சென்னை: இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் தான் இருந்து வருகிறது. இருந்தாலும் 100 ரூபாய் விலை குறைந்தால் 1000 ரூபாய் விலை ஏறி விடுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தொடர்ந்து 10 நாட்கள் விலை ஏறாமல் இருந்த தங்கம் 5 நாட்களிலேயே 1000 ரூபாய்க்கும் மேல் விலை உயர்ந்துள்ளது.
இன்று விலை என்ன?: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 76,000 ரூபாய் நெருங்கி சாதாரண மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. சென்னையில் இன்றைய தினம் ஆபரண தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 65 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 9405 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 9,470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு சவரன் தங்கத்தை பொருத்தவரை நேற்றைய விட இன்று 520 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது. நேற்று 75, 240க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரண தங்கம் இன்று விலை உயர்ந்து 75,760 ரூபாயாக விற்பனையாகிறது.

5 நாட்களில் எவ்வளவு உயர்வு: கடந்த திங்கட்கிழமை தொடங்கிய இன்று வரை தங்கத்தின் விலை ஏறு முகத்திலே தான் இருந்து வருகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 74, 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . இதுவே படிப்படியாக விலை உயர்ந்து இன்று 75,760க்கு விற்கப்படுகிறது. அதாவது ஐந்து நாட்களில் தங்கம் ஒரு சவரனுக்கு 1320 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.
24 கேரட் தங்கம் விலை: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை சென்னையில் நேற்று ஒரு கிராம் 10,260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிராம் 10,330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது அதாவது ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது . ஒரு சவரன் பொருத்தவரை நேற்று 82,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 24 கேரட் தங்கம் இன்று 82,640 என சவரனுக்கு 560 விலை உயர்வு கண்டிருக்கிறது.
வெள்ளி விலை: தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருவது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்கம் வாங்கும் எண்ணத்தையே பலரும் கைவிடும் நிலைக்கு சென்று இருக்கின்றனர். தங்கத்துக்கு நிகராக வெள்ளியும் போட்டி போட்டுக்கொண்டு விலை உயர்ந்து வருவது தான் மக்களுக்கு இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் விலை உயர்ந்து 131 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,31,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
என்ன காரணம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்கள் மீது விதித்த 50% வரி நடைமுறைக்கு வந்திருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது, சர்வதேச பொருளாதார சூழல்ம், பங்குச்சந்தை வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலையை உச்சத்திலேயே வைத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications