பட்ஜெட்டுக்கு பிந்தைய நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 40 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 44 ரூபாய் அதிகரித்துள்ளது. ஜூலை 23-ஆம் தேதி அன்று நடந்து முடிந்த பட்ஜெட்டில் தங்கத்திற்கான சுங்க வரி குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் இருந்தன. ஆனால் இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது. இந்தப் பதிவில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தங்கம் விலை நிலவரம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
சுங்கவரி என்பது ஒரு நாட்டின் எல்லைகளைக் கடந்து தங்கம் இறக்குமதி செய்யப்படும்போது, அரசால் விதிக்கப்படும் வரியாகும். இந்த வரி பட்ஜெட்டில் குறைக்கப்பட்டதனால், தங்கத்தின் இறக்குமதியும் அதிகரித்தது. இதன் விளைவாக தங்கத்தின் விலை குறைந்தது.

சுங்கவரி காரணங்கள் மட்டுமின்றி தற்போது சீனாவிலும் தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளது இதன் காரணமாகவும் தங்க விலையில் சரிவு ஏற்பட்டது. இப்படி குறைந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை தற்போது 1 சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்துள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இந்த மாதத்திற்கான தங்கத்தின் விலை நிலவரம்: இந்த மாத தொடக்கத்தில் அதாவது ஜூலை 1-ஆம் தேதி அன்று 6,685 ரூபாய்க்கு ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விற்கப்பட்டது. அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,293 ரூபாயாக இருந்தது. அதன் பிறகு ஜூலை 17-ஆம் தேதி அன்று தங்கம் விலை உச்சத்தில் இருந்தது. அன்றைய தினம் மட்டும் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7500-ஐ தாண்டியது.
அதன் பிறகு பட்ஜெட் முடிந்த நிலையில் தங்கத்தின் விலை சரசரவென குறைந்து ஜூலை 26-ஆம் தேதி அன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,400-க்கும், ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஜூலை 30-ஆம் தேதியான நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,385 ரூபாய்க்கும் ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,965 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதத்திலேயே நேற்றைய தினம் தான் தங்கத்தின் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது.
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்: கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,425 ஆகவும். இதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,009 ஆகவும் உள்ளது.
சென்னை மற்றும் மதுரையில் இன்று 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 51,400 ரூபாயாக உள்ளது. அதேபோல 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 56,072 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?



Click it and Unblock the Notifications