சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் -ன் 2023 ஆம் ஆண்டின் எஞ்சிய காலத்தில் வட்டி விகிதத்தின் கண்ணோட்டம் குறித்து வெளியிட்ட கருத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படும் என்பதோடு, வட்டி விகிதம் குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த 2 நாளில் தங்க முதலீட்டு சந்தையில் இருந்து வெளியேறிய அனைத்து முதலீட்டாளர்களும் திரும்பவும் வந்தனர். இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் 24 கேரட் ஒரு அவுன்ஸ் தங்கம் நேற்றைய வர்த்தகத்தில் 1950 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு நாளில் மட்டுமே 33 டாலர் உயர்ந்து 1983 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது, எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று டிசம்பர் மாதம் முடிய உள்ள பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.67 சதவீதம் உயர்ந்து 60,722.00 ரூபாயாக அளவீட்டை எட்டி 4 மாத உயர்வை தொட்டு உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 1.11 சதவீதம் உயர்ந்து 72,408 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவை தாண்டி இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனை நாளுக்கு நாள் பெரியதாகி வரும் வேளையில் அமெரிக்க, பிரிட்டன் உட்பட பல வல்லரசு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வேளையில் மத்திய கிழக்கு பொருளாதாரம் மற்றும் முதலீட்டு சந்தை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதேவேளையில் முதலீட்டு சந்தையின் தடுமாற்றத்தின் காரணமாக அதிகப்படியான முதலீடுகள் இந்திய சந்தையை விட்டு தொடர்ந்து வெளியேறி வரும் வேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இன்றைய நாணய சந்தையில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 83.09 ஆக இருக்கும் வேளையில் 83.60 வரையில் சரியும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தங்கம் விலையை சர்வதேச சந்தை விலை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காரணத்தால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் இன்று ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 750 ரூபாய் உயர்ந்து 56,600 ரூபாயாக உள்ளது.
இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 820 ரூபாய் உயர்ந்து 61,750 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 45,280 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
உள்நாட்டு சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நேற்றை விலையான 77,500 ரூபாயாக உள்ளது. இதோடு பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து 24,010 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?



Click it and Unblock the Notifications