திங்கட்கிழமை காலை ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 900 ரூபாய் உயர்ந்து 1,24,600 ரூபாயாக இருந்தது. இதன் மூலம் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 784 ரூபாய் உயர்ந்து 99,680 ரூபாயாக உள்ளது 1 லட்ச அளவீட்டை நெருங்கியிருந்த நிலையில், சர்வதேச வர்த்தக போக்கை வைத்து மாலை வர்த்தகத்தில் 1 லட்ச அளவீட்டை தாண்டும் குட்ரிட்டன்ஸ் தளம் கணித்திருந்த நிலையில், அப்படியே நடந்துள்ளது.
இன்று மாலை வர்த்தகத்தில் தங்கம் விலை பெரிய உயர்வை சந்தித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120ஆகவும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515ஆகவும் உள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் விலை 145 ரூபாய் உயர்ந்துள்ளது. இது 2025ஆம் ஆண்டின் அதிகபட்ச விலை. தங்கம் விலை அக்டோபர் 17 அன்று ரூ.97,600 (கிராமுக்கு ரூ.12,200) என்ற உச்சத்தை தாண்டி இப்போது புதிய உச்சம் படைத்துள்ளது.

ஜனவரி 1, 2025 அன்று சவரன் ரூ.57,200, இதேபோல் கிராம் ரூ.7,150 ஆக இருந்தது. இப்போது ரூ.1,00,120ஆக உயர்ந்துள்ளது. இது ரூ.42,920 உயர்வு அல்லது 75 சதவீத உயர்வு. இந்த உயர்வு தங்கத்தை பாதுகாப்பு முதலீடாக வைத்திருப்பவர்களுக்கு லாபம் தந்தாலும், புதிதாக தங்கம் வாங்குபவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. திருமணம், பண்டிகை போன்ற சீசன்களில் தங்க தேவை அதிகரிப்பதால் இதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணம் அமெரிக்க மத்திய வங்கியின் (Fed) டிசம்பர் வட்டி குறைப்பு தான். இதே தொடர்ந்கு ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.25 சதவீதமாக மாற்றியது. அடுத்த ஆண்டு மேலும் குறைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு டாலரை பலவீனப்படுத்தியது.
பொதுவாத டாலர் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை தானாக உயரும். உலகளாவிய அச்சம், பொருளாதார நிச்சயமின்மை தங்கத்தை பாதுகாப்பு சொத்தாக தேட வைக்கிறது. இதனால் உலக சந்தையில் தங்க தேவை அதிகரித்து விலை உயர்ந்தது.
தங்கத்தை போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. காலை வர்த்தகத்தில் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலை வர்த்தகத்தில் கூடுதலாக கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.215ஆகவும், கிலோவுக்கு ரூ.2,15,000ஆகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications