Gold Rate in Chennai: இந்திய பொருளாதாரத்தின் தூணாக இருக்கும் நடுத்தர மக்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும் தங்கம் விலை இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் 1300 ரூபாய் உயர்ந்தது முதல் முறையாக 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 84,330 ரூபாய் என வரலாற்று உச்சத்தைத் தொட்டது.
இதேபோல் இன்று எம்சிஎக்ஸ் சந்தையிலும் ஏப்ரல் மாதம் 04 ஆம் தேதி முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.26 சதவீதம் அதிகரித்து 82,259 ரூபாயாக உள்ளது. ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 1200 ரூபாய் உயர்ந்து 77,300 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு சவரன் தங்கம் விலை 960 ரூபாய் உயர்ந்து 61,840 ரூபாயாக உள்ளது.

தங்க விலை வெள்ளிக்கிழமை ஆசியா சந்தை வர்த்தகம் துவங்கியதும் புதிய உச்சத்தைத் தொட்டதன் விளைவாக இந்தியச் சந்தையில் யாரும் எதிர்பார்க்காத உச்சத்தைத் தொட்டு உள்ளது. இதனால் நாளை பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்டாலும் தங்கம் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. காமெக்ஸ் பியூச்சர்ஸ் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை தற்போது 2,849 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.
இந்த தடாலடி உயர்வுக்கு மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வு குறித்த கணிப்பு ஒரு காரணமாக இருந்தாலும், இது ஒரு சிறிய அளவீட்டில் தான் நடந்துள்ளது. ஆனால் சர்வதேச சந்தையில் ஆசிய சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை கிட்டத்தட்ட 20 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து பெரும் அதிர்ச்சியை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது.
அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தின் உலக நாடுகள் மீதான இறக்குமதி வரி விதிப்புகள் கொள்ளை விடாப்பிடியாகப் பிடித்திருக்கும் வேளையில், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் சரி, அமெரிக்க ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கும் சரி பெரும் பிரச்சனையாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள காரணத்தால் அடுத்த சில மாதத்தில் சர்வதேச அளவில் பல்வேறு விதமான வர்த்தக பாதிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை மிகவும் பாதுகாப்பாக வைக்க மீண்டும் தங்கத்தின் மீது தனது முதலீடுகளை 2 மாதங்களுக்குப் பின்பு அதிகளவில் திருப்பியுள்ளனர். இதேபோல் டிரம்ப்-ன் கொள்கை அந்நாட்டின் பணவீக்கத்திலும் பாதிப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தான்
செப்டம்பர் மாதத்தில் இருந்து வரியைக் குறைக்கத் துவங்கிய ஃபெடரல் ரிசர்வ் (ஃபெட்) முதல் முறையாக வட்டி விகிதங்களை மாற்றாமல் வைப்பதாக அறிவித்தது. இது அமெரிக்கக் கருவூல பத்திர முதலீட்டின் மீதான லாபத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பையும் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 61840 ரூபாய், மும்பை - 61840 ரூபாய், டெல்லி - 61960 ரூபாய், கொல்கத்தா - 61840 ரூபாய், பெங்களூர் - 61840 ரூபாய், ஹைதராபாத் - 61840 ரூபாய், கேரளா - 61840 ரூபாய், புனே - 61840 ரூபாய், பரோடா - 61880 ரூபாய், அகமதாபாத் - 61880 ரூபாய், ஜெய்ப்பூர் - 61960 ரூபாய், லக்னோ - 61960 ரூபாய், கோயம்புத்தூர் - 61840 ரூபாய், மதுரை - 61840 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,730 ரூபாய், மும்பை - 7,730 ரூபாய், டெல்லி - 7,745 ரூபாய், கொல்கத்தா - 7,730 ரூபாய், பெங்களூர் - 7,730 ரூபாய், ஹைதராபாத் - 7,730 ரூபாய், கேரளா - 7,730 ரூபாய், புனே - 7,730 ரூபாய், பரோடா - 7,735 ரூபாய், அகமதாபாத் - 7,735 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,745 ரூபாய், லக்னோ - 7,745 ரூபாய், கோயம்புத்தூர் - 7,730 ரூபாய்,
மதுரை - 7,730 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,433 ரூபாய், மும்பை - 8,433 ரூபாய், டெல்லி - 8,448 ரூபாய், கொல்கத்தா - 8,433 ரூபாய், பெங்களூர் - 8,433 ரூபாய், ஹைதராபாத் - 8,433 ரூபாய், கேரளா - 8,433 ரூபாய், புனே - 8,433 ரூபாய், பரோடா - 8,438 ரூபாய், அகமதாபாத் - 8,438 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,448 ரூபாய், லக்னோ - 8,448 ரூபாய், கோயம்புத்தூர் - 8,433 ரூபாய், மதுரை - 8,433 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,385 ரூபாய், மும்பை - 6,325 ரூபாய், டெல்லி - 6,337 ரூபாய், கொல்கத்தா - 6,325 ரூபாய், பெங்களூர் - 6,325 ரூபாய், ஹைதராபாத் - 6,325 ரூபாய், கேரளா - 6,325 ரூபாய், புனே - 6,325 ரூபாய், பரோடா - 6,329 ரூபாய், அகமதாபாத் - 6,329 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,337 ரூபாய், லக்னோ - 6,337 ரூபாய், கோயம்புத்தூர் - 6,385 ரூபாய், மதுரை - 6,385 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,850 ரூபாய், மும்பை - 26,850 ரூபாய், டெல்லி - 26,850 ரூபாய், கொல்கத்தா - 26,850 ரூபாய், பெங்களூர் - 26,850 ரூபாய், ஹைதராபாத் - 26,850 ரூபாய், கேரளா - 26,850 ரூபாய், புனே - 26,850 ரூபாய், வதோதரா - 26,850 ரூபாய், அகமதாபாத் - 26,850 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,07,000 ரூபாய், மும்பை - 99,500 ரூபாய், டெல்லி - 99,500 ரூபாய், கொல்கத்தா - 99,500 ரூபாய், பெங்களூர் - 99,500 ரூபாய், ஹைதராபாத் - 1,07,000 ரூபாய், கேரளா - 1,07,000 ரூபாய், புனே - 99,500 ரூபாய், பரோடா - 99,500 ரூபாய், அகமதாபாத் - 99,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 99,500 ரூபாய், லக்னோ - 99,500 ரூபாய், கோயம்புத்தூர் - 1,07,000 ரூபாய், மதுரை - 1,07,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,895 ரூபாய்
குவைத் - KWD 25.65 - 7,203 ரூபாய்
மலேசியா - MYR 363 - 7,088 ரூபாய்
ஓமன் - OMR 33.30 - 7,494 ரூபாய்
கத்தார் - QAR 315.50 - 7,498 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 319 - 7,368 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,942 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 313.50 - 7,396 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,758 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 313.50 - 7,396 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 313.50 - 7,396 ரூபாய்
துபாய் (UAE) - AED 313.50 - 7,396 ரூபாய்
புஜைரா (UAE) - AED 313.50 - 7,396 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 313.50 - 7,396 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 313.50 - 7,396 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 315.50 - 7,498 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 33.30 - 7,494 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 319 - 7,368 ரூபாய்
இங்கிலாந்து - GBP 66.40 - 7,147 ரூபாய்
கனடா - CAD 125.25 - 7,496 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 124.80 - 6,731 ரூபாய்
நேபாளம் - NPR 12,840.90 - 8,024 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.90 - 7,332 ரூபாய்
குவைத் - KWD 27.90 - 7,835 ரூபாய்
மலேசியா - MYR 378 - 7,381 ரூபாய்
ஓமன் - OMR 35.50 - 7,989 ரூபாய்
கத்தார் - QAR 337.50 - 8,021 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 345 - 7,969 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 120.50 - 7,703 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 338.50 - 7,985 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 7,191 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 338.50 - 7,985 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 338.50 - 7,985 ரூபாய்
துபாய் (UAE) - AED 338.50 - 7,985 ரூபாய்
புஜைரா (UAE) - AED 338.50 - 7,985 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 338.50 - 7,985 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 338.50 - 7,985 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 337.50 - 8,021 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 35.50 - 7,989 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 345 - 7,969 ரூபாய்
இங்கிலாந்து - GBP 72.44 - 7,797 ரூபாய்
கனடா - CAD 132.25 - 7,915 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 136.10 - 7,340 ரூபாய்
நேபாளம் - NPR 13,957.50 - 8,721 ரூபாய்
More From GoodReturns

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?



Click it and Unblock the Notifications