இந்தியாவில் தீபாவளி பண்டிகையின் போது தங்கம் விற்பனை பொதுவாகவே அதிகமாகத் தான் இருக்கும், இதனால் தங்கம் விலையில் சிறிய அளவிலான உயர்வு ஏற்படுவது இயல்பு. ஆனால் தற்போது சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையும், போர் அச்சங்களும், நாணய மதிப்பில் ஏற்பட்டு உள்ள தடுமாற்றமும் தங்கம் விலையை இன்று புதிய வரலாற்று உச்சத்திற்குத் தள்ளியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காகத் தங்கம் வாங்கத் திட்டமிடுவோருக்கு இந்த இன்றைய வரலாற்று உச்ச விலை கட்டாயம் சோகத்தை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையில் தங்கம் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் கட்டாயம் இருக்கும் என்பது அடுத்த முக்கிய தகவலாக உள்ளது.

இன்று புதன்கிழமை வர்த்தகத்தில், உள்நாட்டில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிப்பு மற்றும் உலகளாவிய சந்தையின் தாக்கம் காரணமாகத் தங்க விலை உயர்ந்துள்ளது. டிசம்பர் 5-ம் தேதி முடிவடையும் MCX தங்கம் விலை 10 கிராமுக்கு 79,535 ஆக உயர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டது. தங்கம் விலை 10 கிராம் 0.47% உயர்ந்து 10 கிராமுக்கு 79,605 ரூபாயாக உள்ளது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2,786 டாலர் வரையில் உயர்ந்து புதிய வரலாற்று உச்ச விலையைப் பதிவு செய்துள்ளது. இன்றைய விலை உயர்வுக்கு இந்தியாவில் அதிகரித்துள்ள டிமாண்ட் ஒரு காரணமாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் வரலாற்று உச்சத்தை தொட முக்கியமான காரணம் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்த நிச்சயமற்ற தன்மை தான்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 650 ரூபாய் உயர்ந்து 74,400 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 710 ரூபாய் உயர்ந்து 81,160 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 520 ரூபாய் உயர்ந்து 59,520 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாயும், கிலோவுக்கு 1000 ரூபாயும் உயர்ந்து 1,09,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 140 ரூபாய் உயர்ந்து 28,270 ரூபாயாக உள்ளது.
தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு அமெரிக்கச் சந்தை முக்கிய காரணமாக உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு ஆகியவை தங்க விலையைப் பெரிய அளவில் உயர்த்தி வருகிறது. இதேபோல் பங்குச்சந்தையிலிருந்து அதிகப்படியான முதலீடுகள் பத்திர சந்தைக்கும் மாறி வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்காவின் சமீபத்திய பொருளாதார தரவுகள் தங்கத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. செப்டம்பரில் அமெரிக்க வேலை வாய்ப்புகள் 3.5 ஆண்டு சரிவிற்கு உள்ளாகியுள்ளது, இது தொழிலாளர் சந்தையில் மந்தநிலை ஏற்படலாம் என்பதைக் குறிக்கிறது. அதே நேரத்தில், அமெரிக்க நுகர்வோர் நம்பிக்கை அக்டோபரில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மிகப்பெரிய மாதாந்திர உயர்வைக் கண்டது, இது நுகர்வோர் மத்தியில் வட்டி குறைப்பிற்காக நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
அமெரிக்கத் தேர்தல், வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் புவி அரசியல் பதற்றம் போன்ற சாதகமான நிலைமைகளை மேற்கோள் காட்டி, சந்தை நிபுணர்கள் தங்க விலை குறித்து பெரும்பாலும் தொடர்ந்து உயரும் என்று கூறியுள்ளனர்.
முன்னணி தரகர் நிறுவனமான மோதிலால் ஒஸ்வால், உள்நாட்டுச் சந்தையில் தங்க விலை 78,500 முதல் 79,500 ரூபாய் வரையில் வர்த்தகம் செய்யலாம் என்று கணித்துள்ளது.
More From GoodReturns

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!



Click it and Unblock the Notifications