இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. ஏப்ரல் 22ஆம் தேதி அன்று இந்தியாவில் ரீடெய்ல் சந்தையில் 24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாய் என்ற மைல் கல்லை எட்டியது. அதேபோல சர்வதேச சந்தையில் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,400 டாலர்கள் என வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.
எம்சிஎக்ஸ் (MCX) வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவாக 10 கிராம் தங்கத்தின் விலை ஆனது 99,178 ரூபாய் என உச்சத்தை அடைந்திருக்கிறது. திங்கட்கிழமையுடன் ஒப்பிடும்போது ஒரே நாளில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 1900 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஜிஎஸ்டி வரி இல்லாமல் பிசிக்கல் மார்க்கெட்டில் தங்கத்தின் விலை 10 கிராம் 97,200 ரூபாய் என உள்ளது. இத்துடன் மூன்று சதவீதம் ஜிஎஸ்டி வரியை சேர்க்கும்போது 10 கிராம் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாய் என்ற அளவினை கடந்தது.

வெள்ளியை பொருத்தவரை சில்வர் மே ஃபியூச்சர்ஸ் கான்ட்ராக்ட் நேற்றைய தினம் ஒப்பிடும்போது இன்று 0.33 சதவீதம் அதாவது சில்வர் ஃபியூச்சர்ஸ் கான்ட்ராக்டில் ஒரு கிலோ விலை 95 ,562 ரூபாய் என உயர்ந்திருக்கிறது. திங்கள்கிழமை அன்று கோல்ட் ஜூன் பியூச்சர்ஸ் கான்ட்ராக்ட் 10 கிராம் 2.13 சதவீதம் உயர்ந்து 97,279 ரூபாய் என வர்த்தகமானது. சில்வர் மே பியூச்சர்ஸ் கான்ட்ராக்ட் 0.2 சதவீதம் உயர்ந்து 95,247 ரூபாய் என வர்த்தகமானது. செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் தங்கத்தின் மதிப்பும் வெள்ளியின் மதிப்பும் உயர்ந்திருக்கிறது.
சர்வதேச சந்தைகளை பொருத்தவரை தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலையுமே அதிகபட்ச ஏற்ற இறக்கங்களை காட்டின. டாலர் இன்டெக்ஸ் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவருக்கும் இடையே வட்டி விகிதங்களை குறைப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதங்களே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் 0.1 6 சதவீதம் குறைந்து 98.12 என்ற அளவுக்கு சரிந்தது. அமெரிக்க டாலர் மீதான மதிப்பு சரிவடைந்து வருவதன் காரணமாகவே சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போரும் தங்கத்திற்கான டிமாண்ட்டை இன்னும் அதிகரிக்க செய்திருக்கிறது. சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை மற்றும் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக மோதல் ஆகிய இரண்டும் தொடர்ந்து தங்கத்தின் விலையை உயர செய்கின்றன.
அடுத்து வரும் நாட்களிலும் தங்கத்தின் விலையில் நாம் பல உச்சங்களை காணலாம் என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். கமாடிட்டி ஆய்வாளர் மனோஜ் குமார் ஜெயின் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் கோல்ட் சப்போர்ட் லெவல் 96,600-96,100 ரூபாய் வரையும் ரெஸிஸ்டென்ஸ் லெவல் 97,700-98,400 ரூபாய் வரையும் இருக்கும் என கூறியுள்ளார். சில்வருக்கு சப்போர்ட் லெவல் 94,650-94,000 ரூபாய் வரையும் ரெஸிஸ்டென்ஸ் லெவல் 96,000-96,650 ரூபாய் வரையும் இருக்கும் என கூறியுள்ளார்.
இந்தியாவில் தலைநகர் டெல்லியில் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 57,184 ரூபாய்க்கும் , 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 60,984 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மும்பையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 57,496 ரூபாய்க்கும் , 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 61,264 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 56,912 ரூபாய்க்கும் , 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 60,632 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஐதராபாத்தில் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 56,896 ரூபாய்க்கும் , 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 60,640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications