது. அதே நேரத்தில், பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
நிதி சந்தைகளில் இருக்கும் நிலைமைகள், பங்கு விலைகள் சரிவு மற்றும் தங்கத்தின் விலை தொடர் உயர்வு ஆகியவற்றின் காரணமாக தங்கத்தை மக்கள் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்க ஆரம்பித்துள்ளனர். பெரு முதலீட்டாளர்கள் பெரிய அளவில் முதலீடு செய்யும் வேளையில், சிறு முதலீட்டாளர்கள் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை தவிர்க்க தங்க நாணயங்கள், கட்டிகள் போன்றவற்றில் அதிகம் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து, WGC இந்திய ஆராய்ச்சி தலைவர் கவிதா சாக்கோ கூறிகையில், தங்கத்தின் விலை அதிகமாக இருப்பினும், திருமணங்கள் மற்றும் பண்டிகைகளுக்கான தேவைகளால் தங்கம் வாங்கும் போக்கு தொடர்கிறது. ஆனால் விருப்பப்படி நகைகள் வாங்கும் அளவு குறைந்துவிட்டது. தற்போது மக்கள் தங்கத்தை ஒரு சேமிப்பாகப் பார்க்கிறார்கள், இது நுகர்வோர் நடத்தையில் மாற்றத்தை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி முதல் மார்ச் காலாண்டு வரையிலான வருவாய் அறிக்கைகளின்படி, முன்னணி நகை விற்பனையாளர்கள் ஆண்டுக்கு 25-35% வருமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர். இந்த வளர்ச்சி திருமணங்களுக்கான தேவை, பண்டிகை கொள்முதல் மற்றும் தங்கத்தின் மீது ஏற்பட்ட முதலீடு ஆகியவற்றால் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பிரீமியம் பிரிவுகளில் விற்பனை மிக சிறப்பாக இருந்தது. விலை உயர்ந்த போதிலும், அந்த பிரிவில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்முதல் பழக்கத்தை அதிகம் மாற்றவில்லை. ஒவ்வொரு பரிவர்த்தனையின் சராசரி மதிப்பும் 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பழைய தங்க நகைகளை மாற்றிக் கொள்வதில் ஒரு பெரும் போக்கு ஏற்பட்டுள்ளது.
இதுவே விற்பனை அளவுகளை தக்க வைத்திருக்க உதவியுள்ளது. இதனுடன், பெரும் கார்ப்பரேட் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் கடைகள் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஜனவரி முதல் மார்ச் வரை 10 முதல் 30 புதிய விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது நகைத் துறையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்களின் பங்கையும் வலுப்படுத்தியுள்ளது.
அடுத்து வரும் ஏப்ரல்-ஜூன் காலாண்டை முன்னிட்டு, முன்னணி நகை விற்பனையாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். அட்சய திருதியை போன்ற முக்கிய பண்டிகைகள் தங்கம் வாங்குவதற்கான முக்கியமான காலமாக இருப்பதால், வலுவான நுகர்வோர் உணர்வுகள் பதிவாகியுள்ளன. இதனை அடிப்படையாக வைத்து, முன்னணி நகை நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் 150 முதல் 200 புதிய ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் சந்தைப் பங்கில் மேலும் இடம்பிடித்து, பிராந்திய நுகர்வோரிடம் ஆழமான ஊடுருவலை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றனர்.
மொத்தத்தில், தங்கத்தின் விலை அதிகரிப்பினால், இந்திய நுகர்வோரின் பழைய பழக்கவழக்கங்களில் மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று தங்கம் வெறும் அலங்காரம் மட்டுமல்ல, ஒரு முதலீட்டுப் பொருளாகவும், நிதிச் சேமிப்பாகவும் திகழ்கிறது. இதனால், பழைய நகைகளை மாற்றிக் கொள்வது, புதுப்பித்தல், நவீன வடிவமைப்புகளின் மீது ஈர்ப்பு ஆகியவை முக்கியமான நுகர்வு போக்குகளாக மாறியுள்ளன. இந்தியர்களின் தங்க மோகமும் வாங்கும் பழக்கமும் இப்போது ஒரு புதிய யுகத்தில் அமைந்துள்ளது.
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!



Click it and Unblock the Notifications