தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?

தங்கம் விலை உயர்வு என்பது இந்திய மக்களுக்கு தினசரி சாப்பிடும் அரசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வுக்கு இணையாகப் பேசப்படும் விஷயம். குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்கள் என்னதான் பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், கிரிப்டோகரன்சி எனப் பேசினாலும், அதில் முதலீடு செய்வதில் வல்லுனராக இருந்தாலும் தங்கத்தில் பெரும் முதலீட்டைச் செய்திருப்பார்கள்.

தங்கம் மீதான முதலீடு தான் தமிழ்நாட்டு மிடில் கிளாஸ் மக்களின் வலிமையான நிதிநிலைக்கு முக்கியமான காரணமாகும். இன்று வரையில் மாசம் ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்க வேண்டும் என்ற குறிக்கோள் உடன் பல மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் உள்ளது.

தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?


இந்த நிலையில் தங்கம் விலையில் உயரும் ஒவ்வொரு ரூபாயும், பிள்ளைகள் படிப்புக்காகவும், திருமணத்திற்காகவும், சொந்த வீடு வாங்கவும் / கட்டவும், சொந்த கார் வாங்க, வெளிநாட்டில் உயர் கல்வி, அவசர மருத்துவச் செலவு வரையில் வாழ்வின் முக்கியமான தருணத்தில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பதம் பார்த்து வரும் பணவீக்கம் தரவுகள் இன்று வெளியாகும் காரணத்தால் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டைப் பாதுகாக்கத் தங்கம் மீது முதலீடு செய்துள்ளனர். இதேபோல் சர்வதேச அளவில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிக்கும் வகையில் தங்கம் செயல்படுகிறது.

இந்த நிலையில் இன்று வெளியாகும் அமெரிக்காவின் கோர் பணவீக்கம் தரவுகள் தான், அந்நாட்டின் வட்டி விகித குறைப்பிற்கு அடித்தளம் அமைக்கும். பணவீக்கத்தின் முந்தைய கணிப்புகள் படி கோர் பணவீக்கம் 0.3 சதவீதம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதை வைத்துத் தான் அமெரிக்க 3 முறை வட்டி விகிதத்தைக் குறைக்குமா, ஒரு முறை வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்பது தெரியும்.

இதேபோல் அமெரிக்கா தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைத்தால், ஐரோப்பாவும் தனது வட்டி விகிதத்தைக் குறைத்தால், இந்திய ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும். இது சாத்தியமாகும் பட்சத்தில் முதலீட்டுச் சந்தையின் பாதை மாறும், தங்கம் விலை குறையும் அதேவேளையில் பென்ச்மார்க் வட்டி விகிதம் குறையும் காரணத்தால் வீட்டுக்கடன், வாகனக்கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு அவுன்ஸ் 2233 டாலராக உயர்ந்துள்ளது. இன்று புனித வெள்ளி காரணமாக இந்தியப் பங்குச்சந்தை முதல் சர்வதேச பங்குச்சந்தை வரையில் விடுமுறை.

ஆயினும் அமெரிக்கப் பணவீக்க தரவுகள் எதிரொலி காரணமாக நேற்றை வர்த்தகத்தில் தங்கம் மற்றும் டாலர் மதிப்பின் உயர்வு இந்தியச் சந்தையில் தங்கம் விலையைப் பெறும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் நேற்று வர்த்தகம் முடியும் வேளையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.18 சதவீதம் உயர்ந்து 67,800 ரூபாயாக இருந்தது. இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1400 ரூபாய் உயர்ந்து 63,900 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1530 ரூபாய் உயர்ந்து 69,710 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 1120 ரூபாய் உயர்ந்து முதல் முறையாக 51,120 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 300 ரூபாய் உயர்ந்து 80800 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 270 ரூபாய் உயர்ந்து 24,330 ரூபாயாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+