தங்கம் விலை சர்வதேச சந்தையிலும், எம்சிஎக்ஸ் சந்தையிலும் தொடர்ந்து உயர்வுடன் காணப்பட்டாலும் ரீடைல் சந்தையில் இந்த விலை உயர்வு எதிரொலிக்கவில்லை. காரணம் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவு, இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டே விற்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இப்படியிருக்கையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் டாலர் மதிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில் சர்வதேசச் சந்தையில் பயன்படுத்தும் முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலர் மதிப்பீட்டை அளவீடும் டிஎக்ஸ்ஒய் குறியீடு இன்று 0.04 சதவீதம் சரிந்து 104.22 ஆக குறைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் பதிவான தங்கம் விலை உயர்வு இந்தியச் சந்தையில் எதிரொலிக்கவில்லை. டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவும், தங்கம் விலை உயர்வும் சமன் செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை நேற்றை விலையிலேயே இன்றும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேவேளையில் 2025ஆம் ஆண்டில் தங்கம் விலையில் பதிவான உயர்வு நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
2025ஆம் ஆண்டில் மட்டும் இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை கிராமுக்கு 1360 ரூபாய் அதிகரித்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரையிலான 90 நாளில் 22 கேரட் தங்கம் விலை 19.02 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த 3 மாத காலத்தில் எந்த முதலீட்டுப் பிரிவும் இத்தகைய லாபத்தைக் கொடுக்கவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் 85,100 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 92,840 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு பவுன் தங்கம் விலை 68,080 ரூபாயாக உள்ளது.
இதை தொடர்ந்து வெள்ளி விலை ஒரு கிலோ 1,14,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 20 ரூபாய் மட்டும் உயர்ந்து 27,250 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications