இந்திய மிடில் கிளாஸ் மக்களின் முக்கிய முதலீடாக இருக்கும் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமையை தொடர்ந்து சனிக்கிழமையும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தற்போது திடீரென உயர என்ன காரணம்..? ஏற்கனவே கூறப்பட்டது போல் இந்தியாவில் தங்கம் விலை மாற்றம் என்பது முற்றிலும் சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப நடப்பவை. இதோடு சர்வதேச தங்க வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தை முதலீடுகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த சூழ்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் PMI குறியீடு வளர்ச்சிப் பாதையில் இருப்பதால் அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதம் குறைப்பது ஒத்திவைக்கும் என கணிப்புகள் வெளியானது. ஆனால் இதைத் தவிடு பொடியாக்கும் விதமாக அமெரிக்காவின் தனிநபர் நுகர்வோர் செலவு குறியீட்டின் (PCE) முடிவுகள் வெளியாகியுள்ளது.
மே மாத்தில் அமெரிக்காவின் தனிநபர் நுகர்வோர் செலவு குறியீடு (PCE) 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கோர் PCE அளவும் 2.8 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் விரைவில் அந்நாட்டின் பணவீக்க இலக்கான 2.0 சதவீதத்தை எட்டி வட்டி விகிதம் குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் கூறியிருப்பது போல் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை அதிகரிக்கும். இந்த வகையில் தற்போது வட்டி குறைப்பிற்கான வாய்ப்புகள் அதிகரித்ததும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வர்த்தக விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை அமெரிக்க வர்த்தக சந்தை முடியும் நேரத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2326 டாலரில் முடிந்தது. ஆனால் நேற்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை 2338 டாலர் வரையில் முடிந்துள்ளது.
இதன் வாயிலாக எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 71,585 ரூபாய் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் முடிந்துள்ளது. ஆனால் வெள்ளி விலை 0.02 சதவீதம் மட்டுமே சரிந்து 87,151.00 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 190 ரூபாய் உயர்ந்து 66,850 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 210 ரூபாய் உயர்ந்து 72,930 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 152 ரூபாய் உயர்ந்து 53,480 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிலோ 94,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 40 ரூபாய் குறைந்து 26,610 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,685 ரூபாய், மும்பை - 6,625 ரூபாய், டெல்லி - 6,640 ரூபாய், கொல்கத்தா - 6,625 ரூபாய், பெங்களூர் - 6,625 ரூபாய், ஹைதராபாத் - 6,625 ரூபாய், கேரளா - 6,625 ரூபாய், புனே - 6,625 ரூபாய், பரோடா - 6,630 ரூபாய், அகமதாபாத் - 6,630 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,640 ரூபாய், லக்னோ - 6,640 ரூபாய், கோயம்புத்தூர் - 6,685 ரூபாய், மதுரை - 6,685 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,293 ரூபாய், மும்பை - 7,228 ரூபாய், டெல்லி - 7,242 ரூபாய், கொல்கத்தா - 7,228 ரூபாய், பெங்களூர் - 7,228 ரூபாய், ஹைதராபாத் - 7,228 ரூபாய், கேரளா - 7,228 ரூபாய், புனே - 7,228 ரூபாய், பரோடா - 7,232 ரூபாய், அகமதாபாத் - 7,232 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,242 ரூபாய், லக்னோ - 7,242 ரூபாய், கோயம்புத்தூர் - 7,293 ரூபாய், மதுரை - 7,293 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53480 ரூபாய், மும்பை - 53000 ரூபாய், டெல்லி - 53120 ரூபாய், கொல்கத்தா - 53000 ரூபாய், பெங்களூர் - 53000 ரூபாய், ஹைதராபாத் - 53000 ரூபாய், கேரளா - 53000 ரூபாய், புனே - 53000 ரூபாய், பரோடா - 53040 ரூபாய், அகமதாபாத் - 53040 ரூபாய், ஜெய்ப்பூர் - 53120 ரூபாய், லக்னோ - 53120 ரூபாய், கோயம்புத்தூர் - 53480 ரூபாய், மதுரை - 53480 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,610 ரூபாய், மும்பை - 26,610 ரூபாய், டெல்லி - 26,610 ரூபாய், கொல்கத்தா - 26,610 ரூபாய், பெங்களூர் - 26,610 ரூபாய், ஹைதராபாத் - 26,610 ரூபாய், கேரளா - 26,610 ரூபாய், அகமதாபாத் - 26,610 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,610 ரூபாய், லக்னோ - 26,610 ரூபாய், கோயம்புத்தூர் - 26,610 ரூபாய், மதுரை - 26,610 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 94500 ரூபாய், மும்பை - 90000 ரூபாய், டெல்லி - 90000 ரூபாய், கொல்கத்தா - 90000 ரூபாய், பெங்களூர் - 90500 ரூபாய், ஹைதராபாத் - 94500 ரூபாய், கேரளா - 94500 ரூபாய், புனே - 90000 ரூபாய், பரோடா - 90000 ரூபாய், அகமதாபாத் - 90000 ரூபாய், ஜெய்ப்பூர் - 90000 ரூபாய், லக்னோ - 90000 ரூபாய், கோயம்புத்தூர் - 94500 ரூபாய், மதுரை - 94500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 27.10 - 5,992 ரூபாய்
குவைத் - KWD 22.10 - 6,005 ரூபாய்
மலேசியா - MYR 346 - 6,115 ரூபாய்
ஓமன் - OMR 27.80 - 6,019 ரூபாய்
கத்தார் - QAR 266 - 6,082 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 267 - 5,933 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 98.50 - 6,055 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 260.75 - 5,918 ரூபாய்
அமெரிக்கா - USD 71 - 5,919 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 260.75 - 5,918 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 260.75 - 5,918 ரூபாய்
துபாய் (UAE) - AED 260.75 - 5,918 ரூபாய்
புஜைரா (UAE) - AED 260.75 - 5,918 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 260.75 - 5,918 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 260.75 - 5,918 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 266 - 6,082 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 27.80 - 6,019 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 267 - 5,933 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.80 - 6,368 ரூபாய்
குவைத் - KWD 23.40 - 6,359 ரூபாய்
மலேசியா - MYR 363 - 6,415 ரூபாய்
ஓமன் - OMR 29.60 - 6,409 ரூபாய்
கத்தார் - QAR 283.50 - 6,482 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 288 - 6,399 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.30 - 6,658 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 281.75 - 6,394 ரூபாய்
அமெரிக்கா - USD 75 - 6,252 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 281.75 - 6,394 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 281.75 - 6,394 ரூபாய்
துபாய் (UAE) - AED 281.75 - 6,394 ரூபாய்
புஜைரா (UAE) - AED 281.75 - 6,394 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 281.75 - 6,394 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 281.75 - 6,394 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 283.50 - 6,482 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29.60 - 6,409 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 288 - 6,399 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?



Click it and Unblock the Notifications