தங்கம் விலை : இனி இது தான் டிரெண்டா? இந்த மாசம் மட்டும் என்னென்ன நடந்திருக்கு பாருங்க!!

வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை லேசாக உயர்வு கண்டுள்ளது. ஏப்ரல் மாத தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையில் பெரிய ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் இருக்கிறது. ஜனவரி மாத வரலாற்று உச்ச விலையை எட்டிய பின் தங்கம் விலை படிப்படியாக சரிந்தது. ஈரான் போர் இதற்கு முக்கிய காரணம். ஏப்ரல் மாதம் தங்கம் விலையில் என்ன மாற்றம் நடந்தது, இன்றைய விலை என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சென்னையை பொறுத்தவரை இன்றைய தினம் தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதுவே இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14,230 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் பொறுத்தவரை நேற்று 1,13,600 ரூபாய்க்கு விற்பனையானது, இன்று 240 ரூபாய் உயர்ந்து 1,13,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை : இனி இது தான் டிரெண்டா? இந்த மாசம் மட்டும் என்னென்ன நடந்திருக்கு பாருங்க!!

சென்னையில் ஏப்ரல் 1ஆம் தேதி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14.050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து விலை ஏறுவது இறங்குவதுமாக இருந்து வந்த தங்கம் அதிகபட்சமாக ஏப்ரல் 18ஆம் தேதி 14,360 ரூபாய்க்கு விற்பனையானது. இதன் பிறகு படிப்படியாக குறைந்து இன்று ஒரு 14 ,230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதம் முழுவதுமே ஈரான் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் வெளியிடக்கூடிய அறிவிப்புகள் தான் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் மே மாதத்தில் தங்கத்தின் விலை போக்கு எப்படி இருக்கும் என்பதை ஈரான் போர் அமைதி ஒப்பந்தம் தான் முடிவு செய்யப் போகிறது.

சென்னையில் இன்றைய தினம் 24 கேரட் தங்கம் கிராமுக்கு 33 ரூபாய் விலை உயர்ந்து 15,524 ரூபாய்க்கும் 10 கிராம் தங்கத்தின் விலை 330 ரூபாய் விலை கூடி 1,55,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,870 ரூபாய்க்கும் ஒரு சவரன் 260 ரூபாய் விலை உயர்ந்து 94,960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Also Read

சென்னையின் இன்றைய தினம் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாக்கும் ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஏப்ரல் 18இல் ஒரு கிராம் 280 ரூபாய் வரை விலை உயர்ந்து பின்னர் சரிவடைந்தது.

Recommended For You

தங்கம், வெள்ளி விலை இப்படி ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பது மக்களுக்கு குழப்பத்தை தருகிறது. இப்போது தங்கம் வாங்கலாமா, தங்கம் விலை இன்னும் குறையுமா அல்லது உயருமா என்ற குழப்பமடைந்துள்ளனர். ஈரான் போர் முடிந்து கச்சா எண்ணெய் விலை குறைந்தால் தங்கம் விலை உயரும், இதுவே போர் முடியாமல் கச்சா எண்ணெய் விலை உயர்விலேயே இருந்தால் தங்கம் விலை சரியும். இரண்டுமே ஏற்படவில்லை என்றால் இப்படி தான் ஒரு நாள் ஏறுவது, மறுநாள் இறங்குவது என காணப்படும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+