தங்கம் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று கணிசமான உயர்வை மட்டுமே பதிவு செய்துள்ளது. இன்று தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது, இதன் மூலம் தங்கம் வாங்குபவர்கள் அடுத்த சில நாட்களில் தங்கம் வாங்க கடைக்கு போகலாம்.
அமெரிக்காவின் ஜிடிபி தரவுகளும், பெடரல் வங்கியின் முடிவுகள் குறித்து அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்த வேளையில் அமெரிக்காவின் முக்கிய பிராந்திய வங்கியான First Republic Bank வாடிக்கையாளர் டெபாசிட் தொகையில் 176 பில்லியன் டாலரில் இருந்து 104 பில்லியன் டாலராக குறைத்துள்ளது.

இதேபோல் the commercial bank தனது வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுக்க வெளி சந்தை நிதி ஆதாரத்தை நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதால் இவ்வங்கியின் லாபம் பாதிக்கும். இது அமெரிக்கா வங்கி துறையை பாதிக்கும் முக்கிய பிரச்சனையாக இருந்தாலும் முதலீட்டாளர்கள் இதை கண்டுக்கொள்ளவில்லை.
இதன் வாயிலாக அமெரிக்க முதலீட்டாளர்கள் நேற்றைய வர்த்தகத்தில் S&P500 futures-ல் அதிகப்படியான முதலீடு செய்தனர், ஆசிய சந்தை வர்த்தகத்திலும் 500-US பங்குகளும் அதிகப்படியான முதலீட்டை பெற்றது. இது மட்டுமா அமெரிக்க அரசின் 10 வருட அரசு பத்திரங்களின் லாபம் மீண்டும் 3.41 சதவீதத்திற்கு வந்தது.

இதனால் தங்கம் மீதான முதலீடுகள் வெளியேறி பங்குச்சந்தையிலும், பத்திர சந்தையிலும் குவிந்துள்ள காரணத்தால் தங்கம் விலை இன்று கணிசமாக சரிந்துள்ளது. மேலும் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் வேளையில் தங்கம் விலை தொடர்ந்து சரிய வாய்ப்பு உள்ளது.
இன்றைய ரீடைல் சந்தையில் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது, இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் விலை 80 ரூபாய் உயர்ந்து 45,120 ரூபாயாக உள்ளது. மேலும் 22 கேரட் தங்கம் விலை 10 கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து 61,530 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 80,200 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications