தங்கம் விலை கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து துவங்கிய ஆசிய சந்தை வர்த்தகத்தில் வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சமானிய மக்களை தாண்டி தற்போது பெரும் முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது. முதலீட்டு சந்தையில் உருவான பதற்றம் தான் தங்கம் மீண்டும் முக்கிய முதலீடாக மாறியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சர்வதேச வர்த்தக சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை 0.5 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸுக்கு 4,501.44 டாராக உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக துவங்கிய சில மணிநேரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,530.60 டாலர் என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது.

இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 70 ரூபாய் உயர்ந்து 12,890 ரூபாயாக உள்ளது. 24 கேரட் தங்கம் விலை 76 ரூபாய் உயர்ந்து 14,062 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை 560 ரூபாய் உயர்ந்து 1,03,120 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 9000 ரூபாய் உயர்ந்து 2.54 லட்சம் ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 2780 ரூபாய் குறைந்து 64,630 ரூபாயாக உள்ளது.
டாலர் மதிப்பில் தடுமாற்றம், ஏஐ பங்குகள் - ஏஐ முதலீட்டில் தடுமாற்றம், சீனா - தைவான் குறித்து பென்டகன் வெளியிட்ட ரிப்போர்ட், ரஷ்யா - உக்ரைன் மத்தியில் மீண்டும் தீவிரமாகும் போர் தாக்குதல் ஆகியவை தங்கத்தை தற்போது முக்கியமான மற்றும் பாதுகாப்பான முதலீடாக மாற்றியுள்ளதால் தங்கத்துக்கு தேவை உயர்ந்துள்ளது.
இதேபோல் 2026ஆம் ஆண்டில் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் கூடுதலாக 1-2 முறை வட்டி விகிதம் குறைக்கும் எதிர்பார்ப்பும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரிய மாற்றத்தை காட்டுகிறது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி குறையும் போது தங்கம் முதலீடு ஈர்க்கிறது. டாலர் மதிப்பு குறைவது தங்க விலையை உயர்த்தும்.
தங்கம் விலை 2025ஆம் ஆண்டு இறுதியில் 2500 டாலர் என்ற பென்ச்மார்க் அளவீட்டை தொட்டு சாதனை படைத்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் $4,530க்கு மேல் உயர்ந்துள்ள நிலையில், இன்றைய வர்த்தக முடிவில் 4550 டாலரை தாண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
More From GoodReturns

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!



Click it and Unblock the Notifications