ஒரே நாளில் தங்கம் விலை 500 ரூபாய் உயர்வு.. பதறும் மக்கள்.. சென்னை, கோவை, பெங்களூரில் என்ன நிலவரம்..!

சென்னை: இந்தியாவில் 100க்கு 90 பேர் பாதுகாப்பான முதலீடாகக் கருதும் முதலீடுகளில் தங்கம் முக்கிய இடத்தில் இருக்கும் வேளையில், தங்கத்தை முதலீடாகப் பார்ப்பவர்கள் முதல் தங்க நகையாக வாங்குபவர்கள் வரையில் தற்போதைய தங்கம் விலை உயர்வும் அனைவரையும் பயமுறுத்தியுள்ளது. ஏற்கனவே தங்கத்தை வாங்கி வைத்துள்ளவர்களுக்கு இது குட்நியூஸ் ஆக இருந்தாலும், புதிதாக வாங்குவோருக்கும் இந்த விலை உயர்வு பேட் நியூஸ் தான்.

இப்படியிருக்கும் வேளையில் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க மத்திய வங்கியின் செயல்பாடுகள் தான், ஜெரோம் பவல் அமெரிக்காவின் மந்தமான வேலைவாய்ப்பு தரவுகள், கருவூல முதலீடுகளின் லாபம், டாலர் மதிப்பு ஆகியவற்றைக் குறித்துப் பேசுகையில் வட்டி விகிதம் குறைப்பது பற்றி முடிவுகளைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் தங்க பியூச்சர் ஆர்டர்களில் அதிகம் முதலீடு செய்தனர். இதனால் சர்வதேசச் சந்தையில் தொடர்ந்து 7 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது, இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.

ஒரே நாளில் தங்கம் விலை 500 ரூபாய் உயர்வு.. பதறும் மக்கள்.. சென்னை, கோவை, பெங்களூரில் என்ன நிலவரம்..!

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை 2137 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்ட நிலையில் இன்று 2159 டாலர் வரையில் உயர்ந்து மீண்டும் வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது. மேலும் கடந்த 7 நாட்களில் தங்கம் விலை 2030 டாலரில் இருந்து 2137 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான பியூச்சர்ஸ் விலை 0.39 ரூபாய் உயர்ந்து 65,429 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை 0.09 மட்டும் சரிந்து ஒரு கிலோ 74,072 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்து 60900 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 550 ரூபாய் உயர்ந்து 66,440 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 400 ரூபாய் அதிகரித்து 48,720 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 500 ரூபாய் உயர்ந்து 78,500 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 60,900 ரூபாய், மும்பை - 60,100 ரூபாய், டெல்லி - 60,250 ரூபாய், கொல்கத்தா - 60,100 ரூபாய், பெங்களூர் - 60,100 ரூபாய், ஹைதராபாத் - 60,100 ரூபாய், கேரளா - 60,100 ரூபாய், புனே - 60,100 ரூபாய், பரோடா - 60,150 ரூபாய், அகமதாபாத் - 60,150 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,250 ரூபாய், லக்னோ - 60,250 ரூபாய், கோயம்புத்தூர் - 60,900 ரூபாய், மதுரை - 60,900 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 66,440 ரூபாய், மும்பை - 65,560 ரூபாய், டெல்லி - 65,710 ரூபாய், கொல்கத்தா - 65,560 ரூபாய், பெங்களூர் - 65,560 ரூபாய், ஹைதராபாத் - 65,560 ரூபாய், கேரளா - 65,560 ரூபாய், புனே - 65,560 ரூபாய், பரோடா - 65,610 ரூபாய், அகமதாபாத் - 65,610 ரூபாய், ஜெய்ப்பூர் - 65,710 ரூபாய், லக்னோ - 65,710 ரூபாய், கோயம்புத்தூர் - 66,440 ரூபாய், மதுரை - 66,440 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 48720 ரூபாய், மும்பை - 48080 ரூபாய், டெல்லி - 48200 ரூபாய், கொல்கத்தா - 48080 ரூபாய், பெங்களூர் - 48080 ரூபாய், ஹைதராபாத் - 48080 ரூபாய், கேரளா - 48080 ரூபாய், புனே - 48080 ரூபாய், பரோடா - 48120 ரூபாய், அகமதாபாத் - 48120 ரூபாய், ஜெய்ப்பூர் - 48200 ரூபாய், லக்னோ - 48200 ரூபாய், கோயம்புத்தூர் - 48720 ரூபாய், மதுரை - 48720 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - அகமதாபாத் - 24,150 ரூபாய், பெங்களூர் - 24,150 ரூபாய், புவனேஸ்வர் - 24,150 ரூபாய், சண்டிகர் - 24,150 ரூபாய், சென்னை - 24,150 ரூபாய், கோயம்புத்தூர் - 24,150 ரூபாய், டெல்லி - 24,150 ரூபாய், ஹைதராபாத் - 24,150 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,150 ரூபாய், கேரளா - 24,150 ரூபாய், கொல்கத்தா - 24,150 ரூபாய், லக்னோ - 24,150 ரூபாய், மதுரை - 24,150 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 78500 ரூபாய், மும்பை - 75000 ரூபாய், டெல்லி - 75000 ரூபாய், கொல்கத்தா - 75000 ரூபாய், பெங்களூர் - 74100 ரூபாய், ஹைதராபாத் - 78500 ரூபாய், கேரளா - 78500 ரூபாய், புனே - 75000 ரூபாய், பரோடா - 75000 ரூபாய், அகமதாபாத் - 75000 ரூபாய், ஜெய்ப்பூர் - 75000 ரூபாய், லக்னோ - 75000 ரூபாய், கோயம்புத்தூர் - 78500 ரூபாய், மதுரை - 78500 ரூபாய்.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : உலக நாடுகளில் இன்றைய தங்க விலை நிலவரம்:
பாஹ்ரைன் - BHD 252 - 55,332.40 ரூபாய்,
குவைத் - KWD 206 - 55,481.77 ரூபாய்,
மலேசியா - MYR 3,210 - 56,425.06 ரூபாய்,
ஓமன் - OMR 262 - 56,338.91 ரூபாய்,
கத்தார் - QAR 2,470 - 56,065.79 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,460 - 54,297.12 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 893 - 55,256.25 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,420 - 54,535.43 ரூபாய்,
அமெரிக்கா - USD 650 - 53,808.50 ரூபாய்,
அபுதாபி - AED 2,420 - 54,535.43 ரூபாய்,
அஜ்மான் - AED 2,420 - 54,535.43 ரூபாய்,
துபாய் - AED 2,420 - 54,535.43 ரூபாய்,
புஜைரா - AED 2,420 - 54,535.43 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,420 - 54,535.43 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,420 - 54,535.43 ரூபாய்,
தோஹா - QAR 2,470 - 56,065.79 ரூபாய்,
மஸ்கட் - OMR 242.50 - 52,145.74 ரூபாய்,
தம்மம் - SAR 2,460 - 54,297.12 ரூபாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+