அமெரிக்க டாலர் ஆதிக்கத்தாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் உலக நாடுகளில் பணவீக்கம் குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் அதிகளவிலான முதலீடுகள் பத்திர சந்தைக்குள் குவிகிறது. இதனால் தங்கம் மீதான முதலீடுகள் வெளியேறி கடந்த 6 நாட்களாக குறைந்து 2 மாத சரிவுக்கு தங்கம் விலை வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது, நேற்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1877 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 1848 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவில் எதிரொலித்து 2 மாத சரிவுக்கு வந்துள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பியூச்சர்ஸ் சந்தையில் 0.47 சதவீதம் சரிந்து 57,575.00 ரூபாய் விலையிலும், வெள்ளி விலை 1.03 சதவீதம் சரிந்து 69,870 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் இந்திய ரீடைல் சந்தையிலும் இதன் தாக்கம் தெரிகிறது.
ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் குறைந்து 53,600 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 330 ரூபாய் குறைந்து 58,470 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 42,880 ரூபாயாக உள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 1500 ரூபாய் குறைந்து 76,000 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 210 ரூபாய் குறைந்து 24160 ரூபாயாக உள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டுமே தங்கம் விலை கிராமுக்கு 161 ரூபாய் ரீடைல் சந்தையில் குறைந்துள்ளது.
அமெரிக்காவின் ஷட்டவுன் பிரச்சனை, பிரிட்டன் ரெசிஷன் அச்சம், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலர் வரையில் உயர்ந்து வருவது என பல பிரச்சனைக்கு மத்தியில் டாலர் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து அதன் ஆதிக்கம் உயர்வதால் தங்கம் விலையில் இருக்கும் தற்போதைய தடுமாற்றம் தொடரும். இப்படியிருக்கையில் டாலர் மதிப்பும், தங்கம் விலையை கவனித்து வாங்கினால் அதிகப்படியான லாபச்தை பெற முடியும்.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 53,600 ரூபாய், மும்பை - 53,350 ரூபாய், டெல்லி - 53,500 ரூபாய், கொல்கத்தா - 53,350 ரூபாய், பெங்களூர் - 53,350 ரூபாய், ஹைதராபாத் - 53,350 ரூபாய், கேரளா - 53,350 ரூபாய், புனே - 53,350 ரூபாய், பரோடா - 53,400 ரூபாய், அகமதாபாத் - 53,400 ரூபாய், ஜெய்ப்பூர் - 53,500 ரூபாய், லக்னோ - 53,500 ரூபாய், கோயம்புத்தூர் - 53,600 ரூபாய், மதுரை - 53,600 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 58,470 ரூபாய், மும்பை - 58,200 ரூபாய், டெல்லி - 58,350 ரூபாய், கொல்கத்தா - 58,200 ரூபாய், பெங்களூர் - 58,200 ரூபாய், ஹைதராபாத் - 58,200 ரூபாய், கேரளா - 58,200 ரூபாய், புனே - 58,200 ரூபாய், பரோடா - 58,250 ரூபாய், அகமதாபாத் - 58,250 ரூபாய், ஜெய்ப்பூர் - 58,350 ரூபாய், லக்னோ - 58,350 ரூபாய், கோயம்புத்தூர் - 58,470 ரூபாய், மதுரை - 58,470 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 42880 ரூபாய், மும்பை - 42680 ரூபாய், டெல்லி - 42800 ரூபாய், கொல்கத்தா - 42680 ரூபாய், பெங்களூர் - 42680 ரூபாய், ஹைதராபாத் - 42680 ரூபாய், கேரளா - 42680 ரூபாய், புனே - 42680 ரூபாய், பரோடா - 42720 ரூபாய், அகமதாபாத் - 42720 ரூபாய், ஜெய்ப்பூர் - 42800 ரூபாய், லக்னோ - 42800 ரூபாய், கோயம்புத்தூர் - 42880 ரூபாய், மதுரை - 42880 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 76000 ரூபாய், மும்பை - 73500 ரூபாய், டெல்லி - 73500 ரூபாய், கொல்கத்தா - 73500 ரூபாய், பெங்களூர் - 73500 ரூபாய், ஹைதராபாத் - 76000 ரூபாய், கேரளா - 76000 ரூபாய், புனே - 73500 ரூபாய், பரோடா - 73500 ரூபாய், அகமதாபாத் - 73500 ரூபாய், ஜெய்ப்பூர் - 73500 ரூபாய், லக்னோ - 73500 ரூபாய், கோயம்புத்தூர் - 76000 ரூபாய், மதுரை - 76000 ரூபாய்.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?



Click it and Unblock the Notifications