சர்வதேச காரணிகளை பொறுத்தும் தேவையை பொறுத்தும் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஈரான் இஸ்ரேல் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததால் இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்தது.
தங்கம் விலை: தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்ததால் சாமானிய மக்கள் தங்கம் தங்களுக்கு எட்டாக்கனியாக மாறிவிட்டது என வருத்தமடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு பின் தங்கம் சவரனுக்கு விலை 74,000க்கும் கீழ் குறைந்துள்ளது.

சவரன் ரூ.440 குறைந்தது: இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 55 ரூபாய் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் நேற்று 9265 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 9210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு 440 ரூபாய் விலை குறைந்துள்ளது. நேற்றைய தினம் 74120 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று 73,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்தது தங்கம் விலை: 24 கேரட் தங்கமும் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் நேற்று 10,107 ரூபாய்க்கு விற்கப்பட்டது இன்று 60 ரூபாய் குறைந்து 10,047 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல 24 கேரட் தங்கம் ஒரு சவரன் நேற்றை விட இன்று 440 ரூபாய் விலை குறைந்துள்ளது. நேற்று 80,856 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று 80,376 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
5 நாட்களில் தங்கம் விலை: வாரத்தின் முதல் நாளான ஜூன் 16ஆம் தேதி திங்கள்கிழமை அன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 74,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் ஏற்ற இறக்கங்களுடனே காணப்பட்டது.
ஜூன் 16 - ஒரு சவரன் ரூ. 74,440
ஜூன் 17 - ஒரு சவரன் ரூ. 74,600
ஜூன் 18 - ஒரு சவரன் ரூ. 74,000
ஜூன் 19 - ஒரு சவரன் ரூ. 74,120
ஜூன் 20 - ஒரு சவரன் ரூ. 73,680
வெள்ளி விலையும் குறைந்தது: வெள்ளியை பொறுத்தவரை நேற்றை விட இன்று ஒரு கிராம் 2 ரூபாய் விலை குறைந்துள்ளது. ஜூன 19ஆம் தேதி வெள்ளி ஒரு கிராம் 122 ரூபாய்க்கு விற்கப்பட்டது இன்று அது 120 ரூபாய் என விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி நேற்றை விட இன்று 2000 ஆயிரம் ரூபாய் விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளி 1, 22,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பநிலையில் விலை குறைந்து இன்று 1,20,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
More From GoodReturns

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?



Click it and Unblock the Notifications