தங்கம் எப்போதும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் நிலையில், மோசமான நிதி நிலை காலத்தில் எப்போதும் தங்கம் மீது பணத்தை கொட்டி பெரும் பணக்காரர்கள், அரசுகள் தங்களது பணத்தை பாதுகாக்கிறது. ஆனால் இத்தகைய சூழ்நிலையில் தங்கம் வாங்கும் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலை தான் தற்போது உருவாகியுள்ளது, அமெரிக்க, ஐரோப்பிய சந்தையில் வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகியும் போதிய பணம் இல்லாத சூழ்நிலையால் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் பெரும் முதலீடுகள் தங்கம் மீது திரும்பியுள்ளது. இதனால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை இந்தியாவில் எப்போதும் இல்லாமல் 60300 ரூபாய் வரையில் உயர்ந்தது, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2005 டாலர் வரையில் உயர்ந்தது.
இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் முன்னணி நகை கடன் சேவை நிறுவனங்களான முத்தூட் மற்றும் மணப்புரம் ஆகியவற்றின் நிலை என்ன..? தங்கம் விலை தடாலடி உயர்வு மற்றும் மக்களின் நிலை மூலம் எந்த அளவுக்கு இவ்விரு நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கும்..?
முத்தூட் மற்றும் மணப்புரம்
இந்தியாவின் முன்னணி தங்க கடன் சேவை வழங்கும் நிறுவனங்களான முத்தூட் மற்றும் மணப்புரம் நாடு முழுவதும் இயங்கி வரும் வேளையில் மிடில் கிளாஸ் மக்களின் அவசர நிதி தேவையை தங்க நகைகளை அடமானம் வைப்பது மூலம் தீர்க்கப்படுகிறது.
தங்க கடன்
இந்த நிலையில் மணப்புரம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் தங்கம் மீதான வர்த்தகம் 58.4 சதவீதம். இதேபோல் மூத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தில் மொத்த வர்த்தகத்தில் 98.4 சதவீதம் தங்க கடன் தான்.
தங்கம் விலை
இந்த நிலையில் தங்கம் விலை உச்சத்தை தொட்டு இருக்கும் வேளையில் போதுமான வருமானம் இல்லாத மக்கள் தங்கத்தை வைத்து அதிக பணம் பார்க்க துவங்குவார்கள். இதற்கு ஏற்றார் போல் பணவீக்கம், பணிநீக்கம் என சாமானிய மற்றும் நடத்தர மக்களை பதம் பார்க்கும் விஷயம் அதிகமாகவே உள்ளது.
தங்க கடன் அளவு
இந்த சூழ்நிலையில் மூத்தூட் மற்றும் மணப்புரம் நிறுவனத்தின் தங்க கடன் எண்ணிக்கையும், கடன் அளவும் அதிகரிக்கும். இது மக்களுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் லாபம் உள்ளது. உதாரணமாக சாதாரண காலக்கட்டத்தில் கிடைப்பதை காட்டிலும் தற்போது தங்கத்திற்கு கூடுதலான தொகை கடனாக கிடைக்கும்.
ரிஸ்க் அளவுகள்
இதேபோல் புதிய வாடிக்கையாளர்கள், வர்த்தகம் இந்த காலக்கட்டத்தில் கிடைக்கும். முத்தூட் மற்றும் மணப்புரம் ஆகியவை தங்கத்தை பெற்றுக்கொண்டு தான் கடன் அளிக்கும் காரணத்தால் ரிஸ்க் அளவுகள் மிகவும் குறைவு, கொடுக்கப்படும் கடனுக்கும் வட்டியை வசூலிக்கிறது. இதனால் தங்கம் விலை உயர்ந்தது தங்கத்தை வைத்து கடன் வாங்குபவர்களுக்கும், கடன் கொடுப்பவர்களுக்கும் நன்மை. ஆனால் புதிதாக தங்க நகை வாங்குவோருக்கு தான் பெரும் பிரச்சனை.
முக்கிய பகுதிகள்
இந்தியாவில் குஜராத், அந்திரா, தெலுங்கானா, கேரளா-வில் திருமணங்கள் நடக்கும் காரணத்தால் தங்கம் விலை உயர்வு பெரும் தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த 4 மாவட்டத்திலும் திருமணங்களில் தங்கம் மற்றும் தங்க நகைகள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் தங்கம் விலை உயர்வு பல குடும்பங்களின் சேமிப்பை பதம் பார்க்க உள்ளது.
வங்கி பிரச்சனை
அமெரிக்கா, ஐரோப்பாவில் வங்கி பிரச்சனைகள் தீரும் வரையில் தங்கம் விலை குறைய வாய்ப்புகள் குறைவு தான், அதிலும் முக்கியமாக அமெரிக்க பெடரல் வங்கியின் நாணய கொள்கை முடிவுகள் கட்டாயம் பெரும் தாக்கத்தை முதலீட்டு சந்தையில் ஏற்படுத்தும்.
ஜார்ஜ் அலெக்சாண்டர் முத்தூட்
இந்த நிலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜார்ஜ் அலெக்சாண்டர் முத்தூட் தங்கம் விலை சர்வதேச சந்தையில் 2150 டாலர் வரையில் உயரும் என கணித்துள்ளார். இது மட்டும் அல்லாமல் தங்கம் விலை உயரும் வேளையில் தங்க கடனுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரிக்கும் எனவும் உறுதி செய்துள்ளார்.
More From GoodReturns

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications