தங்கம் விலை 4 நாளுக்கு பின் உயர்வு.. வந்த சான்ஸ் மிஸ்ஸாகிவிட்டது.. நாளை காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

தங்கம் விலை நான்கு நாட்கள் மந்தநிலைக்குள் மாட்டிக்கொண்டு சிக்கித்தவித்த வேளையில், இன்று அதிரடியாய் உயர்ந்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை உயர்ந்தாலும், சர்வதேச சந்தையிலும், பியூச்சர்ஸ் சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் என்பது பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்றாலும், சர்வதேச சந்தையின் தாக்கத்தால் அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.

இதேவேளையில் மத்திய அரசு தங்க முதலீட்டுப் பத்திரங்களை வெளியிடவில்லை என்ற கருது நிலவும் காரணத்தால் இரண்டாம் தரப்பு சந்தையில் தங்கம் பத்திரத்திற்கு அதிகப்படியான டிமாண்ட் உருவாகியுள்ளது. இதனால் ரீடைல் சந்தையில் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்து காணப்படுகிறது.

தங்கம் விலை 4 நாளுக்கு பின் உயர்வு.. வந்த சான்ஸ் மிஸ்ஸாகிவிட்டது.. நாளை காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

அமெரிக்க டாலர் மதிப்பு சிறிய அளவில் மட்டுமே மீண்டு வரும் நிலையில், தங்கம் விலை (XAU/USD) செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சரிவுடன் காணப்பட்டது. இருப்பினும், மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் தங்கம் மீதான சரிவைக் குறைக்க உதவியது. இதேபோல் இன்று காலை வர்த்தகத்திலும் ஆசிய மற்றும் ஐரோப்பிய முதலீட்டாளர்கள் தங்கத்தைக் கைவிட்ட காரணத்தால் தங்கம் விலை சரிந்து காணப்படுகிறது.

கூடுதலாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் தலைவர் ஜெரோம் பவல் கடந்த வாரம் ஜாக்சன் ஹோல் கூட்டத்தில் நிகழ்த்திய உரையில், வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்க "நேரம் வந்துவிட்டது" என்று அறிவித்தார். இந்த முடிவு தங்கம் விலை உயர்வுக்கு வழிவகுத்தாலும், தற்போது முதலீட்டுச் சந்தையில் ரிஸ்க் எடுக்க தயங்குவது அதிகரித்துள்ளது. இதேவேளையில் தங்கத்திலும் முதலீடு செய்ய பெரும் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதற்கு மத்தியில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2547 டாலரில் இருந்து 2508 டாலராக சரிந்துள்ளது. காமெக்ஸ் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 10.3 டாலர் குறைந்து 2542.6 டாலராக குறைந்துள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.36 சதவீதம் குறைந்து 71,865 ரூபாயாக உள்ளது, வெள்ளி விலை 1.55 சதவீதம் குறைந்து 84,330 ரூபாயாக உள்ளது.

4 நாட்கள் தொடர் மந்த நிலைக்கு பின்பு இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 210 ரூபாய் அதிகரித்து 67,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் உயர்ந்து 73,250 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 168 ரூபாய் உயர்ந்து 53,720 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் 93.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ 93,500 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக பிளாட்டினம் விலை 10 கிராம் 200 ரூபாய் குறைந்து 25,690 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,715 ரூபாய்,
மும்பை - 6,715 ரூபாய், டெல்லி - 6,730 ரூபாய், கொல்கத்தா - 6,71 ரூபாய், பெங்களூர் - 6,715 ரூபாய், ஹைதராபாத் - 6,715 ரூபாய், கேரளா - 6,715 ரூபாய், புனே - 6,715 ரூபாய், பரோடா - 6,720 ரூபாய், அகமதாபாத் - 6,720 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,730 ரூபாய், லக்னோ - 6,730 ரூபாய், கோயம்புத்தூர் - 6,715 ரூபாய், மதுரை - 6,715 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,325 ரூபாய், மும்பை - 7,325 ரூபாய், டெல்லி - 7,340 ரூபாய், கொல்கத்தா - 7,325 ரூபாய், பெங்களூர் - 7,325 ரூபாய், ஹைதராபாத் - 7,325 ரூபாய், கேரளா - 7,325 ரூபாய், புனே - 7,325 ரூபாய், பரோடா - 7,340 ரூபாய், அகமதாபாத் - 7,340 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,340 ரூபாய், லக்னோ - 7,340 ரூபாய், கோயம்புத்தூர் - 7,325 ரூபாய்,
மதுரை - 7,325 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53720 ரூபாய், மும்பை - 53720 ரூபாய், டெல்லி - 53840 ரூபாய், கொல்கத்தா - 53720 ரூபாய், பெங்களூர் - 53720 ரூபாய், ஹைதராபாத் - 53720 ரூபாய், கேரளா - 53720 ரூபாய், புனே - 53720 ரூபாய், பரோடா - 53760 ரூபாய், அகமதாபாத் - 53760 ரூபாய், ஜெய்ப்பூர் - 53840 ரூபாய், லக்னோ - 53840 ரூபாய், கோயம்புத்தூர் - 53720 ரூபாய், மதுரை - 53720 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,690 ரூபாய், மும்பை - 25,690 ரூபாய், டெல்லி - 25,690 ரூபாய், கொல்கத்தா - 25,690 ரூபாய், பெங்களூர் - 25,690 ரூபாய், ஹைதராபாத் - 25,690 ரூபாய், கேரளா - 25,690 ரூபாய், புனே - 25,690 ரூபாய், வதோதரா - 25,690 ரூபாய், அகமதாபாத் - 25,690 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 93,500 ரூபாய், மும்பை - 88,500 ரூபாய், டெல்லி - 88,500 ரூபாய், கொல்கத்தா - 88,500 ரூபாய், பெங்களூர் - 85,000 ரூபாய், ஹைதராபாத் - 93,500 ரூபாய், கேரளா - 93,500 ரூபாய், புனே - 88,500 ரூபாய், பரோடா - 88,500 ரூபாய், அகமதாபாத் - 88,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 88,500 ரூபாய், லக்னோ - 88,500 ரூபாய், கோயம்புத்தூர் - 93,500 ரூபாய், மதுரை - 93,500 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 29.20 - 6,505 ரூபாய்
குவைத் - KWD 22.75 - 6,255 ரூபாய்
மலேசியா - MYR 346 - 6,685 ரூபாய்
ஓமன் - OMR 30.25 - 6,596 ரூபாய்
கத்தார் - QAR 286 - 6,588 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 288 - 6,444 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 102.60 - 6,602 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 281.50 - 6,435 ரூபாய்
அமெரிக்கா - USD 76.50 - 6,423 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 281.50 - 6,435 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 281.50 - 6,435 ரூபாய்
துபாய் (UAE) - AED 281.50 - 6,435 ரூபாய்
புஜைரா (UAE) - AED 281.50 - 6,435 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 281.50 - 6,435 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 281.50 - 6,435 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 286 - 6,588 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30.25 - 6,596 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 288 - 6,444 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.10 - 6,929 ரூபாய்
குவைத் - KWD 24.93 - 6,855 ரூபாய்
மலேசியா - MYR 362 - 6,995 ரூபாய்
ஓமன் - OMR 31.90 - 6,956 ரூபாய்
கத்தார் - QAR 305.50 - 7,037 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 310 - 6,936 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 113 - 7,271 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 304 - 6,949 ரூபாய்
அமெரிக்கா - USD 81.50 - 6,843 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 304 - 6,949 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 304 - 6,949 ரூபாய்
துபாய் (UAE) - AED 304 - 6,949 ரூபாய்
புஜைரா (UAE) - AED 304 - 6,949 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 304 - 6,949 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 304 - 6,949 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 305.50 - 7,037 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.90 - 6,956 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 310 - 6,936 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+