உலக அளவில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இது சாமானிய மக்களுக்கு சற்றே நிம்மதி அளிக்கும் வகையில் இருக்கிறது.
சென்னையில் தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் இந்த மாத தொடக்கமான ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒரு கிராம் 9,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து தங்கத்தின் விலை படிப்படியாக ஏற்றம் கண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி 1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 9470 ரூபாய் என உயர்வு கண்டு ஒரு சவரன் 75, 760 என உச்சத்தை எட்டியது. தங்கத்தின் இந்த விலை உயர்வு சாமானிய மக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது .

ஆகஸ்ட் மாத நிலவரம்: ஆனால் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு பின்னர் தங்கம் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஒரு கிராம் 9445 ரூபாய்க்கு விற்பனையானது. 10ஆம் தேதி விலை மாறவில்லை. திங்கட்கிழமையான ஆகஸ்ட் 11ஆம் தேதி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 9375 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆகஸ்ட் 12ஆம் தேதி 9295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் நேற்றைய தினம் மேலும் விலை குறைந்து 9290 ரூபாய் என விற்பனையானது.
இன்று விலை: இன்றைய தினம் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை ஒரு கிராம் 9290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 74 ,320 ரூபாயாக இருக்கிறது. தங்கத்தின் விலையை பொறுத்தவரை ஆகஸ்ட் 8ஆம் தேதி விலையுடன் ஒப்பிட்டால் ஒரு கிராம் 180 ரூபாய் வரை சரிவடைந்து இருக்கிறது, ஒரு சவரனுக்கு 1440 ரூபாய் விலை குறைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாயும் ஒரு சவரனுக்கு என பார்த்தால் 680 ரூபாயும் விலை குறைவு கண்டிருக்கிறது.
24 கேரட் தங்கம்: சென்னையில் இன்றைய தினம் 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை நேற்றைய விலையில் இருந்து மாறாமல் 1 கிராம் 10,135 ரூபாய்க்கும் ஒரு சவரன் 81 ,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கிராம் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 7,675 ரூபாய்க்கும் ஒரு சவரன் 61,400 க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் விலை உயர்ந்த 126 ரூபாய்க்கும் 1 கிலோ வெள்ளி 1,26,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
விலை குறைவுக்கு காரணம்: அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை மற்றும் தற்காலிகமாக சீனாவிற்கான வரி விதிப்பை அமெரிக்கா தள்ளி வைத்திருப்பது மற்றும் ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஆகியவை தங்கத்தின் விலையை சற்றே குறைய வைத்திருக்கின்றன. இனி அமெரிக்கா மத்திய வங்கியின் வரி குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டால் தங்கத்தின் விலையில் மேலும் மாற்றங்களை காணலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம், வெள்ளி விலை 3-8% சரியும் அபாயம்.. ஈரான் - அமெரிக்கா போருக்கு மத்தியில் திடீர் திருப்பம்..!!

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!



Click it and Unblock the Notifications