தங்கம், வெள்ளி விலையில் இந்த வாரம் மிகப்பெரிய தடுமாற்றம் இருந்து வருகிறது, காலையில் உயர்ந்த விலை மாலையில் குறைவது, ஒரு நாள் தடாலடியாக உயர்ந்தால் மற்றொரு நாள் சரிவு, இப்படி மக்களையும், முதலீட்டாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்திய உலோகசந்தை தற்போது புதிய பாதையை நோக்கி செல்ல துவங்கியுள்ளது. இதனால் தங்கம், வெள்ளி விலை இனி தொடர்ந்து உயரும் என கணிக்கப்படுகிறது.
இன்று சென்னை ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1000 ரூபாய் உயர்ந்து 1,29,000 ரூபாயாக உள்ளது, இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 800 ரூபாய் உயர்ந்து 1,03,200 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1 கிலோவுக்கு 7000 ரூபாய் உயர்ந்து 2,75,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 1,020 ரூபாய் உயர்ந்து 65,580 ரூபாயாக உள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 4460 டாலரில் இருந்து 4509 டாலருக்கு உயர்ந்துள்ளது. இந்த உயர்வுக்கு பின்னால் இருக்கும் காரணம் தான் கவனிக்க கூடிய விஷயமாக உள்ளது. ஏனென்றால் இந்த ஒரு விஷயம் தான் தங்கம், வெள்ளி விலை உயர்வை இனி தீர்மானிக்க போகிறது.
மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடியும் நேரத்தில் தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர்ந்து, காலையில் பதிவான மொத்த சரிவையும் ஈடு செய்து ஷாக் கொடுத்தது. 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.04 சதவீதம் உயர்ந்து 1,38,875 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை 0.29 சதவீதம் மட்டுமே சரிந்து 2,52,002 ரூபாயாக உள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இந்த வாரம் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சுமார் 4 சதவீதம் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம். தங்கம், வெள்ளி விலை இனி எப்படியிருக்கும்..?
முக்கியமான விஷயங்கள்
அமெரிக்காவில் வெளியான வேலைவாய்ப்பு தரவுகளும், டிரம்ப்-ன் கிரீன்லாந்து கைப்பற்றும் கனவும் அதன் மூலம் ஐரோப்பிய நாடுகள் மத்தியிலும், NATO அமைப்பில் உருவான அதிர்வுகளும் முதலீட்டு சந்தைக்கு கலவையான சிக்னலை அளித்ததால், முதலீட்டாளர்கள் இந்த வார இறுதியில் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதில் முக்கியமாக அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் முதலீட்டு சந்தைக்கு புதிய திருப்பத்தை கொடுத்துள்ளது.
அமெரிக்க வேலைவாய்ப்பு ரிப்போர்ட்
அமெரிக்காவில் டிசம்பர் மாதத்திற்கான வேலைவாய்ப்பு அறிக்கை எதிர்பார்த்த அளவுக்கு அதிக வேலைகள் உருவாக்கப்படவில்லை என்று காட்டுகிறது. இது நவம்பர் மாத எண்ணிக்கையை விடவும் மிக குறைவாக இருந்தது, பொதுவாக டிசம்பர் மாதம் விடுமுறை காலம் என்பதால் வேலைவாய்ப்பு அதிகமாக உருவாகப்பட்ட வேண்டும், ஆனால் இது நடக்கவில்லை என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கேள்வியாக உள்ளது. ஆனாலும் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவாகவே உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு
இந்த வேலைவாய்ப்பு தரவுக்கு அமெரிக்க பொருளாதார சந்தையில் இருக்கும் மந்தநிலையை காட்டும் காரணத்தால் முதலீட்டு சந்தைக்கு கலவையான சிக்னல் வந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் குறைந்தபட்சம் குறுகிய காலத்திற்கு அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு சற்று குறைந்துள்ளது.
இதன்மூலம் பெட் இந்த ஆண்டு 50 அடிப்படை புள்ளிகள் (0.50 சதவீதம்) வட்டி விகிதத்தை குறைக்கும் என்று வர்த்தகர்கள் நம்புகின்றனர். இதனால் தங்கத்தின் மீதான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வட்டி விகிதம் குறையும் போது, தங்கம் போன்ற சொத்துக்களின் மதிப்பு உயரும் என்பதால், தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்வு பாதையிலேயே இருக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications