மதுரையில் இன்று, ஏப்ரல் 16, 2024 ஆம் தேதி தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஏமாற்றமளிக்கும் வகையில் வெளியான அமெரிக்கச் சில்லறை விற்பனை தரவுகள், ஈரான்-இஸ்ரேல் மோதல் ஆகிய காரணத்தால் அமெரிக்க டாலர் 5 மாத உச்சத்திற்கு ஏறிய போதிலும் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்து அதன் விலை புதிய உயர்வுக்குச் சென்றுள்ளது.

தற்போது மதுரை மாவட்டத்தில் தங்க விலை நிலவரம்
22 காரட் தங்கம் - ₹ 6,870 per gram
24 காரட் தங்கம் - ₹ 7,495 per gram
தங்க விலை ஏற்றத்திற்கான காரணங்கள்:
தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சில முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
போர் பதற்றம்: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம் முதலீட்டுச் சந்தை மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் பாதுகாப்பான முதலீட்டைத் தேடி வருகின்றனர். இதனால் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் தங்கம், பத்திரம், ரியல் எஸ்டேட் போன்ற பாதுகாப்பான பிரிவில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
உலக சந்தை: உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், குறிப்பாக சீனாவில் ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டு நிறுவனம் வரையில் தங்கத்தை அதிகளவில் வாங்கி வருவதாலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவைப் போன்ற நாடுகளில் திருமணம், பண்டிகை காலங்களில் தங்கம் வாங்குவதற்கான தேவை அதிகரித்து வருவதால், உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.
பணவீக்கம்: பணவீக்கம் அதிகரித்து வரும் காலங்களில், தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. எனவே, பணவீக்கம் அதிகரிக்கும் போது, தங்கத்தின் மீதான தேவை அதிகரித்து விலை உயரும்.
டாலர் மதிப்பு: அமெரிக்க டாலரின் மதிப்புடன் தங்கத்தின் விலை நேர்மறை தொடர்பைக் கொண்டுள்ளது. டாலர் மதிப்பு வலுப்பெறும் போது, தங்கத்தின் விலையும் உயரும்.
மதுரையில் தங்கம் வாங்குவது எப்படி?
மதுரையில் தங்கம் வாங்குவது எளிதானது, நகை கடைகளில் பல்வேறு வடிவமைப்புகளிலும், தூய்மையிலும் தங்கம் கிடைக்கிறது. நகை வாங்கும் போது, பின்வரும் விஷயங்களை கவனித்தில் கொள்ள வேண்டும்:
தங்கத்தின் தூய்மை: தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் காரட் அளவை கவனிக்க வேண்டும். 22 காரட் மற்றும் 24 காரட் தங்கம் மிகவும் பிரபலமானவை.
செய்கூலி: தங்கத்தை நகையாக வாங்கும்போது அதை செய்வதற்கான கூலி வசூலிக்கப்படுவது இயல்பான ஓன்று, இதேபோல் இது ஒவ்வொரு கடைக்கு கடை மாறுபடும். எனவே, கடைகளில் விலை பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.
தங்க நகை சான்றிதழ்: நகை வாங்கும் போது, ஹால்மார்க் சான்றிதழ் உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். இது தங்கத்தின் தூய்மையை உறுதிப்படுத்துகிறது.
மதுரையில் தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தால், விலை குறையும் வரை காத்திருப்பதற்கு பதிலாக, Buy on Dips என்ற கொள்கையை கடைப்பிடிக்கலாம். ஏனெனில், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
Story written by: Prasanna Venkatesh


Click it and Unblock the Notifications