ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இப்படியே போனா குண்டு மணி தங்கம் கூட வாங்க முடியாது..!

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது மட்டும் அல்லாமல் கடந்த 2 வாரங்களாக அதிகப்படியான தடுமாற்றத்தைச் சந்தித்து வருகிறது. பொது தேர்தல், உலகளாவிய பணவீக்க அச்சம், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் ஆகியவற்றின் காரணமாகப் பங்குச்சந்தை தடுமாற்றத்துடன் காணப்படுகிறது.

இதனால் சாமானிய மக்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் தங்கம் மீது அதிகம் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் தினமும் வரலாற்று உச்சத்தை எட்டும் நிலை உருவானது.

ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இப்படியே போனா குண்டு மணி தங்கம் கூட வாங்க முடியாது..!

இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலையின் போக்கைப் பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது. ஏப்ரல் மாதத்தில் 22 கேரட் தங்கம் விலை 1 கிராம் அதிகப்படியாக 6890 ரூபாயாகவும், குறைந்தபட்சமாக 6430 ரூபாய்க்கும் வர்த்தகமானது.

இதோடு ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை சுமார் 4.88 சதவீதம் உயர்ந்துள்ளது, இதுவே மார்ச் மாதத்தில் 9.08 சதவீதம் உயர்ந்தது, பிப்ரவரி மாதம் 1.11 சதவீதம் சரிந்தது. இந்த போக்கு தொடர்ந்தால் தங்கத்தில் பெரும் லாபத்தைப் பார்க்க முடியும்.

இதேபோல் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் தங்கம் மீதான முதலீடு என்பது அனைத்து தரப்பு முதலீட்டாளர்களுக்கும் முக்கியமானதாக மாறியுள்ளது. பல பிரபல முதலீட்டு நிறுவனங்களும் கூட தங்கத்தில் முதலீடு செய்தும், மக்களைச் செய்யவும் ஊக்கப்படுத்தத் துவங்கியுள்ளது.

தங்கம் விலை உச்சம் அடையும் போதெல்லாம் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற தங்க இருப்பு அதிகம் கொண்ட நாடுகள் தங்கத்தை விற்று பணமாக்கும். இப்போது தங்கம் விலை தடாலடியாகவும் குறையும், ஆனால் பணவீக்க அச்சத்திற்கு மத்தியில் இது நடக்க வாய்ப்புகள் குறைவு.

எனவே உஷாராக முடிவு எடுத்தால் அடுத்த 5 வருடத்தில் தங்கம் மீதான முதலீட்டில் அதிகப்படியான லாபத்தை அள்ள முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. இதேபோல் தங்கம் எப்போது நீண்ட கால முதலீடு என்பத மறந்துவிடாதீர்கள்.

சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2337.91 டாலராக இருந்தது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.02 சதவீதம் சரிந்து 71,486.00 ரூபாயாக உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 67,700 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 72,760 ரூபாயாக உள்ளது. மேலும் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 54,160 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 87,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 24,480 ரூபாயாக உள்ளது.

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றின் விலை ஒவ்வொரு நகரங்களுக்கு மத்தியில் மாறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம், மதுரை, ஆகிய 4 முக்கிய நகரங்களில் நிர்ணயம் செய்யப்படும் தங்கம் விலையை வைத்து தான் பிற மாவட்டங்களில் இருக்கும் நகைக்கடைகள் தங்கம் விலையை நிர்ணயம் செய்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+