எந்தொரு பொருளாதார சூழ்நிலையிலும் தங்கம் மீதான முதலீடு என்பது மிகவும் பாதுகாப்பான ஒன்றாக இருப்பது மட்டும் அல்லாமல், பெரும் முதலீட்டு இழப்பை ஈடுக்கட்டவும், அவரச காலத்தில் நிதி திரட்டவும் தங்கம் முக்கிய கருவியாக இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில் செப்டம்பர் 19- 20 ஆம் தேதிகளில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை சுமார் 2 வார உயர்வுக்கு சென்றுள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் ஒரு அவுன்ஸ் தங்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1935 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இந்த நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையிலும், சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் பல்வேறு கேள்விகள் குறிப்பாக சீனா பொருளாதார மந்த நிலை, கச்சா எண்ணெய் 100 டாலர் வரையில் உயர்வு ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதன் மூலம் இன்று சர்வதேச சந்தையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1935 டாலர் வரையில் உயர்ந்து 2 வார உச்சத்தை தொட்டு உள்ளது. இந்த நிலையில் இந்திய சந்தையில் ஒரு பவுன் தங்கம் விலை 120 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்னையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 55,500 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் ஒரு பவுன் தங்கம் விலை 80 ரூபாய் வரையில் உயர்ந்து 44,400 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 10 கிராம் தங்கம் 60,550 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 300 ரூபாய் உயர்ந்து 1 கிலோ 78,300 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,500 ரூபாய், மும்பை - 55,200 ரூபாய், டெல்லி - 55,350 ரூபாய், கொல்கத்தா - 55,200 ரூபாய், பெங்களூர் - 55,200 ரூபாய், ஹைதராபாத் - 55,200 ரூபாய், கேரளா - 55,200 ரூபாய், புனே - 55,200 ரூபாய், பரோடா - 55,250 ரூபாய், அகமதாபாத் - 55,250 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,350 ரூபாய், லக்னோ - 55,350 ரூபாய், கோயம்புத்தூர் - 55,500 ரூபாய், மதுரை - 55,500 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,550 ரூபாய், மும்பை - 60,220 ரூபாய், டெல்லி - 60,370 ரூபாய், கொல்கத்தா - 60,220 ரூபாய், பெங்களூர் - 60,220 ரூபாய், ஹைதராபாத் - 60,220 ரூபாய், கேரளா - 60,220 ரூபாய், புனே - 60,220 ரூபாய், பரோடா - 60,270 ரூபாய், அகமதாபாத் - 60,270 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,370 ரூபாய், லக்னோ - 60,370 ரூபாய், கோயம்புத்தூர் - 60,550 ரூபாய், மதுரை - 60,550 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44400 ரூபாய், மும்பை - 44160 ரூபாய், டெல்லி - 44280 ரூபாய், கொல்கத்தா - 44160 ரூபாய், பெங்களூர் - 44160 ரூபாய், ஹைதராபாத் - 44160 ரூபாய், கேரளா - 44160 ரூபாய், புனே - 44160 ரூபாய், பரோடா - 44200 ரூபாய், அகமதாபாத் - 44200 ரூபாய், ஜெய்ப்பூர் - 44280 ரூபாய், லக்னோ - 44280 ரூபாய், கோயம்புத்தூர் - 44400 ரூபாய், மதுரை - 44400 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 78300 ரூபாய், மும்பை - 74800 ரூபாய், டெல்லி - 74800 ரூபாய், கொல்கத்தா - 74800 ரூபாய், பெங்களூர் - 74000 ரூபாய், ஹைதராபாத் - 78300 ரூபாய், கேரளா - 78300 ரூபாய், புனே - 74800 ரூபாய், பரோடா - 74800 ரூபாய், அகமதாபாத் - 74800 ரூபாய், ஜெய்ப்பூர் - 74800 ரூபாய், லக்னோ - 74800 ரூபாய், கோயம்புத்தூர் - 78300 ரூபாய், மதுரை - 78300 ரூபாய்.


Click it and Unblock the Notifications