தங்கம் விலை 7 மாத சரிவாம்.. இதைவிட என்ன வேணும்..?

சர்வதேச பொருளாதாரத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், முதலீடுகள் அனைத்தும் பாதுகாப்பான முதலீட்டு சந்தை பக்கம் திரும்பி செல்ல துவங்கியுள்ளது. குறிப்பாக டாலர் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்க பத்திர சந்தையில் அதிகளவில் முதலீடுகள் குவிந்துள்ளது.

இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1842 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இன்று 1821 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதேவேளையில் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

தங்கம் விலை 7 மாத சரிவாம்.. இதைவிட என்ன வேணும்..?

மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1.39 சதவீதம் சரிந்து 56,798 ரூபாயாக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை 4.15 சதவீதம் சரிந்து 66,958 ரூபாயாக குறைந்துள்ளது. இதன் மூலம் இந்திய ரீடைல் சந்தையிலும் இதன் தாக்கம் தெரிகிறது.

ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 660 ரூபாய் குறைந்து 52900 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 720 ரூபாய் குறைந்து 57,710 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 528 ரூபாய் குறைந்து 42,320 ரூபாயாக உள்ளது.

மேலும் ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 2000 ரூபாய் குறைந்து 73,500 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 1130 ரூபாய் குறைந்து 23200 ரூபாயாக உள்ளது. கடந்த 9 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 52,900 ரூபாய், மும்பை - 52,600 ரூபாய், டெல்லி - 52,750 ரூபாய், கொல்கத்தா - 52,600 ரூபாய், பெங்களூர் - 52,600 ரூபாய், ஹைதராபாத் - 52,600 ரூபாய், கேரளா - 52,600 ரூபாய், புனே - 52,600 ரூபாய், பரோடா - 52,650 ரூபாய், அகமதாபாத் - 52,650 ரூபாய், ஜெய்ப்பூர் - 52,750 ரூபாய், லக்னோ - 52,750 ரூபாய், கோயம்புத்தூர் - 52,900 ரூபாய், மதுரை - 52,900 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 57,710 ரூபாய், மும்பை - 57,380 ரூபாய், டெல்லி - 57,530 ரூபாய், கொல்கத்தா - 57,380 ரூபாய், பெங்களூர் - 57,380 ரூபாய், ஹைதராபாத் - 57,380 ரூபாய், கேரளா - 57,380 ரூபாய், புனே - 57,380 ரூபாய், பரோடா - 57,430 ரூபாய், அகமதாபாத் - 57,430 ரூபாய், ஜெய்ப்பூர் - 57,530 ரூபாய், லக்னோ - 57,530 ரூபாய், கோயம்புத்தூர் - 57,710 ரூபாய், மதுரை - 57,710 ரூபாய்.

தங்கம் விலை 7 மாத சரிவாம்.. இதைவிட என்ன வேணும்..?

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 42320 ரூபாய், மும்பை - 42080 ரூபாய், டெல்லி - 42200 ரூபாய், கொல்கத்தா - 42080 ரூபாய், பெங்களூர் - 42080 ரூபாய், ஹைதராபாத் - 42080 ரூபாய், கேரளா - 42080 ரூபாய், புனே - 42080 ரூபாய், பரோடா - 42120 ரூபாய், அகமதாபாத் - 42120 ரூபாய், ஜெய்ப்பூர் - 42200 ரூபாய், லக்னோ - 42200 ரூபாய், கோயம்புத்தூர் - 42320 ரூபாய், மதுரை - 42320 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 73500 ரூபாய், மும்பை - 71000 ரூபாய், டெல்லி - 71000 ரூபாய், கொல்கத்தா - 71000 ரூபாய், பெங்களூர் - 71500 ரூபாய், ஹைதராபாத் - 73500 ரூபாய், கேரளா - 73500 ரூபாய், புனே - 71000 ரூபாய், பரோடா - 71000 ரூபாய், அகமதாபாத் - 71000 ரூபாய், ஜெய்ப்பூர் - 71000 ரூபாய், லக்னோ - 71000 ரூபாய், கோயம்புத்தூர் - 73500 ரூபாய், மதுரை - 73500 ரூபாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+