இந்தியாவில் தங்கம் விலை எப்போதும் சர்வதேச சந்தையைச் சார்ந்தே இருக்கும், இதற்கு முக்கியமான காரணம் இதை உள்நாட்டில் உற்பத்தி செய்யாமல் இருப்பது தான். கச்சா எண்ணெய் போலவே இந்திய மக்களின் தங்கத்திற்கான தேவையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, இதற்கான பணத்தை டாலரில் செலுத்தி வருகிறோம். எனவே இந்தியாவில் விற்கப்படும் தங்கம் விலை சர்வதேசச் சந்தை விலை மற்றும் டாலர் மதிப்பின் கலவையாகும். பட்ஜெட் அறிவிப்பால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் அதிகம் தங்கம் வாங்கும் மண்டலத்தில் கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதேவேளையில் கோயம்புத்தூரில் இருந்து அதிகப்படியான தங்கம் நகைகள் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் ரீடைல் சந்தையில் ஒரு சவரன் தங்கம் விலை 80 ரூபாய் உயர்ந்து 51,440 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வுக்கு முக்கியமான காரணம் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை கூட்ட முடிவுகள் தான்.
அந்நாட்டின் பணவீக்க அளவுகள் பெடரல் ரிசர்வ் நிர்ணயம் செய்த 2 சதவீத அளவீட்டுக்குக் குறைவாக வந்துள்ளதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைக்கப்போவதாக அறிவித்தது. இதன் வாயிலாக அமெரிக்கப் பத்திர சந்தையில் செய்யப்பட்ட முதலீடுகள் அதிகளவில் வெளியேறி தங்கம் மீது கணிசமாகக் குவிந்தது. இதனால் இனி தொடர்ந்து முதலீடுகள் பத்திர சந்தையில் வெளியேறி தங்கம் மீது குவிந்து, இதன் விலை அதிகரிக்க உள்ளது.
ஜூலை மாத வர்த்தகத்தைப் பார்க்கும் போது யாரும் மிகப்பெரிய சரிவு பதிவாகியுள்ளது, ஜூலை 17ஆம் தேதி அதிகப்படியாக 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 6920 ரூபாயாக இருந்தது. ஆனால் ஜூலை 30 ஆம் தேதி மிகவும் குறைந்தபட்ச விலையாக 6385 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் தங்கம் விலை 3.96 சதவீதம் சரிந்துள்ளது.
தங்கத்தைப் போலவே கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் ரீடைல் சந்தையில் வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலை அதிகரித்துள்ளது. இன்று நகைக்கடைகளில் ஒரு கிராம் வெள்ளி விலை 0.70 பைசா அதிகரித்து 91.70 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு கிராம் 19 ரூபாய் அதிகரித்தது 2615 ரூபாயாக உள்ளது.
இதேபோல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2329 டாலரில் இருந்து 2426 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications