தங்கம் விலை குறைந்துவிட்டதே பரவாயில்லை என நாம் மகிழ்ச்சியை அடைந்தால் அந்த மகிழ்ச்சி மறைவதற்குள் அடுத்த நாளே பல மடங்கு உயர்ந்து விடுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வை கண்டிருக்கிறது .
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்தே தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்த வண்ணம் இருக்கிறது. செப்டம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கத்தை கையிலேயே பிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது . அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை தொடர்ந்து தங்கத்தின் விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு நீடித்த நிலையில் அதற்கு எதிர் மாறாக தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

இன்று தங்கம் விலை: சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது . நேற்று 10 ,230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 10,290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு தங்கத்தின் விலை 480 ரூபாய் விலை உயர்ந்து மீண்டும் 82 ,000 ரூபாயை கடந்திருக்கிறது. ஒரு சவரன் தங்கம் 82,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
செப்டம்பர் மாதத்தில் : செப்டம்பர் 1ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 585 ரூபாய் விலை உயர்வு தந்திருக்கிறது ஒரு சவரனுக்கு என பார்த்தால் தங்கத்தின் விலை செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 4,680 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.
24 கேரட் தங்கம் விலை: 24 கேரட் தங்கத்தை பொருத்தவரை சென்னையில் இன்று ஒரு கிராமுக்கு 66 ரூபாய் விலை உயர்ந்து 11226 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, ஒரு சவரன் 528 ரூபாய் விலை உயர்ந்து 89, 808 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 8,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 400 ரூபாய் விலை உயர்ந்து 68,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நாளையும் இதே விலை: சனிக்கிழமை அன்று விலை உயர்ந்திருப்பதால் ஞாயிற்றுக்கிழமையும் இதே விலைக்கு தான் தங்கம் விற்பனை செய்யப்படும். எனவே வீக் எண்டில் தங்கம் வாங்கலாம் என காத்திருந்தவர்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும் .
வெள்ளி விலை: வெள்ளியின் விலை இன்று ஒரு கிராமுக்கு இரண்டு ரூபாய் விலை உயர்ந்து 145 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2000 ரூபாய் விலை உயர்ந்து 1,45,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . வெள்ளியின் விலை கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து பெருமளவில் உயர்ந்திருக்கிறது. செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளி 136 ரூபாயாகத்தான் இருந்தது ஆனால் அது இன்று 145 என 9 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது ஒரு கிலோவிற்கு 9,000 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது.
வரும் வாரம் தங்கம் குறையுமா?: தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் மேலும் விலை உயருமா அல்லது குறையுமா என்ற குழப்பம் மக்கள் இடையே நீடிக்கிறது. உலக நிலவரங்களை பொறுத்து தான் தங்கம் விலையே நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் டாலர் மதிப்பு குறைவதால் பல நாடுகளும் டாலருக்கு மாற்றாக தங்கத்தை அதிக இருப்பு வைக்க தொடங்கிவிட்டன., அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால் பத்திரங்களில் முதலீடு செய்திருந்தவர்கள் எல்லாம் அந்த முதலீட்டை தங்கத்தை நோக்கி திருப்பிவிட்டுள்ளனர். எனவே தங்கம் விலை தற்போதைக்கு குறைவதற்கான அறிகுறியே இல்லை என்பது தான் உண்மை.


Click it and Unblock the Notifications