ரூ.1 லட்சத்தை எட்டப் போகும் தங்கம் விலை.. சாமானிய மக்கள் தங்கம் வாங்குறத மறந்துட வேண்டியது தான்..

சென்னை: இந்திய சந்தையில் தங்கத்தின் விலை என்பது சர்வதேச காரணிகளை பொறுத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. வர்த்தக மோதல்கள், பொருளாதார வளர்ச்சி என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை காண்கிறது.

இந்த சூழலில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என ஒரு அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஐசிஐசிஐ வங்கி சார்பாக குளோபல் மார்க்கெட் என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது .அந்த அறிக்கையில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.1 லட்சத்தை எட்டப் போகும் தங்கம் விலை.. சாமானிய மக்கள் தங்கம் வாங்குறத மறந்துட வேண்டியது தான்..

ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள இந்த குளோபல் மார்க்கெட் அறிக்கை ஜூன் மாதத்தில் உள்நாட்டில் தங்கத்தின் விலை 0.6 சதவீதம் உயர்ந்திருப்பதையும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.2 சதவீதம் சரிந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த அறிக்கை 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தில் தான் இருக்கும் என எதிர்பார்ப்பக்கப்படுவதாக தெரிவிக்கிறது.

இந்திய சந்தையில் தற்போது 10 கிராம் தங்கம் என்று 96,500 ரூபாயில் இருந்து 98,500 ரூபாய் வரை விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது, இது இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் 98 ,500 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் என்ற அளவை எட்டி விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே தங்கம் விலை சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில் அது மேலும் உயரும் என வெளியாகி இருக்கும் இந்த அறிக்கை சாமானிய மக்களுக்கு தங்கம் என்பது கனவாகி போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்த அறிக்கையில் மற்றொரு விஷயமும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரிக்க அதிகரிக்க மக்களிடையே தங்கத்தை வாங்கும் போக்கு சற்றே குறைந்து இருப்பதாகவும் இதன் காரணமாக தங்க இறக்குமதியும் குறைந்திருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிள்ளது. ஏப்ரல் மாதத்தின் இந்தியாவில் 3.1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் மே மாதம் அது 2.5 பில்லியன் டாலர்களாக குறைந்து இருக்கிறது என ஐசிஐசிஐ வெளியிட்டிருக்கும் அறிக்கை குறிப்பிடுகிறது.

தற்போது மக்கள் தங்கத்தை நகையாக வாங்குவதை விடுத்து ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர் என அண்மையில் மியூச்சுவல் ஃபண்ட் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிய வந்திருக்கிறது என ஐசிஐசிஐ வங்கியின் அறிக்கை கூறுகிறது. மே மாதத்தில் 2.92 பில்லியன் ரூபாய் தங்கம் சார்ந்த ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறதாம். ஈரான் இஸ்ரேல் மோதல்கள் , பல்வேறு நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த இறக்குமதி வரி என பல்வேறு காரணிகள் கடந்த ஆறு மாதங்களாகவே தங்கத்தின் விலையை தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே வைத்திருக்கின்றன.

அவ்வப்போது தங்கத்தின் விலை குறைந்தாலும் அது மிக சொற்பமாகவே இருக்கிறது. உலகளவிலான பொருளாதார ஸ்திரமற்ற தன்மை காரணமாக பெரும்பாலான முதலீட்டாளர்களும் பல்வேறு நாடுகளின் அரசு வங்கிகளும் பாதுகாப்பான முதலீடாக கருதி தங்கத்தை நோக்கி செல்கின்றன. இதுவே தங்கத்தின் விலை கணிசமான அளவு உயர்வதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.தற்போதைக்கு இஸ்ரேல் ஈரான் மோதல் முடிவுக்கு வந்திருப்பது, அமெரிக்கா உடன் பல்வேறு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது ஆகியவை தங்கம் புதிய உச்சத்தை எட்டாமல் மட்டுப்படுத்தி இருக்கின்றன என ஐசிஐசிஐ வங்கி அறிக்கை கூறுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+