உலகளாவிய பொருளாதாரத்தை ரஷ்யா- உக்ரைன் போர், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் போன்ற புவிசார் அரசியல் பிரச்சனைகளுக்கு மத்தியில் தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளது.
தைவான் நாட்டில் புதன்கிழமை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உருவானது மூலம் மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். தைவான் நாட்டின் நிலநடுக்கம் அந்நாட்டின் சிப் தயாரிப்பு துறையைப் பாதித்துள்ளது, இதனால் உலகளவில் பல துறைகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பதிவான 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அதைச் சுற்றியுள்ள மாநிலங்கள் மற்றும் நியூயார்க் நகரங்களில் வசிப்பவர்களை உலுக்கியது, இது நியூ ஜெர்சி மாநில வரலாற்றில் வலுவான ஒன்றாகும். 244 ஆண்டுகளுக்குப் பின்பு வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதுபோன்ற இயற்கை சீற்றம் போன்ற முக்கியமான காலகட்டத்தில் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீட்டைத் தேடுவது முதலீட்டாளர்களின் இயல்பு, ஆனால் தங்கம் விலை 2330 டாலர் வரையில் உயர்வதற்கு நிலநடுக்கம் மட்டும் காரணமில்லை, வெள்ளிக்கிழமை வெளியான அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகளும் முக்கிய காரணமாகும்.
அமெரிக்கத் தொழிலாளர் துறை புள்ளியியல் ஆணையம் (BLS) வேலைவாய்ப்பு சந்தை மேலும் வலுப்பெற்றுள்ளதாக வெளியிட்ட அறிக்கை வந்த போதிலும், தங்கம் விலை அமெரிக்க சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தடாலடியாக உயர்ந்து இந்திய ரீடைல் சந்தையில் சனிக்கிழமை எதிரொலித்துள்ளது. நியூயார்க் பங்குச் சந்தை தொடக்கத்திலேயே 2,300 டாலர் அளவீட்டை அதிகப்படியாக 2330 டாலர் வரையிலான உயர்வை எட்டியுள்ளது.
புதிய வேலைவாய்ப்புகள் (Nonfarm Payrolls - NFP) அறிக்கையில், அந்நாட்டுப் பணியில் அமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து வலுவாக இருந்தாலும், சந்தை கணிப்பின் படி வருடாந்திர சராசரி ஒரு மணி நேரத்திறக்கான சம்பளம் குறைந்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் மார்ச் மாதத்தில் 303,000 புதிய பணியிடங்களை உருவாக்கியுள்ளன, இது 200,000 என்ற எதிர்பார்ப்பை விடவும் அதிகம், அதேபோல் பிப்ரவரி மாத 270,000 என்ற அளவை காட்டிலும் அதிகம். இதன் வாயிலாக அந்நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.9% என்ற அளவிலிருந்தும் 3.8% ஆகக் குறைந்துள்ளது.
அமெரிக்காவில் நிலவும் தற்போதைய வலுவான தொழிலாளர் தேவை, பணவீக்கம் 2% என்ற இலக்கை நோக்கிக் குறையும் வேகத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஜூன் மாதத்தில் வட்டி விகிதங்களைக் குறைக்க ஃபெடரல் ரிசர்வ் தொடங்கும் என்ற சந்தை எதிர்பார்ப்புகளைத் தகர்த்துள்ளது.
வலுவான வேலைவாய்ப்பு சந்தை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்த்தி வைத்திருக்க அனுமதிக்கும் என்பதால், 10 ஆண்டு அமெரிக்கக் கருவூலக் கடன் பத்திரங்களின் லாப அளவுகள் 4.37% ஆக உயர்ந்துள்ளது.
வேலைவாய்ப்பு தரவுகள் வலுவாக இருக்கும் வரையில் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை, இதன் புதிய முதலீடுகள் அனைத்தும் பங்குச்சந்தைக்கும், தங்கத்தின் மீதும் மாறும். இதன் வாயிலாக தங்கம் விலை அதிகரிக்கும்.
சர்வதேச சந்தையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2285 டாலரில் இருந்து 2329 டாலராக உயர்ந்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1050 ரூபாய் உயர்ந்து 66,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1140 ரூபாய் உயர்ந்து 72,160 ரூபாயாக உயர்ந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை 70000 ரூபாயைத் தாண்டியது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 840 ரூபாய் உயர்ந்து 52,920 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 2000 ரூபாய் உயர்ந்து 87000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 180 ரூபாய் உயர்ந்து 24,800 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!



Click it and Unblock the Notifications