இஸ்ரேல்-ஈரான் மோதல் முடிவு, உலகளாவிய பங்கு சந்தை முதலீடுகள் மற்றும் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளின் தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சரி, சர்வதேச சந்தையிலும் சரி தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 850 ரூபாய் குறைந்து 89,850 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 930 ரூபாய் குறைந்து 98,020 ரூபாயாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த 7 நாளில் கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு மாத சரிவை எட்டியுள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 744 ரூபாய் குறைந்து 78,416 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து 1,17,900 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 120 ரூபாய் உயர்ந்து 38,220 ரூபாயாக உள்ளது.
இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்சிஎக்ஸ்) தங்கத்தின் விலை, ஜூன் 16, 2025 அன்று பதிவான உச்சபட்ச விலையான ₹1,01,078-லிருந்து 5% குறைந்து, 10 கிராமுக்கு 95,320-ஆக சரிந்துள்ளது. இந்த ரூ.5,758 வீழ்ச்சி, இஸ்ரேல்-ஈரான் போர் முடிவு அறிவிப்பு மற்றும் பங்குச் சந்தை உயர்வால் ஏற்பட்ட சரிவாகும். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 3,282-3,283 டாலராக குறைந்து ஒரு மாத குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளது.
வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் தனிநபர் நுகர்வு செலவு (PCE) விலை குறியீடு தரவு வெளியாக உள்ளது, இது அமெரிக்க மத்திய வங்கியின் (Fed) வட்டி விகித முடிவுகளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் இந்த தரவு அமெரிக்க டாலரின் வலிமையை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. இதனால் இந்த தரவுகள் வெளியான பின்பு தங்கத்தின் விலை கூடுதலாக சரியலாம்.
தங்க விலை வீழ்ச்சி, இந்திய முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. இந்தியாவில் தங்கத்தை நகைகள் மற்றும் முதலீட்டு சொத்தாக பார்க்கப்படும் காரணத்தால் சீனாவுக்கு அடுத்தப்படியாக தங்க ரீடைல் வர்த்தகத்தை இந்தியா கொண்டுள்ளது.
இந்திய மக்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் முன், உலகளாவிய பொருளாதார குறியீடுகள் மற்றும் சந்தை நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து அதன் பின்பு முதலீடு செய்ய வேண்டும். தங்கம் ஒரு பாதுகாப்பு முதலீடாக இருந்தாலும், விலை ஏற்ற இறக்கங்கள் ஆபத்தை கொண்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications