தங்கம் விலை கடந்த சில நாட்களாக மந்தமான நிலையிலேயே இருந்தது அனைவருக்கும் தெரியும், ஆனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கு முன்பு தங்கம் விலை எரிமலையாய் வெடிக்கும் என தமிழ் குட்ரிட்டன்ஸ் ஏற்கனவே கணித்திருந்தது. இதேபோல் அடுத்த சில நாட்களில் பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை கூட்டத்தில் துவங்க இருக்கும் வேளையில் நேற்றைய அமெரிக்க வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சுமார் 53 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.
தங்க விலை இன்று வெள்ளிக்கிழமை ஆசியச் சந்தையில் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்க டாலர் சரிவு மற்றும் அமெரிக்காவின் உற்பத்தியாளர் விலைக் குறியீடு (PPI) குறைவாக இருந்ததால், பெடரல் ரிசர்வ் (Fed) வட்டி விகிதத்தை அதிகமாகக் குறைக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தங்கம் என்பது பொதுவாக ஒரு பாதுகாப்பு சொத்து என்று கருதப்படுகிறது, குறிப்பாகப் பொருளாதாரத்தில் தடுமாற்றம் வரும் போதும், பணவீக்கத்தின் போதும் முதலீட்டாளர்களுக்குத் தங்கம் மிகவும் முக்கியமான சொத்தாக மாறுகிறது. உற்பத்தியாளர் விலைக் குறியீடு (PPI) குறைவாக இருந்த காரணத்தால் நேற்றைய அமெரிக்க வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் சரிவானது, தங்கத்திற்கான தேவையை அதிகரிக்கிறது, பத்திர முதலீடுகள் மீதான லாபமும் சரிவைச் சந்தித்தது.
இதன் எதிரொலியாகத் தங்க விலை சர்வதேச ஸ்பாட் சந்தையில் 2,525-2,530 என்ற முக்கிய விலை மட்டத்தை உடைத்து, தாறுமாறாக உயர்ந்துள்ளது. இது அடுத்த வாரங்களில் இன்னும் அதிகமாக உயரலாம் என்று சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2513 டாலரில் இருந்து 2568 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.50 சதவீதம் உயர்ந்து 73,190 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 0.69 சதவீதம் அதிகரித்து 87,700 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1200 ரூபாய் உயர்ந்து 68250 ரூபாயாக உள்ளது, வெள்ளி விலை கிலோவுக்கு 3500 ரூபாய் உயர்ந்து 95000 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications