உலக பொருளாதார வளர்ச்சியில் அடுத்தடுத்து பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில், தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று (ஏப்ரல் 4, 2024) ஆசியச் சந்தை நேரத்தில், தங்கம் விலை ஒரு அவுன்ஸ்-க்கு அமெரிக்க டாலர் 2,300 என்ற புதிய வரலாற்றுச் சாதனையைத் தொட்டது.
இந்த உயர்வுக்குப் பல காரணிகள் காரணமாக இருந்தாலும் 2280 டாலரில் இருந்து தங்கத்தின் விலையை 2300 டாலருக்கு உயர்த்த முக்கியமான காரணம் தைவான்.

ஏற்கனவே உலகளாவிய பொருளாதாரத்தை ரஷ்யா- உக்ரைன் போர், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் போன்ற புவிசார் அரசியல் பிரச்சனைகளுக்கு மத்தியில் தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளது.
இதன் வாயிலாகவே தங்கம் விலை தடாலடியாக ஒரே நாளில் 20 டாலருக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. மேலும் தைவான் உலகளாவிய உற்பத்தியில் முக்கியமான பங்கீட்டை கொண்டு இருப்பதால் பொருளாதாரம், வர்த்தக சந்தையில் இதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.
தைவான் நாட்டில் நேற்றைய நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் இன்று வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உருவானது மூலம் மக்கள் பீதியில் ஆழ்ந்தனர்.
ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியான ஃபுகுஷிமா-வில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது, இது கடற்கரை நகரம் என்பதால் சுனாமி பாதிப்புக்கு அதிக வாய்ப்புள்ள வேளையில், சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடுக்கப்படவில்லை.
ஜப்பான் நாட்டின் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய - மத்தியதரைக்கடல் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் முதலீட்டுச் சந்தையில் கட்டாயம் அதிகரிக்கும்.
மேலும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்த திட்டவட்டமான முடிவுகள் தெரியாத நிலையில் பங்குச்சந்தையில் முதலீடுகள் அதிகரித்தும், அமெரிக்க டாலர் மதிப்பு (USD) சரிவடைந்தும் காணப்படுகிறது.
பிப்ரவரி 14ஆம் தேதிக்குப் பிறகு டாலரின் மிகப்பெரிய சரிவு இன்று பதிவாகியுள்ளது. இது தங்கத்தின் விலை உயர்வை இந்தியா போன்ற நாடுகளுக்குப் பாதிப்பைக் குறைக்கும், இந்தியா டாலரில் தங்கத்தை இறக்குமதி செய்யும்பட்சத்தில் டாலர் மதிப்பின் சரிவு தங்கம் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்கும்.
டாலர் மதிப்பின் சரிவின் காரணமாக எம்சிஎஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.03 சதவீதம் சரிந்து 69,775 ரூபாயாக உள்ளது. ஆனால் ரீடைல் சந்தையில் நிலைமை முற்றிலும் மாறுபடும்.
தங்கம் விலை ரீடைல் சந்தையில் வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் தங்கம் விலை 52000 ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த விலை உயர்வு இந்திய மக்கள் மத்தியில் திருமண சீசன் என்பதால் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் உயர்ந்து 65,450 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 490 ரூபாய் உயர்ந்து 71,400 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 360 ரூபாய் உயர்ந்து 52,360 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!



Click it and Unblock the Notifications