இந்தியாவில் மிகவும் முக்கியமான காலகட்டம் இது, எங்குத் திரும்பினாலும் திருமணங்கள் நடைபெறும் காரணத்தால் நகை கடைகளில் மக்கள் கூட்டம் கடந்த மாதத்தில் இருந்தே அலைமோதத் துவங்கியுள்ளது.
இந்தியாவில் திருமணம் என்றால் மண்டபம், சாப்பாடு, அலங்காரம், ஆடை எனப் பல இருந்தாலும் நகைகள் தான் எப்போதும் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியத் திருமணத்தில் அதிகப்படியான செலவுகளை ஈர்ப்பது தங்க நகைகள் தான், இதில் மணமகனுக்கான நகையும் அடங்கும், மணமகளுக்கான நகையும் அடங்கும்.

இந்த வருடம், பெரு நகரங்களில் இளம் ஜோடிகள் எப்போதும் இல்லாத வகையில் தங்க நகைகளை விரும்பாமல் பிளாட்டினம் நகைகளை அதிகம் விரும்பி வாங்கத் துவங்கியுள்ளனர், குறிப்பாக மணமகன்கள், ஆண்கள் மத்தியில் பிளாட்டினம் வாங்குவோர் எண்ணிக்கையும் அளவீடும் கடந்த ஒரு வருடத்தில் அதிகரித்துள்ளது.
இதற்கு ஏற்றார் போல் நகைக் கடைகளில் பிளாட்டினத்தில் செயின், பிரேஸ்லெட், தோடு, மோதிரம் ஆகியவை அதிகளவிலான டிசைனில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பிளாட்டினம் பிரிவில் ஆண்களுக்கான டிசைன்கள் அதிகம் குவிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 61000 ரூபாய்க்கு விற்கப்படும் வேளையில், பிளாட்டினம் 10 கிராம் 25000 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது. இந்த விலை வித்தியாசமும் மக்கள் தங்க நகைகள் வாங்குவதைக் குறைத்துவிட்டுப் பிளாட்டினம் நகைகளை வாங்க தூண்டியுள்ளது.
இதுகுறித்து ஜோய் அலுக்காஸ் சேர்மன் கூறுகையில் இந்திய ஆண்கள் இப்போது தடிமனான தங்க நகைகளை அணிய விரும்புவது குறைந்துள்ளது. தற்போது ஆண்கள் அதிகமாக மெல்லிசான பிளாட்டினம் செயின்களை அணிய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
இந்த டிரெண்ட் தொடர்ந்தால் ஆண்கள் நகை பிரிவில் பிளாட்டினம் முக்கியப் பங்கீட்டை வகிக்க வாய்ப்பு உள்ளது, இதேபோல் ஆண்கள் நகை பிரிவில் பிளாட்டினம் நகை விற்பனை 25-30 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் ஜோய் அலுக்காஸ் சேர்மன் தெரிவித்துள்ளார்.
ஆண்கள் மத்தியில் கடந்த 6-7 வருடத்தில் தங்க நகைகளை அதிகம் அணிவது டிரெண்டான நிலையில் கடந்த ஒரு வருடத்தில் தங்க பத்திரம், தங்க EFT ஆகியவற்றில் அதிகம் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இந்த நிலையில் தான் தங்க நகை மீதான ஆசை தற்போது பிளாட்டினம் மீது திரும்பியுள்ளது.
இந்தியாவில் நவம்பர் 23 முதல் டிசம்பர் 15 வரையிலான 23 நாட்கள் திருமணச் சீசனாகும், இதனால் நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும், அனைத்து மதத்தினரும் இக்காலகட்டத்தில் திருமணம் செய்துகொள்வார்கள்.
இந்த வருடம் நவம்பர் 23 முதல் டிசம்பர் 15 வரையிலான 23 நாட்களில் நாடு முழுவதும் சுமார் 38 லட்சம் திருமணங்கள் இந்தியா முழுவதும் நடைபெறும் என்றும், இதன் மூலம் சுமார் ரூ.4.74 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications