தங்கம் விலை 6 மாத உயர்வு.. இந்த நேரத்தில் இப்படி நடக்குதே, ரொம்பக் கஷ்டம்..!!

இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச சந்தை அளவீட்டின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது, அந்த வகையில் அமெரிக்க டாலர் மதிப்புக் கணிசமாகச் சரிந்த நிலையில் பல முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதன் எதிரொலியாகச் சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது.

தங்கம் விலை இன்று மே 16 ஆம் தேதிக்கு பின்பு அதிகப்படியான விலையைப் பதிவு செய்து 6 மாத உச்சத்தைத் தொட்டு சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்து. அதிலும் குறிப்பாக இந்தத் திருமணச் சீசனில் திருமணத்தை நிச்சயம் செய்துள்ள குடும்பங்களுக்குப் பேரதிர்ச்சியாக உள்ளது.

தங்கம் விலை 6 மாத உயர்வு.. இந்த நேரத்தில் இப்படி நடக்குதே, ரொம்பக் கஷ்டம்..!!

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்று 2009 டாலரில் வர்த்தகம் செய்யப்பட்ட வேளையில் இன்று 2018 டாலர் வரையில் உயர்ந்தது. இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச தங்கம் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அடிப்படையில் மாறுபடுகிறது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இன்று 83.37 ஆக உள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 0.02 சதவீதம் மட்டுமே உயர்ந்து 61,550 ரூபாயாக உள்ளது. இதேபோல் டிசம்பர் மாத பியூச்சர்ஸ் ஆர்டரில் ஒரு கிலோ வெள்ளி விலை 0.42 சதவீதம் சரிந்து 74,490 ரூபாயாக உள்ளது.

இந்த நிலையில் நாட்டின் முக்கியமான நகரங்களில் ரீடைல் சந்தையில் தங்கம் விலை என்ன தெரியுமா..? குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெங்களூர், கொச்சி, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்க.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 57,800 ரூபாய், மும்பை - 57,350 ரூபாய், டெல்லி - 57,500 ரூபாய், கொல்கத்தா - 57,350 ரூபாய், பெங்களூர் - 57,350 ரூபாய், ஹைதராபாத் - 57,350 ரூபாய், கேரளா - 57,350 ரூபாய், புனே - 57,350 ரூபாய், பரோடா - 57,400 ரூபாய், அகமதாபாத் - 57,400 ரூபாய், ஜெய்ப்பூர் - 57,500 ரூபாய், லக்னோ - 57,500 ரூபாய், கோயம்புத்தூர் - 57,800 ரூபாய், மதுரை - 57,800 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 63,050 ரூபாய், மும்பை - 62,560 ரூபாய், டெல்லி - 62,710 ரூபாய், கொல்கத்தா - 62,560 ரூபாய், பெங்களூர் - 62,560 ரூபாய், ஹைதராபாத் - 62,560 ரூபாய், கேரளா - 62,560 ரூபாய், புனே - 62,560 ரூபாய், பரோடா - 62,610 ரூபாய், அகமதாபாத் - 62,610 ரூபாய்,ஜெய்ப்பூர் - 62,710 ரூபாய், லக்னோ - 62,710 ரூபாய், கோயம்புத்தூர் - 63,050 ரூபாய், மதுரை - 63,050 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 46240 ரூபாய், மும்பை - 45880 ரூபாய், டெல்லி - 46000 ரூபாய், கொல்கத்தா - 45880 ரூபாய், பெங்களூர் - 45880 ரூபாய், ஹைதராபாத் - 45880 ரூபாய், கேரளா - 45880 ரூபாய், புனே - 45880 ரூபாய், பரோடா - 45920 ரூபாய், அகமதாபாத் - 45920 ரூபாய், ஜெய்ப்பூர் - 46000 ரூபாய், லக்னோ - 46000 ரூபாய், கோயம்புத்தூர் - 46240 ரூபாய், மதுரை - 46240 ரூபாய்.

18 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 47,290 ரூபாய், மும்பை - 46,920 ரூபாய், டெல்லி - 47,040 ரூபாய், கொல்கத்தா - 46,920 ரூபாய், பெங்களூர் - 46,920 ரூபாய், ஹைதராபாத் - 46,920 ரூபாய், கேரளா - 46,920 ரூபாய், புனே - 46,920 ரூபாய், பரோடா - 46,960 ரூபாய், அகமதாபாத் - 46,960 ரூபாய், ஜெய்ப்பூர் - 47,040 ரூபாய், லக்னோ - 47,040 ரூபாய், கோயம்புத்தூர் - 47,290 ரூபாய், மதுரை - 47,290 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 81500 ரூபாய், மும்பை - 78500 ரூபாய், டெல்லி - 78500 ரூபாய், கொல்கத்தா - 78500 ரூபாய், பெங்களூர் - 78000 ரூபாய், ஹைதராபாத் - 81500 ரூபாய், கேரளா - 81500 ரூபாய், புனே - 78500 ரூபாய், பரோடா - 78500 ரூபாய், அகமதாபாத் - 78500 ரூபாய், ஜெய்ப்பூர் - 78500 ரூபாய், லக்னோ - 78500 ரூபாய், கோயம்புத்தூர் - 81500 ரூபாய், மதுரை - 81500 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+