தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் இந்தியாவில் ரீடைல் சந்தையில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆனாலும் ஆர்பிஐ, வங்கிகள், பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கி குவித்தாலும், ரீடைல் சந்தை விற்பனைக்கு ஈடுகொடுக்கும் டிமாண்ட் இல்லை.
இதனால் முழுக்க முழுக்க சர்வதேச வர்த்தக சந்தையின் போக்கின் அடிப்படையிலேயே தங்கம் விலை இந்தியாவில் நிர்யணம் செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. முன்பு இந்தியச் சந்தையில் இருக்கும் டிமாண்ட்க்கு ஏற்ப தங்கம் விலை சர்வதேச விலை போக்கிற்கும், உள்நாட்டிற்கும் சில வித்தியாசம் இருக்கும். ஆனால் இப்போது நிலைமை வேறு.

டாலர் மதிப்பில் கணக்கிடப்படும் சர்வதேச தங்கம் விலை, தொடர்ந்து இரண்டு நாட்களாகவும், கடந்த நான்கு வர்த்தக நாட்களில் மூன்று முறை உயர்வுடனும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இன்று ஆசிய சந்தை வர்த்தகத்தில் தங்கம் ஒரு புதிய வரலாற்று உச்சத்தை எட்டி, ஒரு அவுன்ஸ் சுமார் 3,077 டாலர் முதல் 3,078 டாலர் வரையில் வர்த்தகமானது.
இந்த திடீர் உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வரி விதிப்பதும், இதற்கு மற்ற நாடுகளும் பதிலடி வரியை விதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதே முக்கிய காரணமாகும்.
இப்படி பதிலுக்குப் பதில் வரியை விதித்தால் பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும். இதன் உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி என உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே சற்று அதிகமாகவே உள்ளது. இதனாலேயே பங்குச் சந்தைகளில் அடிக்கடி மந்தநிலை நிலவுகிறது, இத்தகைய சூழ்நிலையில் தான் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தைத் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
டிரம்ப்பின் வரி விதிப்பு அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறையக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது, இதை அந்நாட்டு மத்திய வங்கியும் உறுதி செய்துள்ளது. இதனால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக பத்திர சந்தையிலும் முதலீடுகள் குறைந்து வருகிறது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பிலும் மந்த நிலை உருவாகி தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தியுள்ளது. இதனால் ஏப்ரல் 2 டிரம்ப்-ன் வட்டி முடிவுகள், இதன் பின்பு ஏற்படும் பணவீக்கம், வேலைவாய்ப்பு, டாலர் மதிப்பு ஆகியவை நிலை பெறும் வரையில் தங்கம் விலை உயர்ந்துகொண்டே இருக்கும்.
டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது 25 சதவீதம் வரியை விதித்தது தொடர்ந்து ஏப்ரல் 3 முதல் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது 25% வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது வெறும் டிரைலர் என்ற வகையில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில் தான் இந்த வாரம் 3000 டாலரில் துவங்கிய ஒரு அவுன்ஸ் தங்கம் விலை தற்போது 3078 டாலர் வரையில் உயர்ந்துள்ளது, ஏற்கனவே சந்தை கணிப்புகள் 3300 டாலர் வரையில் உயரும் என கணிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போதைய வர்த்தக சூழ்நிலையை பார்க்கும் போது இது வரைவாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இந்திய ரீடைல் சந்தையில் இந்த வாரம் மட்டும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1200 ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1100 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?



Click it and Unblock the Notifications