தொடர்ந்து பற்ற வைத்த பட்டாசு போல வெடித்துக் கொண்டிருந்த தங்கம் விலை தற்போது கொஞ்சம் இறக்கம் காணத் தொடங்கி இருக்கிறது.
அபப்டி என்றால் எல்லா இடத்திலும் தங்கம் விலை சரியத் தொடங்கிவிட்டதா? என்று கேட்டால் இல்லை.
சென்னையில் தான் தங்கம் விலை கொஞ்சமாக விலை இறக்கம் கண்டு இருக்கிறது. மற்ற படி, சர்வதேச தங்கம் விலையில் இருந்த இறக்கம் எல்லாம், அடுத்த நாளே காணாமால் போய்விட்டது. சரி தங்கம் விலை நிலவரத்தைப் விரிவாகப் பார்ப்போம்.
நிலை கொண்ட சர்வதேச தங்கம் விலை
சர்வதேச அளவில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,810 டாலரைத் தொட்டு வர்த்தகமானது. 1,750 டாலர் எப்படி தங்கத்துக்கு சகஜமான விலை ஆனதோ அதே போல, தற்போது 1,800 டாலர் ஒரு நிலையான விலையாகி இருக்கிறது. இப்போதைக்கு தங்கம், அந்த 1,800 டாலரை விட்டு இறக்கம் காண்பதாகத் தெரியவில்லை. கடந்த வாரத்தில் 1,798 டாலரில் நிறைவடைந்த தங்கம் இந்த வாரத்தில் 1,810 டாலரில் நிறைவடைந்து இருக்கிறது.
தட தட விலை ஏற்றம்
கடந்த 16 ஜூலை 2020 அன்று 1,797 டாலரில் நிறைவடைந்தது ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை. ஆனால் அடுத்த நாளே (17 ஜூலை 2020) அதே ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, சர்வதேச அளவில் 1,810 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இப்போது தான் கொஞ்சம் ஆசுவாசப்பட்டோம். ஆனால் அதற்குள் சரிந்த விலை, அடுத்த நாளே சரிகட்டப்பட்டுவிட்டதே..! சரி மற்ற தங்கம் விலை விவரங்களையும் பார்ப்போம்.
எம் சி எக்ஸ் தங்கம் விலை
இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்சான எம் சி எக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்துக்கான ஆகஸ்ட் 2020 ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை 48,980 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. கடந்த 8 ஜூலை 2020-ல் இந்த காண்டிராக்ட்டின் விலை அதிகபட்சமாக 49,348 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆனால் நேற்று கொஞ்சம் விலை இறக்கம் கண்டு 48,980 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
24 கேரட் சென்னையில் தங்கம் விலை
கொரோனாவால் கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்பட்டு இருக்கும் சிங்காரச் சென்னையில், நேற்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 51,140 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். ஆக 24 கேரட் 1 கிராம் தங்கத்துக்கு 5,114 ரூபாய் மேனிக்கு, ஒரு பவுன் தங்கம் விலை 40,912 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.
22 கேரட் சென்னையில் தங்கம் விலை
அதே போல, சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 46,850 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். ஆக 22 கேரட் 1 கிராம் தங்கத்துக்கு 4,685 ரூபாய் மேனிக்கு, ஒரு பவுன் தங்கம் விலை 37,480 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். இந்த விலை இறக்கம் மிகப் பெரியது இல்லை என்றாலும், இந்த நேரத்தில் சில நூறு ரூபாயாவது விலை இறக்கம் கண்டு இருக்கிறதே என்று தான் பார்க்க வேண்டி இருக்கிறது.
ஏன் தொடர்ந்து விலை ஏற்றம்
இன்னும் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக நினைத்து முதலீட்டாளர்கள் பணத்தை தங்கத்தில் குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதோடு தற்போது அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் கரன்ஸி மதிப்பு சரிவு போன்றவைகளில் இருந்து தப்பிக்கவும் தங்கத்தில் குவிகிறார்கள் முதலீட்டாளர்கள். வங்கிகளின் வட்டி விகிதங்கள் இன்னும் திருப்திகரமாக இல்லை. இதுவும் தங்கம் விலை ஏற அடிப்படை காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
பாசிட்டிவான சீனா
சீனாவில், ஜூன் 2020 காலாண்டில், பொருளாதாரம் 3.2 சதவிகிதம் வளர்ந்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இருப்பினும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உய்கர் இஸ்லாமியர்கள் பஞ்சாயத்து, ஹாங்காங் சுதந்திரம் தொடர்பான பஞ்சாயத்து, கொரோனா பஞ்சாயத்து என பல பஞ்சாயத்துக்களால், சீன பொருளாதார வளர்ச்சி என்கிற நல்ல விஷயம் சந்தையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.
ஆஸ்திரேலிய மத்திய வங்கி
மேலே சொன்ன செய்தியை, ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கியான நேஷனல் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியாவின் பொருளாதார வல்லுநர் ஜான் சர்மா உறுதி செய்கிறார். "நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகள் மற்றும் உலகம் முழுக்க அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளில் தங்கம் சிக்கி இருக்கிறது" எனச் சொல்கிறார் ஜான். அதோடு டாலர் வேறு வலுவடைந்து வருவது தங்கம் விலை ஏற்றத்தை உறுதி செய்கிறது எனவும் சொல்லி இருக்கிறார்.
தடுமாறும் பங்குச் சந்தைகள்
அமெரிக்கா சீனாவுக்கு இடையிலான பிரச்சனைகள் மற்றும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புகளால், உலக பங்குச் சந்தைகளும் தடுமாற்றமாகவே வர்த்தகமாகி வருகின்றன. இதனால் பங்குச் சந்தை விலை ஏற்றத்தால் வர வேண்டிய வருவாய்களும் பெரிதாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது முதலீட்டாளர்கள் மேலும் தங்கத்தில் முதலீடு செய்ய வழி வகுக்கிறது.
அடுத்து என்ன
இப்படி பல காரணங்களால், தங்கம் விலை தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. சர்வதேச தங்கம் விலை நிலையாக 1,800 டாலருக்குக் கீழ் வராமல் இருப்பது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75 ரூபாய்க்குக் கீழ் வராமல் இருப்பது போன்ற காரணங்களால், தொடர்ந்து விலை அதிகரிக்கவே நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications