சர்வதேச முதலீட்டு சந்தையில் அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் குறைந்தது மூலம் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் முடிவு சரியானது என நிருபணமான நிலையில், மூடிஸ் அமெரிக்க அரசு பத்திரங்கள் மீதான அவுட்லுக்-ஐ மாற்றியது மூலம் அதிகப்படியான முதலீடுகள் வெளியேறியது. இதனால் அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் ஒரே நாளில் 105.64 இருந்து 104.11 ஆக குறைந்துள்ளது.
அமெரிக்க பத்திர சந்தையில் இருந்து வெளியேறிய முதலீடுகள் பாதுகாப்பான இடத்தை நோக்கி பயணிக்கையில் தங்கம் மீது கவனம் குவிந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் தடாலாடியாக ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1945 டாலரில் இருந்து 1967 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 2வது அதிகப்படியான விலை இது.

மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 0.44 சதவீதம் உயர்வ்து 60,332.00 ரூபாய் விலையிலும், வெள்ளி விலை 0.69 சதவீதம் உயர்ந்து 72,088 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
தீபாவளிக்கு பின்பு திருமண சீசன் முக்கியமானதாக இருக்கும் வேளையில் இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் படி ரீடைல் சந்தை வர்த்தகத்தில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் உயர்ந்து 56450 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 490 ரூபாய் உயர்ந்து 61,580 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 44,160 ரூபாயாக உள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை அதிர்ச்சி அளிக்கும் வகையில் 1700 ரூபாய் உயர்ந்து 77,700 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 460 ரூபாய் உயர்ந்து 23,690 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications