கொரோனா வைரஸ், உலக பொருளாதார நெருக்கடிகள் போன்ற பிரச்சனைகளால், கடந்த சில ஆண்டுகளில் (குறிப்பாக 2019, 2020) தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டே வந்தது.
கடந்த ஆகஸ்ட் 2020 முதல் வாரத்தில், தங்கம் விலை ஒரு புதிய வரலாற்று உச்சத்தினைத் தொட்டது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை, 07 ஆகஸ்ட் 2020 அன்று, 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
அதே 07 ஆகஸ்ட் அன்று, இந்தியாவில் எம்சிஎக்ஸ் தங்க ஃப்யூச்சர் விலை, (அக்டோபர் 2020 காண்டிராக்ட்) 56,191 என்கிற விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமானது. 06 ஆகஸ்ட் 2020 அன்று சர்வதேச தங்கம் விலை, 2,063 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
வாருங்கள் பார்ப்போம்
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிக் கொண்டு இருக்கிறது. ஆகஸ்டில் விலை உச்சத்தைத் தொட்ட தங்கம், தற்போது விலை சரிவைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறது. எனவே, ஆகஸ்ட் மாத விலை உச்சத்துடன், சமீபத்தைய விலை விவரங்களை ஒப்பிட்டு, தங்கம் எவ்வளவு விலை சரிந்து இருக்கிறது எனப் பார்ப்போம். முதலில் சென்னை ஆபரணத் தங்கம் விலையில் இருந்து தொடங்குவோம்.
சென்னையில் தங்கம் விலை - ஒப்பீடு
7 ஆகஸ்ட் 2020 அன்று
24 கேரட் 10 கிராம் - ரூ. 59,130
22 கேரட் 10 கிராம் - ரூ. 54,200
1 செப்டம்பர் 2020 அன்று
24 கேரட் 10 கிராம் - ரூ. 54,200
22 கேரட் 10 கிராம் - ரூ. 49,720
4 செப்டம்பர் 2020 (நேற்றைய விலை)
24 கேரட் 10 கிராம் - ரூ. 53,290
22 கேரட் 10 கிராம் - ரூ. 48,860
ஆபரணத் தங்கம் விலை எவ்வளவு சரிவு?
07 ஆகஸ்ட் 2020 உடன், நேற்றைய ஆபரணத் தங்கம் விலையை ஒப்பிட்டால், 24 கேரட் 10 கிராம் விலை (59,130 - 53,290) = 5,840 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.
அதே போல 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை (54,200 - 48,860) = 5,340 ரூபாய் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறது.
மல்டி கமாடிட்டி சந்தையில் தங்க ஃப்யூச்சர் விலை
அக்டோபர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று 56,191 என்கிற உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகமானது. நேற்று (4 செப் 2020) 50,678 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 56,191 - 50,678 = 5,513 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.
எம் சி எக்ஸ் வெள்ளி விலை
டிசம்பர் 2020 மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, கடந்த ஆகஸ்ட் 2020 அன்று அதிகபட்சமாக 79,723 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. நேற்று (04 செப் 2020) 67,266 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆக 79,723 - 67,266 = 12,457 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது.
சர்வதேச தங்கம் விலை
கடந்த 06 ஆகஸ்ட் 2020 அன்று ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, 2,063 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. 01 செப் 2020 அன்று 1,970 டாலருக்கு வர்த்தகமானது. நேற்று (04 செப் 2020) 1,933 டாலருக்கு சர்வதேச தங்கம் விலை நிறைவடைந்தது. ஆக 2,063 - 1,933 = 130 டாலர் விலை சரிந்து இருக்கிறது.
செப்டம்பரில் அதிர்ஷ்டம் தான்
ஆக, இந்த செப்டம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் தங்கம் வாங்கியவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சரி இப்படி தங்கம் விலை சரிய என்ன காரணம்? மேற்கொண்டு தங்கம் விலை என்ன ஆகும்? வாருங்கள் பார்ப்போம். முதலில் டாலரில் இருந்து தொடங்குவோம்.
டாலர் கரன்சி இண்டெக்ஸ் - ஸ்பாட்
அமெரிக்க டாலர், மற்ற நாட்டு கரன்சிகளை விட எவ்வளவு வலுவடைந்து இருக்கிறது என்பதை, டாலர் இண்டெக்ஸில் பார்த்தாலே தெரிந்து விடும். கடந்த 31 ஆகஸ்ட் 2020 அன்று 92.14 புள்ளிகளாக இருந்த டாலர் இண்டெக்ஸ், நேற்று (04 செப் 2020) 92.71 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. அதிகபட்சமாக 93.23 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது.
டாலர் பலம் தங்கம் பலவீனம்
அமெரிக்க டாலர் கரன்சி பலமடைந்தால், மற்ற நாட்டு கரன்சி வைத்திருப்பவர்கள், அதிக பணத்தைச் செலவழித்து தங்கத்தை வாங்க வேண்டி இருக்கும். எனவே தங்கத்தின் விலை சரிய, டாலர் கரன்சி ஒரு முக்கிய காரணம் எனச் சொல்கிறார்கள் அனலிஸ்ட்கள். அடுத்து அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள்.
வேலை வாய்ப்புகள்
கடந்த ஆகஸ்ட் 2020 மாதத்தில், அமெரிக்காவின், விவசாயம் சாராத வேலை வாய்ப்புகள் (Nonfarm Payroll), 1.37 மில்லியன் (13.7 லட்சம்) அதிகரித்து இருப்பதாக தரவுகள் வெளியாகி இருக்கின்றன. இது அமெரிக்கா எதிர்பார்த்ததை விட அதிகம். இந்த வேலை வாய்ப்பு அதிகரிப்பு, அமெரிக்காவின் வேலை இல்லா திண்டாட்டத்தை 8.3 சதவிகிதமாக குறைத்து இருக்கிறது. இந்த பாசிட்டிவ் செய்தியால், டாலர் இண்டெக்ஸும் வலுவடைந்து இருக்கிறது. இவை எல்லாமே தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு, முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது.
ஃபெடரல் ரிசர்வ் தரப்பு
ஆகஸ்ட் மாதத்துக்கான வேலை வாய்ப்பு தரவுகள், சிறப்பாக வந்திருக்கிறது என்றாலும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களில் மாற்றங்களைக் கொண்டு வராது. அமெரிக்க பொருளாதாரத்தை பழைய நிலைக்கு கொண்டு வர, வட்டி விகிதங்களை குறைவாகவே வைத்திருக்கும் என, தன் தரப்பில் இருந்து தெளிவுபடுத்திவிட்டது. இந்த அறிவிப்பு, தங்கம் விலையைக் சப்போர்ட் செய்யும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
தங்கம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்
ஜிம் ராஜர்ஸ் எதிர்காலத்தில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றார். கோல்ட்மேட்ன் சாக்ஸ் நிறுவனம், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2,300 டாலரைத் தொடலாம் என்றது. ஆனால் தங்கத்தின் விலையை அதிகரிக்கும் விதத்தில் நல்ல செய்திகள் வந்தால் தான் மீண்டும் விலை ஏற்றம் காணும் என கோட்டக் செக்யூரிட்டீஸ் சொன்னது இங்கு நினைவு கூறத்தக்கது. அப்படி ஒரு டிரிக்கர் வரும் வரை, தங்கம் இப்போதைக்கு ஒரு பெரிய ஏற்றம் காணாது எனலாம்.
More From GoodReturns

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications