தென்னிந்திய மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா நாளையும், நாளை மறுநாளும் கொண்டாடப்படுகிறது. இது விவசாயிகள் திருவிழா என்பதாலும், அறுவடைக் காலம் என்பதாலும் எப்போதும் இக்காலகட்டத்தில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
அதாவது அறுவடை காசை விவசாயிகள் பெரும்பகுதி தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கம், அந்த வகையில் பொங்கல் பண்டிகை காலத்தில் தங்கம் அதிகளவில் விற்பனையாகும், குறிப்பாக இக்காலகட்டத்தில் விற்கப்படும் தங்கம் நகைகளாக அல்லாமல் தங்க காயின்களாக இருக்கும்.

இதனால் சந்தையில் அடுத்த சில நாட்களுக்குத் தங்கத்திற்கான டிமாண்ட் சற்று அதிகமாகவே இருக்கும், எனவே தங்கம் விலை கணிசமாக உயரலாம். இந்தியாவில் தங்கம் விலை என்பது சர்வதேசச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்பதால் உள்நாட்டுச் சந்தையில் தாக்கம் சிறிய பங்கீட்டை மட்டுமே கொண்டு உள்ளது.
சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை கடந்த 7 நாட்களில் சைலெண்டாக ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2623 டாலரில் இருந்து 2695 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேவேளையில் தங்கம் விலை 2700 டாலரைத் தாண்டும் என வெளியான கணிப்புகள் அனைத்தும் தவிடுபொடியானது.
அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகளும், அதன் பின்பு அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித குறைப்பின் வேகம் குறித்த கணிப்பு தங்கம் விலையை மந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத விதமாக 86.21 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் உயர்ந்து 73,400 ரூபாயாக உள்ளது. இதேபோல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 430 ரூபாய் உயர்ந்து 80,070 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 320 ரூபாய் உயர்ந்து 58,720 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை கடந்த 5 நாட்களில் 10 கிராம் தங்கம் விலை சுமார் 1360 ரூபாய் அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 1,02,000 ரூபாயாக உள்ளது, ஆனால் பிளாட்டினம் விலை இன்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று 10 கிராம் பிளாட்டினம் விலை 60 ரூபாய் குறைந்து 26,540 ரூபாயாக உள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 58720 ரூபாய், மும்பை - 58720 ரூபாய், டெல்லி - 58840 ரூபாய், கொல்கத்தா - 58720 ரூபாய், பெங்களூர் - 58720 ரூபாய், ஹைதராபாத் - 58720 ரூபாய், கேரளா - 58720 ரூபாய், புனே - 58720 ரூபாய், பரோடா - 58760 ரூபாய், அகமதாபாத் - 58760 ரூபாய், ஜெய்ப்பூர் - 58840 ரூபாய், லக்னோ - 58840 ரூபாய், கோயம்புத்தூர் - 58720 ரூபாய், மதுரை - 58720 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,540 ரூபாய், மும்பை - 26,540 ரூபாய், டெல்லி - 26,540 ரூபாய், கொல்கத்தா - 26,540 ரூபாய், பெங்களூர் - 26,540 ரூபாய், ஹைதராபாத் - 26,540 ரூபாய், கேரளா - 26,540 ரூபாய், புனே - 26,540 ரூபாய், வதோதரா - 26,540 ரூபாய், அகமதாபாத் - 26,540 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,869 ரூபாய்
குவைத் - KWD 24.68 - 6,906 ரூபாய்
மலேசியா - MYR 363 - 6,950 ரூபாய்
ஓமன் - OMR 32.05 - 7,188 ரூபாய்
கத்தார் - QAR 305 - 7,224 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 308 - 7,084 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,827 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 301.75 - 7,091 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,735 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 301.75 - 7,091 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 301.75 - 7,091 ரூபாய்
துபாய் (UAE) - AED 301.75 - 7,091 ரூபாய்
புஜைரா (UAE) - AED 301.75 - 7,091 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 301.75 - 7,091 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 301.75 - 7,091 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 305 - 7,224 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.05 - 7,188 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 308 - 7,084 ரூபாய்
இங்கிலாந்து - GBP 65.31 - 6,852 ரூபாய்
கனடா - CAD 120.75 - 7,220 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 124.80 - 6,621 ரூபாய்
நேபாளம் - NPR 12,281.08 - 7,676 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.90 - 7,305 ரூபாய்
குவைத் - KWD 26.93 - 7,536 ரூபாய்
மலேசியா - MYR 378 - 7,237 ரூபாய்
ஓமன் - OMR 34.15 - 7,659 ரூபாய்
கத்தார் - QAR 326 - 7,721 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 333 - 7,659 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 120.50 - 7,575 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 326 - 7,661 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 7,166 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 326 - 7,661 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 326 - 7,661 ரூபாய்
துபாய் (UAE) - AED 326 - 7,661 ரூபாய்
புஜைரா (UAE) - AED 326 - 7,661 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 326 - 7,661 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 326 - 7,661 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 326 - 7,721 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.15 - 7,659 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 333 - 7,659 ரூபாய்
இங்கிலாந்து - GBP 71.25 - 7,475 ரூபாய்
கனடா - CAD 127.50 - 7,623 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 136.10 - 7,220 ரூபாய்
நேபாளம் - NPR 13,348.99 - 8,344 ரூபாய்
திங்கள்கிழமை ஆசிய சந்தையின் ஆரம்பக்கட்ட வர்த்தகத்தில் தங்கம் விலை சிறிய அளவில் சரிவை சந்தித்தது, 2,690 டாலர் அளவில் வர்த்தகம் நடைபெற்றது. இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் டாலர் வலுவடைந்ததே ஆகும்.
அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஆட்சியைப் பிடிக்கப்போகும் டொனால்டு டிகம்ப் மேற்கொள்ள இருக்கும் கொள்கை மாற்றங்கள் குறித்த நிச்சயமற்ற நிலை முதலீட்டாளர்களின் அச்சத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு இந்த தடுமாற்ற காலத்தில் பாதுகாப்பான முதலீடு தேவைப்படும், அப்போது தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குறித்த சந்தை எதிர்பார்ப்புகள் மாறியுள்ளது. அமெரிக்காவில் வலுவான வேலைவாய்ப்பு வளர்ச்சி பதிவாகியிருக்கும் காரணத்தால் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்ற அவசியம் குறைந்துள்ளது.
சிறப்பான வேலைவாய்ப்புகள் தரவுகள் மூலம் இந்த வருடம் 30 அடிப்படை புள்ளிகள் (bps) வட்டி விகிதக் குறைப்பு தான் மொத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர், இது முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட 45 bps குறைப்பிலிருந்து சுமார் 0.15 சதவீதம் குறைவாகும். வட்டி குறைப்பின் அளவு குறையும் போது பணப்புழக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
More From GoodReturns

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?



Click it and Unblock the Notifications