இந்தியாவைப் போல் வேறு எந்த நாட்டிலும் தங்கத்தை இவ்வளவு ஆர்வமாக வாங்கமாட்டார்கள், சீனாவில் மிகப்பெரிய ரீடைல் சந்தை இருந்தாலும் அங்குத் தங்கம் வாங்குவோர் அதிகளவில் மேல்தட்டு மக்களும், அப்பர் மிடில் கிளாஸ் மக்களும் தான். ஆனால் இந்தியாவில் தங்கத்தை அனைத்து தரப்பு மக்களும், அனைத்து பிரிவு மக்களும் வாங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் காரணத்தால் வருடம் முழுவதும் இந்தியத் தங்க நகை விற்பனை விழிப்புடனே உள்ளது. இதுவும் தீபாவளி, அட்சய திருதி, திருமண சீசன் துவங்கிவிட்டால் போதும் கேட்டகவே வேண்டாம், இதனால் சீன சந்தையை ஒப்பிடுகையில் இந்தியா சந்தை சற்று மாறுபட்டது.
தங்கம் அதிகம் வாங்கும் மக்களை அதிகம் கொண்டிருக்கும் இந்திய சந்தையில், 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்தது மூலம் தங்கம் விலை 10 கிராமுக்கு 3500 ரூபாய் வரையில் குறைந்து பலரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் நேற்று முதல் ரீடைல் சந்தையில் வரி குறைப்பின் தாக்கம் முழுமையாக உள்வாங்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.

இதனால் புதன்கிழமை முதல் தங்கம் விலை சர்வதேச சந்தைக்கு இணையாக உயர துவங்கியது, அதிலும் குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கி பெடரல் ரிசர்வ்-ன் 2 நாள் நாணய கொள்கை கூட்டத்தின் எதிரொலியாக அமெரிக்க சந்தை முதல் இந்திய சந்தை வரையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. பெடரல் ரிசர்வ் செப்டம்பர் மாதம் முதல் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைப்பது உறுதியாகியிருக்கும் வேளையில் தங்கம் விலை இனி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் அதாவது 28.3495 கிராம் 24 கேரட் தங்கம் விலை நேற்று மாலை வரை 2420 டாலர் அளவில் இருந்தது, பெடரல ரிசர்வ்-ன் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருந்த அமெரிக்க சந்தை முதலீட்டாளர்கள் முடிவுகள் வெளியான பின்பு தங்கம் விலை 2456 டாலர் வரையில் உயர்ந்தது. இந்த உயர்வு இன்றும் தொடர்கிறது, வியாழக்கிழமை வர்த்தகத்தில் 2447 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச சந்தைக்கு இணையாக வர்த்தகமாகும் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.66 சதவீதம் உயர்ந்து 70,118 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் பியூச்சர்ஸ் ஆர்டர்களின் விலை 0.61 சதவீதம் உயர்ந்து 84,106 ரூபாயாக உள்ளது. இந்திய ரீடைல் சந்தையில் நேற்று மற்றும் இன்றைய வர்த்தகத்தின் தாக்கம் எதிரொலித்த காரணத்தால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 64,300 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 70,150 ரூபாயாக உயர்ந்துள்ளது. மாதத்தின் முதல் நாளே உயர்வுடன் துவங்கி அக்கவுண்ட்-ஐ சிறப்பாக துவங்கியுள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து 51,440 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 70 பைசாவும், கிலோவுக்கு 700 ரூபாய் உயர்ந்து 91,700 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 190 ரூபாய் உயர்ந்து 26,150 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,430 ரூபாய், மும்பை - 6,450 ரூபாய், டெல்லி - 6,465 ரூபாய், கொல்கத்தா - 6,450 ரூபாய், பெங்களூர் - 6,450 ரூபாய், ஹைதராபாத் - 6,450 ரூபாய், கேரளா - 6,450 ரூபாய், புனே - 6,450 ரூபாய், பரோடா - 6,455 ரூபாய், அகமதாபாத் - 6,455 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,465 ரூபாய், லக்னோ - 6,465 ரூபாய், கோயம்புத்தூர் - 6,430 ரூபாய், மதுரை - 6,430 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,015 ரூபாய், மும்பை - 7,036 ரூபாய், டெல்லி - 7,051 ரூபாய், கொல்கத்தா - 7,036 ரூபாய், பெங்களூர் - 7,036 ரூபாய், ஹைதராபாத் - 7,036 ரூபாய், கேரளா - 7,036 ரூபாய், புனே - 7,036 ரூபாய், பரோடா - 7,041 ரூபாய், அகமதாபாத் - 7,041 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,051 ரூபாய், லக்னோ - 7,051 ரூபாய், கோயம்புத்தூர் - 7,015 ரூபாய், மதுரை - 7,015 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 51440 ரூபாய், மும்பை - 51600 ரூபாய், டெல்லி - 51720 ரூபாய், கொல்கத்தா - 51600 ரூபாய், பெங்களூர் - 51600 ரூபாய், ஹைதராபாத் - 51600 ரூபாய், கேரளா - 51600 ரூபாய், புனே - 51600 ரூபாய், பரோடா - 51640 ரூபாய், அகமதாபாத் - 51640 ரூபாய், ஜெய்ப்பூர் - 51720 ரூபாய், லக்னோ - 51720 ரூபாய், கோயம்புத்தூர் - 51440 ரூபாய், மதுரை - 51440 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,150 ரூபாய், மும்பை - 26,150 ரூபாய், டெல்லி - 26,150 ரூபாய், கொல்கத்தா - 26,150 ரூபாய், பெங்களூர் - 26,150 ரூபாய், ஹைதராபாத் - 26,150 ரூபாய், கேரளா - 26,150 ரூபாய், அகமதாபாத் - 26,150 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,150 ரூபாய், லக்னோ - 26,150 ரூபாய், கோயம்புத்தூர் - 26,150 ரூபாய், மதுரை - 26,150 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 91,700 ரூபாய், மும்பை - 87,100 ரூபாய், டெல்லி - 87,100 ரூபாய், கொல்கத்தா - 87,100 ரூபாய், பெங்களூர் - 85,500 ரூபாய், ஹைதராபாத் - 91,700 ரூபாய், கேரளா - 91,700 ரூபாய், புனே - 87,100 ரூபாய், பரோடா - 87,100 ரூபாய், அகமதாபாத் - 87,100 ரூபாய், ஜெய்ப்பூர் - 87,100 ரூபாய், லக்னோ - 87,100 ரூபாய், கோயம்புத்தூர் - 91,700 ரூபாய், மதுரை - 91,700 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,263 ரூபாய்
குவைத் - KWD 22 - 6,101 ரூபாய்
மலேசியா - MYR 353 - 6,422 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,426 ரூபாய்
கத்தார் - QAR 276 - 6,339 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 278 - 6,203 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 102 - 6,351 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 274 - 6,246 ரூபாய்
அமெரிக்கா - USD 74 - 6,194 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 274 - 6,246 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 274 - 6,246 ரூபாய்
துபாய் (UAE) - AED 274 - 6,246 ரூபாய்
புஜைரா (UAE) - AED 274 - 6,246 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 274 - 6,246 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 274 - 6,246 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 276 - 6,339 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,426 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 278 - 6,203 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,663 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,591 ரூபாய்
மலேசியா - MYR 368 - 6,695 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,774 ரூபாய்
கத்தார் - QAR 294 - 6,764 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 299 - 6,672 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 112 - 6,982 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 296 - 6,747 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,571 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 296 - 6,747 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 296 - 6,747 ரூபாய்
துபாய் (UAE) - AED 296 - 6,747 ரூபாய்
புஜைரா (UAE) - AED 296 - 6,747 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 296 - 6,747 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 296 - 6,747 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 294 - 6,764 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,774 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 299 - 6,672 ரூபாய்
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!



Click it and Unblock the Notifications